தாம்பரம்: “டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எரிக்கரை பகுதியில் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியது: “சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது. அந்தக் காலங்களில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருந்தது. எல்லா மனிதர்களும் தனிமனித ஆயுள் என்பது நூறாண்டு…
Author: admin
ஐ.க்யூ, தர்க்கரீதியான சிந்தனை மற்றும் அவதானிப்பு திறன் சோதனை எடுக்க நீங்கள் தயாரா? உங்கள் விமர்சன சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்களை மதிக்க இந்த பணி மற்றும் பிற புளைக்கு வீரர்கள் சிறந்தவர்கள். கற்பனையாக சிந்திக்கவும், நேர அழுத்தத்தின் கீழ் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யவும் உங்கள் திறன் இந்த சிக்கல்களால் சோதிக்கப்படுகிறது. இத்தகைய தடைகளைத் தாண்டி மன சுறுசுறுப்பு மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.இந்த புதிர்களைத் தீர்ப்பது விமர்சன சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மற்றும் மனக் கூர்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. விரைவான நிலைமை மதிப்பீடு, தர்க்கரீதியான விலக்கு மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துவதற்கான உங்கள் திறனை இந்த புளைக்கு பயன்படுத்துபவர் மதிப்பிடுகிறார்.இன்றைய ப்ரைண்டீசரில், ஒரு சவாலான காட்சியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் யார் முதலில் விழுவார்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இதை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க என்ன தேவை என்பதை நீங்கள் பெற்றுள்ளீர்களா?…
குவஹாத்தி: அசாமில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதாகவும், 21 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ள பாதிப்பு தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைலகண்டி, திப்ருகார், மோரிகான், ஹோஜாய், கம்ரூப், நாகோன், கோலாகாட், பிவநாத், கச்சார், ஸ்ரீபூமி, சோனித்பூர், லக்கிம்பூர், தர்ராங், பார்பேட்டா, கோல்பாரா, தெற்கு சல்மாரா, கர்பி அங்லாங் மேற்கு, திமா ஹசாவ், சிவசாகர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் தேமாஜி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,59,601 மக்கள் தொகை கொண்ட ஸ்ரீபூமி மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைத் தொடர்ந்து 1,72,439 பேர் வாழும் ஹைலகண்டி மாவட்டமும், 1,02,716 மக்கள் வாழும் நாகோன் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 14977.99 ஹெக்டேர் பரப்பளவிலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார்…
தாம்பரம்: “ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?” என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தாம்பரம் மாநகர திமுக சார்பில் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத்தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் டி.ஆர்.பாலு பேசியது: “இந்தியா – பாகிஸ்தான் இடையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் முப்படைகளும் தங்களது செயல்திறனால் பாகிஸ்தானின் கொக்கரிப்பை அடக்கியது. இந்தச் சூழ்நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ, அதையே நமது முதல்வரும் செய்துள்ளார். எதை பாராட்ட வேண்டுமோ அதை பாராட்டியுள்ளார். எதை எடுத்து கூற வேண்டுமோ அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதமாக எழுதியுள்ளனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ சில நாட்களே…
மெக்னீசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், மேலும் இது உங்கள் உடலில் 300 க்கும் மேற்பட்ட செயல்முறைகளை ஆதரிப்பதாக அறியப்படுகிறது, இது போன்றது- தசை செயல்பாடு, நரம்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தி. ஆனால், பலர் தங்கள் உணவில் போதுமான மெக்னீசியம் பெறவில்லை. நம் உடல் பெரும்பாலும் மெக்னீசியம் குறைபாட்டின் நுட்பமான அறிகுறிகளை அளிக்கிறது, அவை நம் முகத்திலும் நம் கண்களிலும் சரியாகக் காட்டப்படலாம்- இருப்பினும், உடலில் ஒரு கனிம ஏற்றத்தாழ்வை அடையாளம் காண இந்த அறிகுறிகளை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், நல்ல பகுதி என்னவென்றால், அடையாளம் காணப்பட்டவுடன், சரியான உணவு, கூடுதல் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை பெரும்பாலும் சரிசெய்ய முடியும். இந்த அத்தியாவசிய கனிமத்தில் உங்கள் உடல் குறைவாக இயங்குவதைக் குறிக்கும் சில முக மற்றும் கண் தொடர்பான சில அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:1. கண் இழுத்தல் அல்லது கண் இமை பிடிப்புஇந்த…
பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இயற்கைக்கு மாறான வகையில் 11 பேர் மரணமடைந்ததாக தனித்தனியாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் போலீஸ் இதுவரை எஃப்ஐஆர் ஏதும் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், 11 பேரின் மரணத்தையும் இயற்கைக்கு மாறான மரணம்…
தேனி: சபரிமலையில் மாதாந்திர வழிபாட்டுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காகத் தரிசன ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன. ஐயப்பன் சிலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலையில் ஒருநாள் வழிபாட்டுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஜூன் 5) அதிகாலை முதல் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறப்புப் பூஜைகளுக்குப் பின்பு இன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட உள்ளது. இந்நிலையில், மாதாந்திர (மிதுனம்) வழிபாட்டுக்காக வரும் 14-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பின்பு 19-ம் தேதி இரவு நடை சாத்தப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கின. கேரளாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் அங்குத் தொடர் மழை பெய்து வருகிறது. இப்பருவத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை: “அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம்…
புதுடெல்லி: “பிரமாண்டமான நிகழ்வுகளை விட, அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரம் வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் மொபைல் போன்களின் விற்பனையில் சரிவைக் காட்டும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்கின்றன. கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விற்பனை 17% ஆகவும், கார் விற்பனை 8.6% ஆகவும் குறைந்துள்ளது. மொபைல் சந்தை 7% ஆக குறைந்துள்ளது. மறுபுறம், செலவுகள் மற்றும் கடன் இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, உள்நாட்டு பணவீக்கம், கல்விச் செலவுகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாமே விலை உயர்ந்து வருகின்றன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு சாதாரண இந்தியரும் அனுபவிக்கும்…
சென்னை: 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் நிலவுவதால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் கற்றல் மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைப்படம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2025-26) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டன. முதல்நாளே பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகம் உட்பட பல்வேறு பொருள்கள் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டன. அதேநேரம் 1 முதல்…
