Author: admin

சென்னை: அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணிடங்களை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு முழுமையாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த மே 31-ம் தேதி வரை பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த காலிப்பணியிடத்தை காலம் தாழ்த்தாமல் முழுமையாக நிரப்ப தவறிவிட்டது. அரசு திட்டங்கள் தொய்வில்லாமல் நடைபெற அரசுத் துறை காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்ப வேண்டும். தமிழக அரசின் 43 அரசுத் துறைகளில் பல்வேறு நிலைகளில் சுமார் 15 லட்சம் வரை பணிபுரிவார்கள் என்ற நிலையில் தற்போது சுமார் 9.50 லட்சம் பேர் பணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிதியாண்டில் சுமார் 20,000 பேர் வரை ஓய்வு பெற இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 75,000 காலிப்பணியிடங்கள் 2026-ம்…

Read More

ஆர்வமுள்ள ஆற்றலின் தருணங்களில், எண்ணங்கள் டிக்கிங் கடிகாரத்தை விட வேகமாக ஓடும்போது, ​​மண்ணான மற்றும் இயற்கையான ஒன்றைத் திருப்புவதில் ஆறுதல் இருக்கிறது. இயற்கையிலிருந்து அத்தகைய ஒரு பரிசு எலுமிச்சை தைலம், ஒரு மூலிகை, இது எலுமிச்சை போல வாசனை வீசுகிறது, ஆனால் மூளைக்கு ஒரு சூடான அரவணைப்பு போல் உணர்கிறது. இந்த பண்டைய மூலிகை அதன் நுட்பமான மந்திரத்தை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது, இன்று, அந்த மோகம் ஒரு வீட்டு தீர்வாக மாறியுள்ளது: ஒரு மென்மையான, பதட்டத்தைக் குறைக்கும் எலுமிச்சை தைலம் வலி தைலம். இது மற்றொரு DIY செய்முறை மட்டுமல்ல-இது உண்மையான அறிவியல், வயதான தாவர ஞானம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பராமரிப்பின் எளிமை ஆகியவற்றின் கலவையாகும்.எலுமிச்சை தைலம் ஏன் ஒரு அழகான தாவரத்தை விட அதிகம்எலுமிச்சை தைலம் (மெலிசா அஃபிசினாலிஸ்) புதியதல்ல. உண்மையில், மூலிகை மரபுகளில் அதன் இனிமையான, குணப்படுத்தும் இயல்புக்காக இது பல…

Read More

சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தப் போன் அந்நிறுவனத்தின் ஃப்ளேக்‌ஷிப் போனான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக மலிவான விலையில் சந்தையில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தப் போன் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மாடலுக்கு மையமாக இருக்கும் வகையில் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது. அதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 12-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. ஒன்பிளஸ் 13எஸ் – சிறப்பு அம்சங்கள் 6.32 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 8 எலைட்…

Read More

சென்னை: நடிகர் சங்​கத்​துக்கு தேர்​தல் நடத்​தி​னால் கட்​டு​மானப்​பணி​கள் பாதிக்​கப்​படும் என்​ப​தால் சங்க நிர்​வாகி​களின் பதவிக்​காலம் மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது என நடிகர் விஷால் உயர் நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​துள்​ளார். தென்​னிந்​திய நடிகர் சங்​கத்​துக்கு மூன்று ஆண்​டு​களுக்கு ஒரு​முறை தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும். கடந்த 2022-ம் ஆண்டு தேர்​தல் நடத்​தப்​பட்டு நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டனர். அவர்​களின் பதவிக்​காலம் கடந்த மார்ச் 19-ம் தேதி​யுடன் முடிவடைந்த நிலை​யில் அவர்​களின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்​டுகளுக்கு நீட்​டிப்​பது என கடந்​தாண்டு செப்​.8-ல் நடந்த நடிகர் சங்க பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தீர்​மானிக்​கப்​பட்​டது. இதை எதிர்த்​து நடிகர் நம்​பி​ராஜன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்​கில் தென்​னிந்​திய நடிகர் சங்க பொதுச்​செய​லா​ள​ரான நடிகர் விஷால் சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதில் அவர் தெரி​வித்​துள்​ள​தாவது: நடிகர் சங்​கத்​துக்கு ரூ.25 கோடி செல​வில் புதி​தாக கட்​டிடம் கட்​டும் பணி…

