Author: admin

சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படும் சிறுநீரக சேதம், சிறுநீரகங்களை பாதிக்கும் சேதம் அல்லது நோய் இருக்கும்போது ஏற்படுகிறது, அவை இரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுவதற்கு காரணமாகின்றன. சிறுநீரக சேதம் ஏற்பட்டவுடன், இது பொதுவாக மாற்ற முடியாதது, இருப்பினும் மருந்துகள் உதவக்கூடும், மேலும் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கலாம். சிறுநீரக சேதத்திற்கான காரணங்கள் மாறுபட்டவை, ஆனால் நீண்டகால சிறுநீரக நோய் (சி.கே.டி), கடுமையான சிறுநீரக காயம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், சில தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஆகியவை அடங்கும். சிறுநீரக சேதம் முதலில் மிகவும் அறிகுறியற்றதாக இருந்தாலும், ஒரு அறிகுறி மிகவும் கவனிக்கத்தக்கது. அதைப் பற்றி பேசலாம் …நுரை சிறுநீர் – சிறுநீரக சேதத்தின் முதல் அடையாளம்நுரை சிறுநீர் என்றால் என்னநுரை சிறுநீர் என்றால் உங்கள் சிறுநீரில் குமிழ்கள் அல்லது நுரை உள்ளது, அது வழக்கத்தை விட நீண்ட காலம் நீடிக்கும். சில…

Read More

புதுடெல்லி: குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியிலுளள ஷாதாரா பகுதியில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா அமைந்துள்ளது. ஆனால் குருத்வாரா அமைந்துள்ள இடத்தை டெல்லி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பான வழக்கை டெல்லி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் கூறும்போது, “தற்போது ஷாதாரா பகுதியில் குருத்வாரா அமைந்துள்ள இடம் டெல்லி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் குருத்வாரா அமைவதற்கு முன்பு அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதி இருந்தது. எனவே, அந்த இடத்தை மீட்டு டெல்லி வக்பு வாரியத்துக்கு வழங்கவேண்டும்” என்றார். அப்போது நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கூறியதாவது: தற்போது அந்த இடத்தில் குருத்வாரா…

Read More

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் பஞசாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் 18 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு விளையாடி வரும் விராட் கோலி தற்போதுதான் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைகளில் வருடி உள்ளார். ஆட்டத்தின் கடைசி பந்து வீசப்பட்டதும் மைதானத்தில் விராட் கோலி உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் சிந்தியது ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. வெற்றிக்கு பின்னர் விராட் கோலி கூறியதாவது: இந்த வெற்றி அணிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு…

Read More

‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி, ‘தக் லைஃப்’ தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதிக பொருட்செலவில் படத்தைதயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக, சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதன்மூலம் திரைப்படத் தொழிலை நம்பியுள்ள திரைக் கலைஞர்களின் குடும்பமும் பாதிக்கப்படும் என்றார். அதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட தடை விதித்தும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read More

திருச்சி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அரசின் சாதனை வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான கோட்டப் பொறுப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம் திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இளைஞரணி தேசிய பொதுச்செயலாளர் ரோஹித், தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர் மாநாட்டில் 5 லட்சம் பேர் ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசம் சொல்ல உள்ளோம். அது கின்னஸ் அல்லது லிம்கா சாதனையாக அமையும். இந்த மாநாட்டில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் பங்கேற்கின்றனர். கன்னட…

Read More

பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 316-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் லோயிஸ் போய்சனுடன் மோதினார். 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லோயிஸ் போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 7-ம் நிலை வீராங்கனையான சகநாட்டைச் சேர்ந்த மேடிசன் கீஸஸுடன் மோதினார். 2 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோ கோ காஃப் 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில்…

Read More

அரியலூர்: அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசு போக்குவரத்துக் கழகம் என்றுதான் பெயர் இருந்தது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரைக் காணவில்லை என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜெயலலிதா புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தபோதே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றுதான் உள்ளது. ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன்பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின்போது மாற்றப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய செய்திபோல, சிலர் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அதிமுக…

Read More

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்புக்கான தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ரியல் லா ) என்ற பாடத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மே 30-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, நெல்லை பேட்டை காவல் நிலையத்தில், பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். அதனடிப்படையில் பேட்டை போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற, மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை செய்துள்ளார். சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 99…

Read More

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதுவரை 2.9 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், 29-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித்துறை…

Read More

சென்னை: இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவு பொருட்களை விநியோகிக்க கூடாது, பஜ்ஜி, சிக்கன் 65 போன்ற உணவுகளில் செயற்கை நிறமிகளை சேர்க்கக் கூடாது என உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. உணவு வணிகர்களின் கவனத்துக்காக 14 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகளை உணவு வணிகர்கள் பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: அனைத்து உணவு வணிகர்களும் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் டைஃபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். தண்ணீரை பகுப்பாய்வு செய்து…

Read More