Author: admin

கீவ்: கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையை தகர்த்து விட்டோம் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ என்ற ரகசிய குறியீடுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய 41 அதிநவீன போர் விமானங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் (உள்நாட்டு பாதுகாப்பு முகமை) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை, ரயில் பாதைகளை உள்ளடக்கிய மேம்பாலத்தை தகர்த்துவிட்டோம். இதற்காக 1,100 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை பயன்படுத்தினோம். இந்த தாக்குதலில் தண்ணீருக்கடியில் இருந்த பாலத்தின் தூண்கள் சேதமடைந்துள்ளன” என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய உயர் அதிகாரி கூறும்போது, “கிரைமியாவுக்கு செல்வதற்கான பாலத்தில் 3 மணி நேரத்துக்கு…

Read More

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நெஞ்சை பதற வைக்கும் துயர சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. இது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 4) வெற்றிப் பேரணி விழா பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார்…

Read More

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்று மாலை சந்தித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் கட்சியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான திருமால்வளவன் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “அரசியலைக் கடந்து ‘அய்யா’ என்ற மாபெரும் போராளியை நீண்ட நாட்களுக்கு பிறகு மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் அரசியல் கற்ற நான், நன்றி உணர்வுடன் சந்திக்க வந்துள்ளேன். அவரை சந்தித்தது, அரசியல் உள்நோக்கம் இல்லை. பாமகவில் இருந்து பிரிந்து சென்ற நாங்கள், அவருக்கு மனமகிழ்வை தர வேண்டும் என்பதற் காக சந்திக்க வந்துள்ளேன். பெரியாருக்கு பிறகு சமூக நீதிக்காகபோராடுபவர் ராமதாஸ். ராமதாசை நான்…

Read More

குல்தீப் யாதவ்- வான்ஷிகா (புகைப்படம்- x) ஐபிஎல் 2025 இப்போதே வருவதால், கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் வான்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்த செய்தி பலருக்கு ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. குல்தீப் மற்றும் வான்ஷிகாவின் நெருக்கமான நிச்சயதார்த்த விழா ஜூன் 4 புதன்கிழமை லக்னோவில் நடைபெற்றது, மேலும் இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களின் நிச்சயதார்த்தத்தின் படங்கள் புதன்கிழமை மாலை பகிரப்பட்டன, அவை விரைவில் வைரலாகின்றன.அவர்களின் நிச்சயதார்த்தத்தில் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் அவரது மனைவி பிரியா சரோஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ரிங்குவின் இருப்பு இறுதியாக யாதாவுடனான வீழ்ச்சியின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. டி.சி ஸ்பின்னர் மற்றும் கே.கே.ஆர் இடி இடையே பிரபலமற்ற “ஸ்லாப்” சம்பவத்திற்குப் பிறகு ஊகம் தொடங்கியது, இது டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதிய சிறிது நேரத்திலேயே நடந்தது. ரிங்கு சிங்கைத் தவிர, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் சில…

Read More

புதுடெல்லி: ​​நாடு முழு​வதும் 2026 அக்​டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி தொடங்​கும் என மத்​திய உள்துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது. கடைசி​யாக 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதற்கு அடுத்​த​படி​யாக 2021-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பணி​கள் 2020 ஏப்​ரல் மாதத்​தில் தொடங்​கு​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. ஆனால், கரோனா பெருந்​தொற்று பரவியதையடுத்​து, இப்​பணி தள்ளி வைக்​கப்​பட்​டது. அதன் பிறகு மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் மீண்​டும் தள்​ளிப்​போனது. இதனிடையே, நாடு முழு​வதும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என காங்​கிரஸ், திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை வைத்​தன. இந்த சூழ்​நிலை​யில், அரசி​யல் விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை (சிசிபிஏ) கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் கடந்த ஏப்​ரல் 30-ம் தேதி நடை​பெற்​றது. இதையடுத்து…

Read More

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம், ‘அக்யூஸ்ட்’. இதை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் பேருந்து சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹைலைட்டான இந்த சண்டைக்காட்சிக்காக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.இதுபற்றி படக்குழு கூறும்போது, “படத்தின் முக்கியமான இடத்தில் இந்த சண்டைக் காட்சி வருகிறது. இதற்காக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கியும் மற்றொரு பேருந்தை வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தினோம். ஸ்டன்ட் சில்வா, இந்த ஆக்‌ஷன் காட்சியை வடிவமைத்தார். இதில் சுமார் 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளோம்” என்றனர்.