Read More

நடிகை ஹினா கான் தனது திருமண விழாவில் ஒரு ஓப்பல்-பச்சை சேலை மற்றும் மனீஷ் மல்ஹோத்ராவின் ப்ளஷ்-டன் ரவிக்கையில் நடந்தபோது, ​​இணையம் அவரது தோற்றத்தைப் பாராட்ட இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அவளுடைய வைர மோதிரத்தின் கிளிட்ஸ் மற்றும் அவளது முக்காட்டில் தனிப்பயனாக்கப்பட்ட எம்பிராய்டரி ஆகியவற்றைத் தாண்டி, அவளுடைய கால்கள் தான் நிகழ்ச்சியை உண்மையிலேயே திருடின. ஆமாம், சோல் மெஹெண்டி, ஒரு போக்கு, ஆழ்ந்த பாரம்பரியத்தில் இன்னும் வேரூன்றியுள்ளது, ஹினாவுக்கு நன்றி செலுத்தும் தருணத்தைக் கண்டறிந்தது.வழக்கமான கணுக்கால் அல்லது கால்-கனமான வடிவமைப்புகளுக்கு பதிலாக, அவளுடைய மெஹெண்டியில் ஒவ்வொரு காலின் ஒரே மையத்திலும் ஒரு பெரிய மலர் மையக்கருத்து இடம்பெற்றது, பணக்கார, இருண்ட மருதாணி வடிவத்தில் கீழே முழுமையாக மூடியது. வடிவமைப்பு தைரியமான, குறைந்த மற்றும் புத்துணர்ச்சியுடன் ஓவர் டோன் மண்டலங்கள் அல்லது மணப்பெண்கள் பொதுவாக தேர்வு செய்யும் சமச்சீர் கட்டங்களிலிருந்து வேறுபட்டது. ட்ரெண்ட்டிங் தோற்றத்தின் பின்னால் உள்ள கலைஞர்? பாலிவுட்டின் கோ-டு மெஹெண்டி கலைஞரான…

Read More

அதர்வா நடித்துள்ள ‘DNA’ திரைப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘DNA’. இதன் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தினால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது ஜூன் 20-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர், பாடல்கள் என வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தினை திரையுலகினர் பலரும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘DNA’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கிறது. இசை உரிமையினை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டதால் தயாரிப்பு தரப்பு இப்போதே லாபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Read More

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் இன்று (ஜூன் 5) ஓரே நாளில் வருகை புரிந்ததால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாமகவில் ‘யார் அதிகாரமிக்கவர்’ என்ற போட்டி அரசியல் நிலவுகிறது. பாமக நிறுவனரான ராமதாஸ், தலைவர் என கூறிக்கொள்ளும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே பாமகவும், அக்கட்சியின் தொண்டர்களும் சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், குடும்பத்து உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். சுமுக முடிவு எட்ட பாஜகவும் களம் இறங்கியது. அன்புமணி ஆதரவு பெற்ற பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி உள்ளார். இவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் 16-ம் தேதி முதல் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ராமதாஸ்…

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 6) காலை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு – ஸ்ரீநகர் இடையே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். உலகின் மிக உயரமான ரயில்வே இரும்புப் பாலம்: செனாப் ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது செனாப் ரயில் பாலம். உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான இதன் நீளம் 1,315 மீட்டர். இது நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை இது வெகுவாக குறைக்கும். இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும்…

Read More

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் வரலட்சுமி தமிழ்நாடு உயிரியல் அறிவியல் துறைக்கான விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு தமிழ்நாடு உயிரியல் அறிவியல் துறைக்கான விஞ்ஞானி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மாநில அளவில் பங்கேற்கும் பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விஞ்ஞானி விருதுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பப் பள்ளியின் மூலக்கூறு நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியரான வரலட்சுமி, உயிரியல் அறிவியல் துறைக்கான விருது பெற்றுள்ளார். பேராசிரியர் வரலட்சுமி இதுவரை 110 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 4 கண்டுபிடிப்புகளை காப்புரிமைக்கு விண்ணப்பித்து 2-க்கு காப்புரிமை பெற்றுள்ளார். 12 பேர் பிஎச்டி பட்டம்பெற வழிகாட்டியாக இருந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 கோடிக்கு மேல் ஆராய்ச்சி நிதி பெற்றுள்ளார்.…

Read More

மதுரை: மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார். மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடித்த திபை்படம் ‘தக்லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குளில் இப்படம் வெளியானது. மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள குரு தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சியை நடிகரும், இயக்குநருமான அமீர் பார்த்தார். பின்னர் அவர் கூறியது: “40 ஆண்டுகளாக கமலஹாசனின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில்தான் பார்ப்பேன். சரியான நேரத்தில் சரியான மனிதர்கள் பக்கம் நிற்பதுதான் கடமையாக எண்ணுகிறேன்.இப்படத்தில் மொழி குறித்து ஏதும் அவர் தவறாக பேசவில்லை. காவிரி நீர் குறித்தும் கன்னட மொழி குறித்தும் தவறாக பேசவில்லை. திராவிட குடும்பத்தின் அன்பைப் பற்றியும் இணக்கத்தை…

Read More