இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணித்ததில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்கு குறிப்பிடத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் உதவ வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், “பஹல்காம் சம்பவம் ஒரு தவறான நடவடிக்கை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதியை விரும்பும் மனிதர். அதோடு, நன்மை பயக்கும் வணிக ஒப்பந்தங்களை விரும்புபவர் என்பதை எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் பதற்றத்தை எதிர்ப்பவர், நேரடியான அல்லது மறைமுகமான போரை எதிர்க்கும் மனிதர். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் புதுப்பிக்கப்பட்ட நட்புறவில் நுழைகின்றன” என தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக வாஷிங்டனுக்கு சென்றுள்ள பாகிஸ்தான்…
Author: admin
திரையரங்குகளில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் ‘முத்தமழை’ பாடல் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்னையில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ என்ற பாடல் இணையத்தில் வைரலானது. பலரும் அவருடைய குரலைக் கேட்டு மெய்மறந்தார்கள். ஆனால், படத்தில் பாடகி தீ குரலில் இப்பாடல் இடம்பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்தது. இதனிடையே, இன்று ‘தக் லைஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ‘முத்தமழை’ பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமன்றி படத்தின் முக்கியமான வில்லனே ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் எனவும் ஒரு தரப்பினர் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும், படத்துக்கும் எதிர்மறை விமர்சனங்களே இணையத்தை ஆட்கொண்டுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ்,…
நத்தம்: நத்தம் அருகே அஞ்சுகுழிபட்டி சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் அஞ்சுகுழிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 270 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்றாமல், இருவழிச்சாலையில் விரிவாக்கப்பணி மட்டுமே நடந்துள்ளது. நத்தம் வரை சாலை முழுவதும் பணிகள் முழுமையடையாமலும் உள்ளது. சாலை விரிவாக்கப்பணியின்போது அஞ்சுகுளிப்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இருந்தபோதும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், அஞ்சுகுழிப்பட்டி சுங்கச்சாவடியில் வாகன எண்களைப் பதிவு செய்யும் ஸ்கேனர் கருவிகள், தடுப்புகள், கட்டண வசூல் அறைகள் புதுப்பிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியில் கூடினர். அங்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலைப்பணிகள் முழுமையடையவில்லை. நான்கு வழிச்சாலை அமைக்கப்படவில்லை எனக் கூறி…
அதை வீட்டில் வளர்க்க முடியுமா? குறுகிய பதில்? ஆம். ஆனால், இதற்கு நிறைய கவனிப்பு, கத்தரிக்காய், நல்ல சூரிய ஒளி மற்றும் பல தேவை. இந்தியாவில், உங்களிடம் ஒரு கொல்லைப்புறம் அல்லது முன் தோட்டம் இருந்தால் சிண்டூர் செடியை வளர்ப்பது சிறந்தது, ஏனெனில் இது பால்கனிகள் அல்லது மொட்டை மாடிகளில் சரியான அரவணைப்பு அல்லது இடத்தைப் பெறாது.
தொலைக்காட்சிகள் (பட ஆதாரம்: Earth.com) விஞ்ஞானிகள் ஒரு முழுமையான கோளப் பொருளைக் கண்டுபிடிப்பதன் மூலம் குழப்பமடைகிறார்கள் பால் வழிஇது ரேடியோ சிக்னல்களை மட்டுமே வெளியிடுகிறது. பெயரிடப்பட்டது தொலைக்காட்சிகள்இந்த விசித்திரமான அமைப்பு புலப்படும் ஒளி, அகச்சிவப்பு பளபளப்பு அல்லது கண்டறியக்கூடிய எக்ஸ்-கதிர்கள், மங்கலான வானொலி உமிழ்வுகளை மட்டுமே கொடுக்காது. கண்டுபிடிப்பு எளிய விளக்கங்களை மீறுகிறது மற்றும் விண்வெளியில் இதுபோன்ற ஒரு சுற்று பொருள் எவ்வாறு இருக்கக்கூடும் என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது.ஒளி அல்லது வெப்பத்தின் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், நுட்பமான வானொலி அலைகளை வெளியேற்றும் ஒரு வட்டப் பகுதியை விஞ்ஞானிகள் கவனித்தபோது டெலியோஸ் முதலில் கவனத்தை ஈர்த்தது. பேராசிரியர் மிரோஸ்லாவ் டி. பிலிபோவிக் தலைமையிலான குழுவால் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது மேற்கு சிட்னி பல்கலைக்கழகம்ஆஸ்திரேலியாவின் ASKAP (ஆஸ்திரேலிய சதுர கிலோமீட்டர் வரிசை பாத்ஃபைண்டர்) தொலைநோக்கியிலிருந்து தரவைப் பயன்படுத்துதல்.விசித்திரமான கோளம், பால்வீதியில் காணப்படும் தொலைக்காட்சிகள்எங்கள் விண்மீனுக்குள் அமைந்திருந்தாலும், டெலியோஸ் மனித கண்ணுக்கு முற்றிலும் கண்ணுக்கு தெரியாதது.…
