Author: admin

சென்​னை: தமிழகத்​தில் ஊரக மற்​றும் நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி ஒப்​புதல் அளித்​துள்​ளார். இதன்​மூலம், மாற்​றுத் திற​னாளி பிர​தி​நி​தி​கள் விரை​வில் நியமிக்​கப்பட உள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வை​யின் பட்​ஜெட் கூட்​டம் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடை​பெற்​றது. இதில் துறை​வாரி​யான மானிய கோரிக்கை மீதான விவாதங்​கள் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்​.29-ம் வரை நடை​பெற்​றது. இந்த கால​கட்​டத்​தில், நிதி மசோ​தாக்​கள், கலைஞர் பல்​கலைக்​கழகம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களில் பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கு​வது, கடன் நிறு​வனங்​களின் வலுக்​கட்​டாய நடவடிக்​கை​களில் இருந்து பொது​மக்​களை பாது​காப்​பது உட்பட 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநர் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டன. இதில், தமிழக அரசின் 4 நிதி மசோ​தாக்​களுக்கு கடந்த மே 17-ம் தேதி ஆளுநர் ஒப்​புதல் அளித்​தார். மேலும் 14 மசோ​தாக்​கள் நிலு​வை​யில் இருந்​தன. இந்​நிலை​யில், கடந்த ஏப்​.16-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்…

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி ஜூன் 2ம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில்…

Read More

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ( ஜூன் 4-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் பகுதியில் நிரந்தர ரயில்வே வழிப்பிரிவுகளில் 26 ரயில்வே கேட்கள் உள்ளன. அதில் பணி செய்யும் கேட் பாதுகாவலர்கள் வாரத்துக்கு 72 மணி நேரம் பணி செய்யும் நிலை உள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து பிரிவில் (ரயில் நிலையத்துக்கு 1 கி.மீ அருகில் உள்ள ரயில்வே கேட்) பணி செய்பவர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணி செய்கின்றனர். இதேபோல் ரயில்வே கேட் பாதுகாவலர்களுக்கு கழிப்பிடம், தண்ணீர் வசதியும் இல்லை. அவர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலையே உறுதிப்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகளை செய்தர வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் பழைய ரயில்…

Read More

சென்னை: ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ – அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஜேஇஇ – அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை…

Read More

சென்னை: “தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற வாக்கியத்துடன், ‘அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை’ என ஆளுநர் பேசியிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விடுக்கப்படும் நேரடியான அவமதிப்பு. இது தமிழ்நாட்டின் கல்வி மரபை இருட்டடிப்பு செய்யும் இழிவான நோக்கம் கொண்ட செயலாகும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் படிப்பறிவில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் ஒரு முக்கிய மற்றும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டை, தரத்தை பொய்யான வகையில் திரிக்கும் நோக்கத்துடன் ஆளுநரின் கருத்து இருக்கிறது. மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

Read More

காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது,கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலம் அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறத் தேவையான முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்இ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. ரூ.300 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த தொழிற்சாலையில், 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காற்று பிரித்தெடுக்கும் ஆலை: இத்தாலியைச் சேர்ந்த எஸ்ஓஎல் ஸ்பிஏ…

Read More

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு ஜூன் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தேசிய தேர்வு முகமையிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்று கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அண்ணாசாலயில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூட்டரங்கில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான (இளங்கலை மருத்துவ படிப்புகள்) இடப்பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தேர்வுக்குழு செயலாளர் தேரணிராஜன், துணை இயக்குநர் கராமத் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறுவது மற்றும் தனியார் கல்லூரிகள்…

Read More

‘ஹிரி ஹர வீர மல்லு’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது கிராபிக்ஸ் காட்சிகளின் தாமதத்தால் இப்படம் வெளியாகாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் பல காட்சிகள் தொடங்கப்படவே இல்லை என்பதால், ஜூன் 12-ம் தேதி வெளியீடு சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. இந்த தாமதத்தை கணக்கில் கொண்டு, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெளியீட்டு தேதி உறுதியானவுடன் மீண்டும் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜூன் 27 அல்லது ஜூலை 4 வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த தேதியில் சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனென்றால் ‘கண்ணப்பா’ மற்றும் ‘கிங்டம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி…

Read More

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 5) முதல் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (ஜூன் 5, 6) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர…

Read More

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய‌ மஞ்சுநாத் கும்பார் (28) என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற அபினந்தன் (21) என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்:…

Read More