‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மறுவெளியீட்டு தயாராகி வருவதாக ராமராஜன் தெரிவித்துள்ளார். பல்வேறு பழைய படங்கள் தற்போது மறுவெளியீட்டிலும் வெற்றியடைந்து வருகிறது. இதில் அடுத்ததாக ‘கரகாட்டக்காரன்’ இணையவுள்ளது. வரும் 15-ம் தேதி இப்படம் 36-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இப்படத்தினை மறுவெளியீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக ராமராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. இப்படத்தின் காமெடி காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே இப்போதுள்ள ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சுமார் ரூ.35 லட்சத்தில் உருவாக்கப்பட்டு திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டு சாதனை புரிந்தது. தயாரிப்பாளருக்கு பன்மடங்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது ‘கரகாட்டக்காரன்’. தற்போது இப்படத்தின் மறுவெளியீடு குறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Author: admin
மதுரை: திண்டுக்கல் அருகே டாஸ்மாக் மதுபான கடையை 2 வாரத்தில் அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தமிழகத்தில மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் தூரக்கட்டுப்பாடு தவறானது. வணிகப் பகுதிகளில் மதுக்கடை அமைந்திருந்தால் அதற்கு தூரக் கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “மதுபானக் கடை அப்பகுதி…
நெல்லை: சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார். கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் எவ்வாறு வரவேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். அதன் விவரம்: மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு சற்றுமேல் இருக்குமாறு அமைய வேண்டும். தலைமுடியை ஸ்மார்ட் கட்டிங் செய்து வரவேண்டும். அதிக முடி வைக்க கூடாது. கலர் கலரான பொட்டு வைத்து வருவது, வண்ணக் கயிறுகளை கையில் கட்டுவது, கழுத்தில் அணிவது கூடாது. சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பனியன் அணிந்து வருவதையும்,…
‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நிவின் பாலி நடித்து வருவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக யார் நடித்து வருகிறார் என்பதை ரகசியமாக வைத்திருந்தது படக்குழு. தற்போது அதில் நிவின் பாலி நடித்து வருகிறார் என்பதை க்ளிம்ஸ் வீடியோ உடன் அறிவித்துள்ளது. இதில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவின் பாலி. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் யுனிவர்சிஸ் படங்களில் இணைந்துள்ளது ‘பென்ஸ்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் மற்றும் ஜி ஸ்கோட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம், இசை உரிமையினை திங்க் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றிவிட்டன. இதனால் விரைவில் படப்பிடிப்பினை முடித்து வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமரர் அறையில் இருந்த முதியவர் உடல் மாயமானதால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புஜ்ஜிரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (64). தீராத வயிற்று வலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதியுற்று வந்த இவர், கடந்த 2-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று ராஜேந்திரன் உயிரிழந்தார். இதையடுத்து, ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்று செல்வதற்காக திருத்தணி காவல் நிலையம் அளித்த அனுமதி கடிதத்துடன் இன்று அவரது உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது, பிரேத பரிசோதனைக்கு…
சென்னை: “தவெக கட்சி கொடியில் யானையை பயன்படுத்தப்பட்டுள்ளதை போல உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அனுமதிக்குமா?” என கட்சிக் கொடி தொடர்பான வழக்கில் பகுஜன் சமாஜ் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், “தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின்…
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 4) வெற்றிப் பேரணி விழா பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் நீண்ட நெடுங்காலம் கோப்பை வெல்லாத அணியாக இருந்தது ஆர்சிபி. இருப்பினும் அந்த அணிக்கு உத்வேகமும், உற்சாகமும் கொடுத்தனர் அதன் மாறா பற்றுக் கொண்ட ரசிகர்கள். ஆர்சிபி பட்டம் வென்றதும் செவ்வாய்க்கிழமை பின்னிரவு பெங்களூரு நகரம் முழுவதும் தீபாவளி திருவிழா போல பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், வெற்றிக் கோப்பை உடன் ஆர்சிபி அணி இன்று (புதன்கிழமை) விதான் சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு திறந்தவெளி பேருந்தில் உலா வரும் என…
மதுரை: மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்குப் போட்டியாக மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ல் நடத்துகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1-ல் நடைபெற்றது. 20 ஏக்கர் பரப்பில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் பெரும்பாலானவை மத்திய பாஜக அரசுக்கு எதிரானது ஆகும். மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், உச்ச நீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்குக் கண்டனம், வஞ்சக பாஜகவையும் துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் திமுக ஆட்சி தொடர களப்பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழுவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக, பாஜகவை நேரடியாகவும், நடிகர் விஜய்யை…
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.அந்த அணி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “இன்று பிற்பகல் நமது அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் திரண்ட மக்கள் கூட்டம் தொடர்பாக நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நலமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்த துயர்மிகு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி இரங்கல் தெரிவிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். சூழல் குறித்து அறிந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தைத் திருத்தியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம். எங்கள் அனைத்து ஆதரவாளர்களையும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ்…
சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பதிவுகளில் நாம் பார்க்கின்ற பதிவுகளில் சில போலியாக உருவாக்கப்பட்டவை. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் வரவினால் ‘கண்ணால் காண்பது பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்பதற்கு உதாரணமாக பல்வேறு பதிவுகள் உள்ளன. அதில் ஒன்றாக உள்ளது இந்த கங்காரு வீடியோ பதிவு. அந்த வீடியோவை ஷீத்தல் யாதவ் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் கங்காரு ஒன்று கையில் போர்டிங் பாஸ் உடன் விமானத்தில் பயணிக்க தயாராக நிற்கிறது. இருப்பினும் விமான நிறுவன பணியாளர் அதை பயணிக்க அனுமதிக்கவில்லை என்றும். அதுகுறித்து பெண்கள் இருவர் விவாதிக்கின்றனர் என்றும் அதில் கேப்ஷனாக தெரிவிக்கப்பட்டது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 1.96 லட்சம் பேர் பார்த்திருந்தனர். சுமார் ஐந்தாயிரம் பேர் லைக் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறியும் வகையில் பிடிஐ செய்தி நிறுவனத்தின் உண்மை கண்டறியும் குழு (Fact Check) கூகுள் ரிவர்ஸ் இமேஜ்…
