Author: admin

சென்னை: காலாவதியான, பயன்படுத்தப்படாத மருந்துகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) வெளியிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் மருத்துவர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தரக் குறைபாட்டுக்காக திரும்பப் பெறப்பட்ட மருந்துகள், முறையாக பேக்கிங் செய்யப்படாத மருந்துகள், பயன்படுத்தப்படாத மருந்துகள், காலாவதியான மருந்துகள் என தேவைப்படாமல் இருக்கும் மாத்திரைகள், மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது அவசியம் ஆகும். இல்லையென்றால், அந்த மருந்துகள் மீண்டும் விதிகளுக்கு புறம்பாக விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. கழிவாக குடிநீர் ஆதாரங்கள், நிலப்பகுதிகள், வனப் பகுதிகளில் கொட்டப்பட்டால் அவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் அல்லது விழிப்புணர்வு இல்லாதவர்களிடம் அந்த மருந்துகள் கிடைக்கும்போது அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இவை…

Read More

சென்னை: பிரபல பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. என்ஆர்இ கணக்கு எனப்படும் இது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வருமானத்தை வசதியாக நிர்வகிக்கவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படும் ஒரு சேமிப்புக் கணக்கு. இந்த பிரத்யேக சேமிப்பு கணக்கு வகைகளையும், ப்ரீமியம் டெபிட் கார்டுகளையும் இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களை இவ்வங்கியின் செயலாக்க இயக்குநர்கள் மற்றும் முதுநிலை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தேவைகளையும், மாறிவரும் நிதிசார் வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் வங்கியின் இன்ட் டி எலைட், இன்ட் ப்ரீமியம், இன்ட் ப்ளஸ் (IND D’Elite, IND Premium, IND Plus) ஆகிய உயர் அடுக்கு…

Read More

கொய்யா பியூட்டி என்று பிரபலமாக அறியப்பட்ட சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர் கொய்யா ஷுயிஷுய், 24 வயதில் காலமானார். ஒப்பனை தயாரிப்புகளை ருசித்துக்கொள்வதை பெரும்பாலும் உள்ளடக்கிய வழக்கத்திற்கு மாறான அழகு உள்ளடக்கத்திற்காக அறியப்பட்ட சுஷுய் ஆன்லைனில் ஒரு விசுவாசமான பின்தொடர்பை உருவாக்கியுள்ளார். மே 24, 2025 அன்று அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் பகிரப்பட்ட அறிக்கை மூலம் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது, இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியையும் துக்கமும் ஏற்பட்டனர்.கொய்யா ஷுயிஷுய் கடந்து சென்றபின் இதயப்பூர்வமான அறிக்கை பகிரப்பட்டதுஅவரது மரணத்தின் செய்தி சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு அஞ்சலி வழியாக வந்தது எங்களுக்கு வாராந்திர.”எங்களுக்கு பிடித்த அழகு மற்றும் உணவு ஒளிபரப்பு புதையல் பெண் கொய்யா ஷுயிஷுய், மே 24, 2025 அன்று தனது அழகு உபகரணங்களை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொண்டார், மேலும் ஒரு புதிய சேனலைத் திறக்க முடிவில்லாத பசியுடனும் புன்னகையுடனும் பரலோகத்திற்கு பறந்தார் என்று நான்…

Read More

சாட்டன்: வடக்கு சிக்கிமில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாட்டன் பகுதியில் இருந்து நேற்று 27 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 7 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர் விமானம் மூலமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். சிக்கிமில் மோசமான வானிலை தொடர்ந்து நிலவும் நிலையில், அவசரகால மீட்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான வான்வழி வெளியேற்றம் இதுவாகும். சாட்டனில் இருந்து பாக்யோங் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்கள் வெற்றிகரமாக 34 பேரை விமானம் மூலம் மீட்டுச் சென்றன. மீட்கப்பட்டவர்களில் ஏழு ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 27 சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். இதில் காயமடைந்தவர்கள் சிலரும் விமானத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50…

Read More

சென்னை: இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் தற்போது சித்தாந்த ரீதியாக பல துன்பங்களை வேதனைகளை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக இந்துக்கள் சொல்லிக்கொள்ள முடியாத துயரங்களை இந்த திராவிட மாடல் அரசால் பெறுகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் மாநாடாக அமைய வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்து முன்னணி பேரியக்கம் அனைத்துக் கட்சி தலைவர்களையும் முறைப்படி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இந்துக்களுக்கு ஆபத்து வரும் சூழலில் கட்சி பாகுபாடுகளை கலைந்து நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒற்றுமை ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது…

