கோவை: உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா இன்று (ஜூன் 4) உயிரிழந்தார். மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி. இவரது மகள் கருணாம்பிகா பிரபல கட்டிட கலை நிபுணர் மற்றும் கல்வியாளர். ‘தி இந்தியன் பப்ளிக் பள்ளி’ குழுமத்தின் இணை நிறுவனர். இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார் பிரபல தொழிலதிபர். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாம்பிகா (54) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து உடலைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தினருடன் மொடக்குறிச்சியில் நடந்த இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர். பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி…
Author: admin
ஹினா கான் மற்றும் ராக்கி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஜூன் 4, 2025 அன்று ஒரு நெருக்கமான பதிவு செய்யப்பட்ட திருமணத்துடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். மனீஷ் மல்ஹோத்ராவின் ஓப்பல் பச்சை கைத்தறி சேலையை ஹினா அணிந்திருந்தார், இதில் தனிப்பயனாக்கப்பட்ட எம்பிராய்டரி மற்றும் குலதனம் நகைகள் இடம்பெற்றன. ராக்கி அவளை ஒரு எக்ரு குர்தா தொகுப்பில் மல்ஹோத்ராவால் பூர்த்தி செய்தார். ஜூன் 4, 2025 அன்று ஹினா கான் ஆச்சரியத்துடன் இணையத்தை எடுத்துக் கொண்டார், ஏனெனில் அவர் தனது நீண்டகால கூட்டாளியான ராக்கி ஜெய்ஸ்வாலுடன் அமைதியாக முடிச்சு கட்டினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை கவனமாகப் பாதுகாப்பதற்காக அறியப்பட்ட நடிகை தனது திருமணத் திட்டங்களை முழுவதுமாக மறைக்க முடிந்தது. இன்ஸ்டாகிராமில் நெருக்கமான விழாவின் காட்சிகளை அவர் இறுதியாகப் பகிர்ந்து கொண்டபோது, ரசிகர்கள் திகைத்துப்போனார்கள், முற்றிலும் மகிழ்ச்சியடைந்தனர்.ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் ஸ்டைலான கொண்டாட்டத்தில், ஹினாவும் ராக்கியும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட…
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 1 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 1 ஆக இருக்கும். மேலே குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, ஜூன் 16-ம் தேதி (தோராயமாக) அன்று…
திருவள்ளூர்: மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 79-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தடையை மீறி , தடுப்பு வேலியை தாண்டி சென்று ரசிகர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர்த் தூவியும் மரியாதை செலுத்தினர். மறைந்த திரைப்பட பின்னணி பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 79-வது பிறந்த தினமான இன்று (ஜூன் 4) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், அவரின் பாடல்களை ரசித்து மகிழ்ந்து கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு மரியாதை செலுத்த ரசிகர்கள் வரவேண்டாம் என அவரது மகன் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அங்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த எஸ்பிபி ரசிகர்கள் ஏராளமானோர் இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாலைகள், மலர்கள்…
குன்னூர்: குன்னூர் வெலிங்டனில் உள்ள எம்ஆர்சி ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற அக்னி வீரர்கள் 551 ராணுவ வீரர்கள் அணி வகுப்பில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் இந்திய ராணுவத்தின் பழமையான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த காலாட் படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் உள்ளது. இங்கு அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5-வது படை பிரிவு அக்னி வீரர்கள் 31 வார பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். இன்று வெலிங்டன் பேரக்ஸ் ஸ்ரீ நாகேஷ் சதுக்கத்தில் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு அணி வீரருக்கும் அவர்களது பயிற்சியின்போது புகட்டப்பட்ட ஒழுக்கம் மற்றும் தொழில்முறையின் முக்கிய பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. கர்நாடக – கேரளா ராணுவ கமாண்டிங் முதன்மை அலுவலர் மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டெர் கிருஷ்ணேந்து தாஸ், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.…
புதுடெல்லி: நிதி நெருக்கடி காரணமாக ஜாமீன் பெறவோ அல்லது சிறையில் இருந்து விடுதலை பெறவோ முடியாத ஏழை கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்தாதது கவலை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்துறை செயலாளர்கள்/சிறைத்துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் நடத்தப்பட்ட பல காணொளி மாநாடுகளின் போது, ஏழைக் கைதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழை கைதிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பலமுறை குறிப்பிட்டும் பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தகுதியான கைதிகளை அடையாளம் காணவில்லை. அவர்களுக்கு திட்டத்தின் பலனை வழங்கவில்லை. இதனால், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி…
சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தினால் சங்க கட்டிட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும். எனவே நிர்வாகிகளின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது, என்று நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு…
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் வரும் 27-ம் தேதி போராட்டம் நடத்த பொதுநல அமைப்புகள் முடிவு எடுத்துள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, கடந்த வாரம் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது. காரைக்கால் மாவட்ட மக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது. இந்நிலையில், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேரு எம்எல்ஏ தலைமையில் நடந்தது. தமிழர் களம் அழகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விசிசி நாகராஜன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ, மக்கள் மன்றம் நாராயணசாமி உட்பட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் 25-ம் தேதி டெல்லிக்கு 154 பேர் ரயில்…
இந்திய மூல தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூக தலைவர்கள் சுனித் பிரகாஷ் மற்றும் லலிதா கசான்ஜி உறுப்பினர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளனர் நியூசிலாந்து ஆர்டர் ஆஃப் மெரிட்தேசத்திற்கு விதிவிலக்கான சேவைக்கு வழங்கப்பட்ட ஒரு அரிய அங்கீகாரம். இந்த மரியாதை டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கும் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் பல தசாப்த கால முயற்சிகளை ஒப்புக்கொள்கிறது.இரட்டை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய குடிமக்கள் இருவரும் இந்த ஜோடி, தகவல் தொழில்நுட்பத்திற்கான சேவைகளுக்காக இந்த தலைப்பு வழங்கப்பட்ட முதல் உறுப்பினர்கள், இதில் 1995 முதல் சுமார் பதினைந்து பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் டிஜிட்டல் தொடர்புகளுக்கான நியூசிலாந்து மையத்தை நிறுவுவதில் அவர்களின் பணி உச்சக்கட்டத்தை அடைந்தது, இது டிஜிட்டல் நாடுகளுக்கு இடையிலான இரண்டையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.அவர்களின் ஆராய்ச்சி, உலகளாவிய மற்றும் சமூக-கலாச்சார பகுப்பாய்வைப் பயன்படுத்தி, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்து…
பெங்களூரு: ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த…