Read More

மதுரை: மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில், கிராம மக்களால் வெளிக் கொணரப்பட்டுள்ளது. இது வரலாற்றுக்குப் புதிய வரவாகும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்களும், சிற்பத்துறை, தொல்லியல் ஆய்வாளர்களுமான தேவி, அறிவுச் செல்வம் ஆகியோர் கூறியதாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மலம்பட்டி ஊராட்சியின் சிற்றூர் உடன்பட்டி. இவ்வூரில் ஓட்டக்கோயில் அழைக்கப்பட்ட பழைய சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அதிஷ்டானப் பகுதி முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அதில் இவ்வூரின் பழமையான பெயர் ‘ஆற்றூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதைந்துபோன சிவன் கோயிலின் மூலவர் பெயர் தென்னவனீசுவரம். இங்குள்ள கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. கி.பி.1217-1218-ம் ஆண்டுகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அழகப்பெருமாள் எனும் களவழி நாட்டுத் தலைவன் தனக்கு உரிமையான நாகன்குடி என்னும் ஊரின் குளத்தையும், அதனைச் சுற்றியுள்ள நன்செய், புன்செய், தோட்டம், துரவு அனைத்தையும் ஆற்றூர் நம்பி பேரம்பலக் கூத்தன்…

Read More

புதுடெல்லி: ர​யில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் முழு​வதும் விற்றுத் தீர்​வதன் பின்​னணி​யில் உள்ள மோசடியை ரயில்வே கண்​டு​பிடித்​துள்​ளது. நாடு முழு​வதும் ரயில்​களில் பயணம் செய்​வதற்​கு, ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தின் மூலம் பயணி​கள் டிக்​கெட் முன்​ப​திவு செய்​கின்​றனர். எனினும், ஒவ்​வொரு ரயிலுக்​கும் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் மொத்த டிக்​கெட்​டு​களும் விற்​று​விடு​கின்​றன. இதனால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வந்​தனர். குறிப்​பாக பண்​டிகைகள், விடு​முறை நாட்​களில் பயணம் செய்​வதற்​கான டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் தீர்ந்​து​விடும். இத்​தனைக்​கும் பண்​டிகைக்​காக 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு தொடங்​கும். அப்​போதும் கூட டிக்​கெட்​டு​கள் மளமளவென விற்று விடும். இதுகுறித்து நிறைய புகார்​கள் ரயில்​வேக்கு வந்த வண்​ணம் இருந்​தன. போலி ஐ.டி. இதையடுத்​து, ரயில்வே நிர்​வாகம் முன்​ப​திவு டிக்​கெட்​டு​கள் குறித்து தீவிர ஆய்வு நடத்​தி​யது. அப்​போது போலி பயனர் அடை​யாள எண்​களை (யூசர் ஐ.டி.) பயன்​படுத்தி ஏராள​மான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து வந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. கடந்த…

Read More

நடிகர் கமல்​ஹாசனும் மணிரத்​ன​மும் 36 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்​துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் சிலம்​பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்​ஜ், ஐஸ்​வர்யா லட்​சுமி, அசோக் செல்​வன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்​துள்ள இந்​தப் படம் இன்று (ஜூன் 5) வெளி​யாகிறது. இந்​நிலை​யில், செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த நடிகர் கமல்​ஹாசன் கூறிய​தாவது:தமிழ் சினி​மாவை புரட்​டிப் போட வேண்​டும் என்​பது​தான் எங்​களின் ரொம்ப நாள் ஆசை. அதைசெய்ய முயற்சி செய்​து​கொண்டே இருக்​கிறோம். புரட்​டிப் போடு​வது என்​பது பெரிய விஷ​யம். நாங்​கள் விரும்​பும் திசை நோக்கி கொஞ்​ச​மாவது நகர்த்​தலாம் என்று நினைத்​தோம். அதற்கு எங்​களுக்​குசிறந்த வீரர்​கள் கிடைத்​தார்​கள். சர்​வ​தேச தரத்​தில்இருக்​கும் எங்​கள் டெக்​னீஷியன்​களின் வேலை​யை, வெளி​நாட்​டில் இருந்து வந்து பணி​யாற்​றிய​வர்​கள் பாராட்டி இருக்​கிறார்​கள். நான் அப்​போது பார்த்த இளைஞர் மணிரத்​னம், இன்று சினிமா ஞானி​யாக மாறி​யிருக்​கிறார். அவர் படத்​தில் நடித்​தது எனக்​கு குதூகல​மாக இருந்​தது என்​பது​தான் உண்​மை. இதில் சிறந்த டெக்​னீஷியன்​கள் கடுமை​யாக…

Read More

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக் காற்றால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவிக் கிடப்பதால், அரிச்சல்முனைக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியதால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடரோரப் பகுதிகளில் புழுதி மணல் காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஆங்காங்கே மணல் மூடியுள்ளது. அதேபோல, அரிச்சல்முனை பகுதியிலும் மணல் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தனுஷ்கோடி கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ள போலீஸார், வும், முகுந்தராயர் சத்திரம்,…

Read More