Read More

சென்னை: தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்கா – சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 4) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72.720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி…

Read More

தேசிய சுகாதார மிஷன் (என்.எச்.எம்) படி, கொழுப்பு கல்லீரல் ஆல்கஹால் பயன்பாட்டுடன் தொடர்பில்லாத கல்லீரல் உயிரணுக்களில் அதிகப்படியான கொழுப்பு உருவாகிறது. இது பெரும்பாலும் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாக நிகழ்கிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கல்லீரல் அழற்சி, சேதம் மற்றும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.கொழுப்பு கல்லீரல் நோய், குறிப்பாக ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD), மக்கள்தொகையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலக மக்கள்தொகையில் சுமார் 25-30% NAFLD பாதிக்கிறது. இந்தியாவில் இது இன்னும் அதிகமாக உள்ளது, பொது மக்கள் தொகையில் சுமார் 30-40% பாதிக்கப்படலாம் என்ற மதிப்பீட்டில்.

Read More

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இனி அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பிரியாணி தரணும்’ … கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் மழலை மொழியில் சிறுவன் ஒருவன், ‘பிரியாணி தரணும்’ எனச் சொல்வார். அதற்கு அவரது அம்மா, ‘எங்கே’ எனக் கேட்பர். “அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் தரணும்” என சிறுவன் பதில் தந்திருப்பார். அதை வீடியோவாக பதிவு செய்த அவரது அம்மா சமூக வலைதளத்தில் பதிவிட, அது பலரது கவனத்தைப் பெற்றது. வைரல் வீடியோ அரசாங்கத்தின் பார்வை வரைச் சென்றது. அமைச்சர் உறுதி: “அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து சிறுவன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். உணவை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும்” என கேரள மாநில…

Read More

சென்னை: அரசு மேல்​நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு (கணினி பயிற்​றுநர்) புதிய கல்​வித் தகு​தியை நிர்​ண​யித்து பள்​ளிக்​கல்​வித் துறை அரசணை வெளி​யிட்​டுள்​ளது. இது தொடர்​பாக பள்​ளிக்கல்​விதுறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேல்​நிலைக்​கல்​வி​யில் கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பதவி​யும், முதுகலைப் பட்​ட​தாரி ஆசிரியர் பதவி​யும் ஒன்​று​போல் இருப்​ப​தால், கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) பதவி தமிழ்​நாடு மேல்​நிலைக்​கல்வி பணி சிறப்பு விதி​யுடன் இணைக்​கப்​படு​கிறது. இப்​ப​தவிக்​கான கல்​வித்​தகுதி பி்ன்​வரு​மாறு நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கணினி பயிற்​றுநர் பதவிக்கு எம்​.எஸ்​சி. கம்ப்​யூட்​டர் சயின்ஸ் பட்​டப் படிப்​பும், பி.எட். பட்​ட​மும் பெற்​றிருக்க வேண்​டும். அல்​லது எம்​.எஸ்​சி. படிப்​புடன் ஒருங்​கிணைந்த பி.எஸ்​சி. பி.எட். அல்​லது பி.ஏ., பி.எட். பட்​டம் பெற்​றிருக்க வேண்​டும். மேலும், இளங்​கலை பட்​ட​மும், முதுகலை படிப்​பும் ஒரே பாடத்​தில் பெறப்​பட்​ட​தாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அந்த அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது. பழைய அரசாணை​யின்​படி, கம்ப்​யூட்​டர் சயின்​ஸ், கம்ப்​யூட்​டர் இன்​ஜினியரிங், இன்ஃபர்​மேஷன் டெக்​னாலஜி, சாஃப்ட்​வேர் டெக்​னாலஜி பாடங்​களில்…

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை மூலம் குற்றவாளி ஞானசேகரின் செல்போன் அழைப்பு பட்டியலை பெற்று, யார் அந்த ‘சார்’ என்பதை கண்டறிந்து அதிமுக, பாஜக கட்சிகளே வெளியிட வேண்டியது தானே என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகும்கூட யார் அந்த ‘சார்’ என தொடர்ந்து அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பதிவெல்லாம் மக்களை ஏமாற்றும் செயலே. உண்மையிலேயே இவ்வழக்கில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சந்தேகம் இருந்தால், தொலைத்தொடர்பு துறையை அணுகி, குற்றவாளி ஞானசேகரனுக்கு வந்த செல்போன் அழைப்பு பட்டியலை பெற்று அதை வெளியிடலாமே. அந்த பட்டியலை பெற்று வெளியிட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும் நயினார் நாகேந்திரனுக்கும்…

Read More