புதுடெல்லி: ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்களை தெஹ்ரான் போலீஸார் கண்டுபிடித்து விடுவித்ததாக ஈரானில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்று ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.\ Three missing Indian citizens freed by Tehran police Local media in Iran say police have found and released three Indian men who had gone missing in Iran. — Iran in India (@Iran_in_India) June 3, 2025 முன்னதாக, மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக மே 1 அன்று தெஹ்ரான் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் மே 1 அன்று ஈரானுக்கு வந்திருந்தனர். ஒரு உள்ளூர் பயண நிறுவனம் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில்…
Author: admin
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நாளை (ஜூன் 5) திரைக்கு வர உள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணைதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை உலகம் முழுவதும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணைதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம் இண்டர்நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு அப்போது ராஜ்கமல் நிறுவன தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ”‘தக் லைஃப்’ திரைப்படம் 3500…
புதுடெல்லி: லடாக்கில் அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது முதல் லடாக் மக்கள் தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்துக்கு அரசியல்சாசன பாதுகாப்பு கோரி போராடி வந்தனர். இந்நிலையில் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய இடஒதுக்கீடு, வசிப்பிட விதிகள் திருத்தம் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு தொர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி லடாக்கில் யூனியன் பிரதேச வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. லடாக்கில் 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது 7 ஆண்டுகள் படித்து 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள். மேலும் லடாக்கில் 10…
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர் மீது காட்டப்படும் எதிர்மறை மனப்பான்மை, கற்பிதங்கள், தவறான கருத்துகள் ஆகியவை ‘சமூகக் களங்கம்’ (social stigma) எனப்படுகிறது. இது பாகு பாட்டுக்கு வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்டவர் உதவி நாடுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப் பட்டவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்த வர்களும் பாதிக்கப்படுகின்றனர். உரையாடல் வேண்டும்: இந்தக் காலத்தில் கல்வியில், விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தாண்டி சமூக ஊடகங்களில், டிஜிட்டல் தளங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதில் ஒருவர் சிறந்து விளங்க வேண்டு மென்கிற கட்டாயத்துக்கு இளம் வயதினர் தள்ளப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி வயதைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். தன் வயதைச் சேர்ந்த ஒருவரால் முடியும்போது, நம்மால் ஏன் முடியவில்லை என்கிற கேள்வி ஒரு மாணவருக்கு எழலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியமே அதிகம். ஒருவேளை தன்னுடைய தயக்கத்தை விலக்கி…
நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என அமெரிக்காவில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனுக்கு வந்துள்ள நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் கருத்தை எடுத்துரைக்க நியூயார்க் வந்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் ஆற்றிய உரையில், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை. மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே தகராறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாமல் இருக்க…
சென்னை: மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் விவசாயிகளும், மரங்களை குத்தகைக்கு எடுத்தவர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்து மாம்பழம் என்று போற்றப்படும் மாம்பழ வகைகள் இந்த மாவட்டத்தில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்கள் விளைச்சல்…
பிடிப்புகள், வீக்கம் அல்லது வலி போன்ற சீரான வயிற்று அச om கரியம் பெருங்குடலைத் தடுக்கும் கட்டியைக் குறிக்கலாம். ஒரு சில நாட்களைத் தாண்டி வலி நீடிக்கும், குறிப்பாக கடுமையான அல்லது மோசமடைந்தால், மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில், இந்த அறிகுறி எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி போன்ற குறைவான கடுமையான சிக்கல்களுக்கு தவறாக கருதப்படுகிறது.
குண்டூர்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு குண்டூர் மாவட்டம், தெனாலியில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கருப்புக்கொடி காட்டப்பட்டு ‘கோ பேக் ஜெகன்’ என முழக்கம் எழுப்பப்பட்டது. குண்டூர் மாவட்டம், தெனாலியில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அவரது வருகைக்கு தலித் சங்கங்கள், மக்கள் இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெனாலி மார்க்கெட் வளாகம் கூட்டு சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தலித் சமூகத்தை சேர்ந்த கிரண் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த ஜெகன், அவரது உடலை காண்பதற்கு கூட வரவில்லை என தலித் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். ஐதா நகர் கூட்டு சாலையில் தலித் சங்கத்தினர் ஜெகனின் காரை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோ பேக்: ‘ஜெகன் கோ பேக்’ என கோஷமிட்டு, கருப்புக்கொடி காட்டி…
அறிவியலும் கலைத்திறனும் இணைந்து பரிமளிக்கும் துறை ‘Architecture’ எனப்படும் கட்டிட வடிவமைப்பு. கலை ரசனையும் ஓவியத் திறமையும் கூடவே தொழில்நுட்ப அறிவும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமை களைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டிடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டு கட்டு மான வடிவமைப்பைத் திட்டமிட வேண்டியது கட்டிட வடிவமைப்பாளர்களின் வேலை. புராதனக் கட்டிடங்களைப் பாதுகாப்பது, ‘கிரீன் பில்டிங்’ என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்றவையும் கட்டிட வடிவமைப்பாளரின் பணிகளில் அடங்கும். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகத் திகழும் கிண்டி வளாகத்தில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஆர்கி டெக்சர் அண்ட் பிளானிங்’ கல்வி நிலையத்தில் பி.ஆர்க் படிக்கலாம். இது தவிர, பி.ஆர்க். படிக்க நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட…
ஆர்சிபியின் 18 ஆண்டு கால கோப்பைத் தவம் வெற்றியுடன் நிறைவேறியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது ஒரு பெரிய கறையாக இருந்து வந்தது நேற்று நீக்கப்பட்டது. ஆர்சிபி வெற்றியில் பலரும் பங்களித்திருக்கலாம். ஆனால் கிருணல் பாண்டியாவின் பங்களிப்பு அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அவர்தான் ‘அன் சங் ஹீரோ’ என்பார்களே அந்த எதிர்மறைப் பெருமையில் மிளிர்கிறார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் 2025 பவுலர்கள் பட்டியலில் 10-ம் இடத்தில் திகழ்கிறார் கிருணல். டாப் 10 பவுலர்களில் ஒருவராகத் திகழும் இவர், இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை என்பது இப்போதைய அணித் தேர்வுக்குழுவின் விசித்திரங்களில் மகத்தான விசித்திரமே. டாப் 10-ல் இருப்பதோடு கிருணல் பாண்டியா சிக்கன விகிதத்திலும் 7-ம் இடத்தில் இருக்கிறார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தாக்கம் ஏற்படுத்தும் வீரர்கள் பட்டியலில் 6-ம் இடத்தில் இருக்கிறார். இதோடு பேட்டிங்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக எடுத்த…
