சென்னை: லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி…
Author: admin
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன்…
பீட்ரூட் உணவு நார்ச்சத்து மற்றும் நைட்ரேட்டுகளால் நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான செரிமானம் மற்றும் குடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதன் இயற்கையான சேர்மங்கள் பித்த ஓட்டத்தைத் தூண்ட உதவுகின்றன, கொழுப்புகளை உடைப்பதிலும் கழிவுகளை அகற்றுவதிலும் கல்லீரலை ஆதரிக்கின்றன. கூடுதலாக, ஃபைபர் உங்கள் செரிமான அமைப்பை வழக்கமானதாகவும் சீரானதாகவும் வைத்திருக்க உதவுகிறது. எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்முதலில் ஒரு படத்தை எடுக்காமல் உங்கள் உணவை சாப்பிட முடியவில்லையா?எங்கள் உணவு புகைப்பட போட்டியில் சேர்ந்து, அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பைப் பெறுங்கள்!விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.சுவையான சமையல் குறிப்புகளைக் கண்டறியவும், கவர்ச்சிகரமான உணவுக் கதைகளை அனுபவிக்கவும், சமீபத்திய உணவு செய்திகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும் எங்கள் வாட்ஸ்அப் உணவு சமூகத்தில் சேரவும்! இங்கே கிளிக் செய்க
நாசா முன்னோடியில்லாத வகையில் பட்ஜெட் நெருக்கடியை எதிர்கொள்கிறது, இது ஏஜென்சியை வியத்தகு முறையில் மாற்றியமைக்க அச்சுறுத்துகிறது. மே 2025 இல் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகையின் நிதியாண்டு 2026 “ஒல்லியான” பட்ஜெட் திட்டம், நாசாவின் 2025 நிதியை விட கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர் குறைப்பு என்று அழைக்கிறது. அறிவியல் திட்டங்கள் முன்மொழியப்பட்ட 50% குறைப்புடன் கடுமையான அடியை எதிர்கொள்கின்றன. ஸ்பேஸ் ஏவுகணை அமைப்பு (எஸ்.எல்.எஸ்), ஓரியன் விண்கலம் மற்றும் கேட்வே சந்திர புறக்காண் போன்ற பாரம்பரிய தூண்கள் ஆர்ட்டெமிஸ் 3 பணிக்குப் பிறகு படிப்படியாக வெளியேற்றப்பட அல்லது ரத்து செய்யப்படுகின்றன. இந்த வெட்டுக்கள் கவலையைத் தூண்டினாலும், பல வல்லுநர்கள் இந்த தருணத்தை நாசாவை ஒரு மெலிந்த, சுறுசுறுப்பான நிறுவனமாக மாற்றுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கிறார்கள், இது விண்வெளி ஆய்வின் புதிய சகாப்தத்தில் செழிக்க முடியும்.நாசா நிதி வெட்டுக்களின் வரலாற்று அளவு மற்றும் அவற்றின் தாக்கம்இந்த வெட்டுக்களின் அளவு வரலாற்று. பணவீக்கத்திற்காக…
புதுடெல்லி: வட மாநிலங்களில் சங்கராச்சாரியராகக் கருதப்படும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதேபோல் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தராகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம். இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதைத் தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் அவிமுக்தேஷ்வரானந்த் முதன்முறையாக துறவிகள் சார்பில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். வாராணாசி வந்த சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “தாயான பசுவின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு கட்சி மற்றும்…
வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கை நிறுத்துவதற்கு உதவியதற்காக ட்ரம்ப் “புகழ் பெறத் தகுதியானவர்” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிரொலித்தார். முன்னதாக பிலாவல் பூட்டோ வெளியிட்ட கருத்தில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை எளிதாக்கியதற்காக 10 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் டொனால்ட் ட்ரம்ப்…
ஓசூர்: கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’ திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகா தவிர உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது’ என கமல்ஹாசன் பேசியது கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் இன்று இப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி இருப்பதால், கர்நாடகா மாநிலத்தின் தும்கூர், மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் ஓசூருக்கு படையெடுத்துள்ளனர். ஓசூரில் உள்ள திரையரங்கில் கர்நாடகா மாநிலத்தவர்கள் வருகை தந்து பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன்…
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியைக் காக்கவும், தொகுதி மறுசீரமைப்பு குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென்னாட்டு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் கடந்த ஏப்ரல் 30 ஆம் நாள் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்ட போது, இரு காரணங்களுக்காக சமூகநீதி…
உந்துதல் என்பது வெற்றிக்கான முதல் படியாக இருந்தாலும், அது ஒழுக்கம் என்பது அவர்களின் குறிக்கோள்களில் கவனம் செலுத்த உதவுகிறது. வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் வெற்றிகரமாகவும் இருக்க சில நடைமுறை உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
சென்னை: பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஏற்பாடு செய்த ஆர்சிபி வெற்றி விழா இப்படியொரு துயர…
