சென்னை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட கனிமொழி எம்பி, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து, தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கு இந்திய எம்பிக்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது. அதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் ஒரு குழுவினர் ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். திமுக மகளிர் அணி: இந்நிலையில் கனிமொழி எம்பி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு, ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் திமுக…
Author: admin
மும்பை: இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எப் மீண்டும் பெற்றுள்ளது. கடந்த 2024 அக்டோபர் 29-ம் அன்று நடைபெற்ற வர்த்தகத்தில் எம்ஆர்எப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றது. ஒரே அமர்வில் வியக்க வைக்கும் அளவில் எல்சிட் பங்கின் விலை 66,92,535 சதவீதம் உயர்ந்து ரூ.2,36,250 ஆனது. பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு நிறுவன பங்கின் விலை வெறும் ரூ.3.53-லிருந்து ஒரே வர்த்தக நாளில் ரூ.2,36,250-ஆக அதிகரித்தது அதுவே முதல்முறை. இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் எம்ஆர்எப் பங்கின் விலை ரூ.1,37,834-ல் நிலைபெற்றது. இது, எல்சிட் இன்வெஸ்ட்மென்டின் பங்கு இறுதியில் நிலைபெற்ற விலையான ரூ.1,29,300-ஐ காட்டிலும் அதிகம். கடந்த ஆறு மாதங்களில் குறைவான செயல்திறன் இருந்தபோதிலும், எம்ஆர்எப் பங்குகள் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த…
வழிநடத்த ஒரு “சரியான” வழி இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிறுவனர்கள் உண்மையை அறிவார்கள், சிறந்த தலைமை நெகிழ்வானது. உலகின் மிக வெற்றிகரமான தலைவர்கள் அணி, குறிக்கோள் அல்லது சூழ்நிலையின் அடிப்படையில் வெவ்வேறு பாணிகளைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஒரு தொடக்கத்தை இயக்கினாலும் அல்லது ஒரு திட்டத்தை வழிநடத்தினாலும், உங்கள் தலைமைத்துவ பாணியை அறிந்தால் (அதை எப்போது மாற்ற வேண்டும்) ஒரு வல்லரசாகும். இந்த கதையில், எலோன் மஸ்க், ஓப்ரா வின்ஃப்ரே, மற்றும் இந்திரா நூய் போன்ற சின்னங்கள் பயன்படுத்தும் 9 தலைமைத்துவ பாணிகளை நாங்கள் உடைக்கிறோம், மேலும் செயல்திறன், புதுமை மற்றும் குழு வெற்றியை இயக்க ஒவ்வொன்றையும் எப்போது பயன்படுத்த வேண்டும்.
புதுடெல்லி: இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளன. ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகளோ ஜேஇஎம் அமைப்போ இந்த தகவலை இதுவரை உறுதி செய்யவில்லை. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மே 7-ம் தேதி துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில் பஹவல்பூரில் இருந்த ஜெஇஎம்…
புதுடெல்லி: இந்தியா நீரோட்டத்தை கட்டுப்படுத்தியதன் காரணமாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. பாகிஸ்தான் விவசாயிகளின் பயிர் விதைப்பு பணிகளில் இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் இரண்டு முக்கிய அணைகளாக ஜீலம் நதியின் குறுக்கே உள்ள மங்களா மற்றும் சிந்து நதியின் குறுக்கே உள்ள தர்பேலா ஆகியவை உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரின் அளவு வேகமாக குறைந்து அணைகள் வறண்டு வருகின்றன. இதற்கு, பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக செனாப் நீர் வரத்தை கட்டுப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கை முக்கிய காரணமானது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாதது மே-செப்டம்பர் மாதங்களில் கோடை விதைப்பு பணிகளுக்கு நீர் கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். அத்துடன் இந்த மாதம் காரீப் பருவத்தின் ஆரம்ப விதைப்பு பணிகள் மேலும் மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த…
சென்னை: கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது என சீமான், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என்று மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றமும், கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இவ்விவகாரத்தில் மன்னிப்பு தான் தீர்வு என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கமல்ஹாசன் ஒரு வரலாற்று உண்மையை தான் சொல்கிறார். தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பேசி, பேசி அதிலிருந்து பிரிந்து பிறந்த மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள். இப்போதும் கூட அக்கா, அம்மா போன்ற தூய தமிழ் சொற்கள் கன்னடத்தில் இருக்கின்றன.…
செரிமான அமைப்பு ஒரு அற்புதமான, சிக்கலான கருவி. உணவு வாயிலிருந்து உணவுக்குழாய்க்கு சென்ற பிறகு, அது வயிற்றில் தொடங்குகிறது. இது வயிற்றுக்குள் நுழைந்த பிறகு சிறிய மற்றும் பெரிய குடல்கள் வழியாக செல்கிறது. பெரிய குடலில் சிறிது நேரம் செலவிட்ட பிறகு, உணவு இறுதியில் உடலை எஞ்சியிருக்கும் கழிவுகளாக விட்டுவிடுகிறது. எல்லோரும் பூப் செய்தாலும் யாரும் உண்மையில் இதைப் பற்றி பேசுவதில்லை. அனைத்து கழிப்பறை விவாதங்களையும் குறைந்தபட்சமாக வைத்திருப்பது உரையாடல்களை கண்ணியமாக வைத்திருக்கக்கூடும் என்றாலும், நாங்கள் இதைச் செய்தால் முக்கியமான சுகாதார குறிகாட்டிகளை இழந்து கொண்டிருக்கலாம். பூப் செய்ய சிறந்த நேரம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், உங்களை நீங்களே விடுவிப்பதற்கான நேரம் கூட உங்கள் ஆரோக்கியத்தை அடையாளமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.பூப்புக்கு ஏற்ற நேரம்பிரம்மா முஹுர்தா அதிகாலை வரை (அதிகாலை 4 மணி வரை)ஆயுர்வேதத்தின்படி, குடல் கழிவுகளை அகற்றுவதற்கான சிறந்த நேரம் பிரம்மா முஹுர்தாவின்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவியதாக காவலர் உட்பட 3 அரசு ஊழியர்களை துணைநிலை ஆளுநர் நேற்று பணி நீக்கம் செய்தார். காஷ்மீர் துணைநிலை ஆளுநராக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற மனோஜ் சின்ஹா, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 75-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை அரசியல் சாசனத்தின் 311 (2)(சி)-வது பிரிவின் கீழ் பணி நீக்கம் செய்துள்ளார். அந்த வகையில், காவலர் மாலிக் இஷ்பக் நசீர், பள்ளி ஆசிரியர் அஜாஸ் அகமது மற்றும் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை பொறியாளர் வாசீம் அகமது கான் ஆகிய 3 பேர் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல்-முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்த நிலையில், மனோஜ் சின்ஹா அவர்களை பணி நீக்கம் செய்துள்ளார். காஷ்மீரின்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அன்றைய தினம் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர் சண்முகம் பேசுகிறார். யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறார்கள்? டிச.24-ம் தேதி 2 காவல் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஃப்ஐஆர் வேண்டாம், உன் வாழ்க்கை கெட்டுவிடும் என பேசியிருக்கிறார்கள். எனவே, கோட்டூர் சண்முகம், இவரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் அண்ணாமலை…
புதுடெல்லி: நாடு முழுவதும் ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் விமான போக்குவரத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியா உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் உள்ள பல்வேறு கோள்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இனிமேல் பூமியில் உள்ள நகரங்களுக்கு மட்டுமல்ல, பூமியில் இருந்து பல்வேறு கோள்களுக்கும் பயணம் மேற்கொள்ளப்படும். இதற்கு…