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை இந்த நேரம் ஒரு பெருங்கூட்டம் கோலியை காணப் போகிறோம், கொண்டாடப் போகிறோம் என பல நூறுக் கனவுகளுடன் திரண்டிருந்தது. ஆனால், சில நிமிடங்களில் கூட்ட நெரிசல், கூச்சல், குழப்பம் என பதற்றம் நிலவ 11 உயிர்கள் பறிபோயின. அரசு, போலீஸ், ஆர்சிபி என யாரும் எதிர்பார்த்திராத பெருந்துயரம் தான். என்றாலும் அரசு இயந்திரங்கள் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு நகர்ந்து செல்லும், காவல் துறை தன் கடமைகளில் கருத்தாகிவிடும். ஆர்சிபி இனி அடுத்த ஐபிஎல் தொடருக்கு உயிர் பெறும். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு மட்டுமே இச்சம்பவத்தினால் தீரா வேதனையும், நீங்கா துயரமும்! ரூ.50 லட்சம் தருகிறேன்… – அப்படி தாங்க முடியாத துன்பத்துக்குள் சிக்கிய தந்தை ஒருவர் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ”சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல் என்ற செய்தியைப் பார்த்தவுடனேயே நான் என் மகனுக்கு ஃபோன் அடித்தேன். ஆனால் அவன் எடுக்கவில்லை. எனக்கு நெருடலாக இருந்தது.…
சூர்யா – வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய இருந்த ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ‘வாடிவாசல்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக தொடங்கப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது. இதனிடையே ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவின் தேதிகள் ஒத்துவராத காரணத்தினால் இப்படம் கைவிடப்பட்டு இருக்கிறது. தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதனைத் தொடர்ந்து சில கதைகளை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படங்களுக்கு இடையே வெற்றிமாறன் படத்தைத் தொடங்கினால், நாட்கள் அதிகமாக தேவைப்படும் என்பதால் இப்போதைக்கு ‘வாடிவாசல்’ வேண்டாம் என்று சூர்யா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் ‘வாடிவாசல்’ கதையை அப்படியே வைத்துவிட்டு, வேறொரு படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். இப்படத்தையும் தாணுவே தயாரிக்கவுள்ளார். இதில் நாயகனாக…
சென்னை: பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கு ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (இந்தியா) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் என்ற சிறப்பு நிறுவனத்தை உருவாக்கின. இந்நிறுவனம் சார்பில், பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பிப்பதற்கும், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் (Multimodal Facility Complex – MMFC) அமைப்பதற்குமான முக்கிய ஒப்பந்தம் ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் நிறுவனத்தின் பொறியியல் குழு பொது மேலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.…
ஜுராசிக் அமெரிக்காவில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் மீட்கப்பட்டன 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய உட்டா மிகவும் வித்தியாசமான இடமாக இருந்தது – காடுகள் மற்றும் தண்ணீரில் மறைக்கப்பட்டுள்ளது. இது மேற்கு உள்துறை கடற்பகையின் விளிம்பில் ஒரு பசுமையான, நீர் நிறைந்த நிலப்பரப்பாக இருந்தது. இந்த நிலப்பரப்பில், டைனோசர்களும் ஆரம்பகால பாலூட்டிகளும் ஒரே நீர் மூலங்களிலிருந்து குடித்தன, அதே நேரத்தில் பண்டைய முதலைகள் மேற்பரப்புக்கு அடியில் மறைந்தன, அவற்றின் இரையைத் தாக்கும். அடர்த்தியான காடுகள் மற்றும் ஆறுகள் பலவிதமான வாழ்க்கையை ஆதரித்தன. இந்த பகுதி ஒரு மாறும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது, அங்கு உயிர்வாழ்வு நிலையான தழுவலை சார்ந்துள்ளது. எலும்புகள் மற்றும் உடைந்த முட்டைக் கூடுகள் உட்பட சிடார் மலை உருவாக்கத்தின் முசென்டூச்சிட் உறுப்பினரிடமிருந்து சமீபத்திய புதைபடிவ கண்டுபிடிப்புகள் ஒரு அரிய பார்வையை வழங்குகின்றன, இந்த பண்டைய, எப்போதும் மாறக்கூடிய சூழலில் ஒரு காலத்தில்…
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலை வைத்து பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார். ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தையொட்டி ரசிகர்கள் திரண்ட சின்னசாமி ஸ்டேடியம் வெளியே நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “பாஜகவினர் யாருக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கர்நாடக மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மட்டுமே நான் பதில் சொல்ல வேண்டும். அனைத்து பாஜகவினரும் முட்டாள்கள். பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் [ஜேடி(எஸ்)] இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்கின்றன. இந்த சம்பவத்துக்கு மாநில அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்.…
