சென்னை: ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக தேர்வான வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தா.மோ.அன்பரசன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நமது பூமி கடும் நெருக்கடியில் இருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலம் இப்போது நாம் செய்யும் செயல்களை பொறுத்துதான் அமையும். இந்த புவி மூச்சுவிட உதவுகிற நுரையீரல் காடுகள்தான். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடந்த 4 ஆண்டில்…
Author: admin
இஸ்லாமாபாத்: தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடையும் வகையில், ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு தேசிய பொருளாதா கவுன்சில் ஒருமனதாக தனது ஒப்புதலை தெரிவித்தது. மேலும், நடப்பு ஜுன் மாதத்துடன் முடிவடையும் 2024-25-ம் நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. என்சிசி கூட்டத்தில் பிரதமர் ஷொபாஸ் பேசுகையில், “ சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தண்ணீருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை மிரட்டி பணியவைக்கும் இந்தியாவின்…
சென்னை: திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக கடந்த ஆண்டே தேர்தல் குழுக்களை அமைத்து பல்வேறு பணிகளை தொடங்கிவிட்டது. மதுரையில் கடந்த ஜூன் 1-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்குமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தையும் அறிவித்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்க, நாளை காணொலி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர்…
மும்பை: பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெற்றி விழா அணிவகுப்பில் தனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். புதன்கிழமை அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் லட்ச கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் உள்ளே நுழைய முயன்ற காரணத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை கூறியுள்ளார். “வெற்றி அணிவகுப்பில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. இது நான் விளையாடிய காலத்திலும் சொல்லியது உண்டு. 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்ற போது கூட…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார். எந்த நாடுகள்? – 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாடுகளாகும். பகுதி கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் உத்தரவுப்படி, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் “அதிக அளவிலான ஆபத்தை” ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகின்றன, இருப்பினும் பிரகடனத்தில் இந்த நாடுகளின் நுழைவை முழுமையாகத் தடை செய்யவில்லை. அமெரிக்க அதிபரின்…
வாதங்கள் சத்தமாக கூச்சலிடுவது அல்லது கடைசி வார்த்தையைக் கொண்டிருப்பது அல்ல – அவை மூலோபாயம், மனதின் இருப்பு மற்றும் தூண்டுதல் பற்றியது. நீங்கள் ஒரு பணுக் கூட்டத்தில் இருந்தாலும், நண்பர்களுடன் விவாதித்தாலும், அல்லது பதட்டமான குடும்ப சூழ்நிலையைக் கையாளுகிறீர்களோ- உங்கள் பார்வை புள்ளிகளை திறம்பட வாதிடுவது மற்றும் தொடர்புகொள்வது எப்படி என்பதை அறிவது வாதங்களை வெல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிக்கோள் எப்போதுமே ஒருவரை “தோற்கடிப்பது” அல்ல – இது உங்கள் கருத்தையும் எண்ணங்களையும் மிகவும் உறுதியுடன் முன்வைப்பதாகும், மற்றவர்கள் தங்கள் மறுபரிசீலனை செய்கிறார்கள், உங்களுடன் உடன்படுவதைக் கருத்தில் கொள்வார்கள். மிகவும் வெற்றிகரமான தொடர்பாளர்கள் மட்டும் பேசுவதில்லை – அவர்கள் கேட்கிறார்கள், அமைதியாக இருக்கிறார்கள், எப்போது பேச வேண்டும் என்று தெரியும். எனவே, உங்கள் குளிர்ச்சியை இழக்காமல் எந்தவொரு வாதத்தையும் வெல்ல உதவும் சில புத்திசாலித்தனமான மற்றும் நடைமுறை உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
சாதனை படைத்த பரோபகார உறுதிப்பாட்டில், பில் கேட்ஸ் தனது செல்வத்தில் 99%, ஏறக்குறைய 198 பில்லியன் டாலர்களை அடுத்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிற்கு வழங்குவதாக உறுதியளித்தார். எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்தை உரையாற்றிய கேட்ஸ், இந்த பிரமாண்டமான நிதி ஆப்பிரிக்காவின் மிகவும் அச்சுறுத்தும் சில பிரச்சினைகளை, முக்கியமாக சுகாதார மற்றும் கல்வியில் உரையாற்றுவதில் கவனம் செலுத்தும் என்று கூறினார்.இந்த உறுதிமொழி வரலாற்றில் ஒரு கண்டத்திற்கு மிகப்பெரிய இயக்கப்பட்ட தனியார் பங்களிப்புகளில் ஒன்றாகும், மேலும் இது உலகளாவிய பரோபகாரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது. கேட்ஸ் கூறினார், “அந்த பணத்தில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவில் இங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க உங்களுக்கு உதவும்.” இந்த அர்ப்பணிப்பு பரோபகார அணுகுமுறையின் மாற்றத்தைக் குறிக்கிறது-வரம்பற்ற, பல தலைமுறை கொடுப்பனவு முதல் கேட்ஸின் வாழ்நாளில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தில் இயக்கப்பட்ட, நேர-வரையறுக்கப்பட்ட விளைவுக்கு.பில் கேட்ஸ் தனது 198 பில்லியன் டாலர் ஆப்பிரிக்காவில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளை…
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோபாலபுரம், அறிவாலயம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 102-வது பிறந்த தினம் நேற்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று காலை கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், சிஐடி நகரில் உள்ள இல்லத்தில், கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்த முதல்வர், அங்குள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு…
மவுண்ட் எட்னா மிட்-டூரிஸ்ட் பருவத்தை வெடிக்கச் செய்கிறது (பட ஆதாரம்: ராய்ட்டர்ஸ்) ஜூன் 2, 2025 இல், இத்தாலியின் சின்னமான மவுண்ட் எட்னா வன்முறையில் வெடித்தது, எரிமலை சாம்பலை வானத்திற்குள் அனுப்பி, கிழக்கு சிசிலி முழுவதும் உடனடி அவசர நடவடிக்கைகளைத் தூண்டியது. திடீர் வெடிப்பு சுற்றுலாப் பயணிகளை திடுக்கிட்டது மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் பரவலான பீதி மற்றும் குறிப்பிடத்தக்க இடையூறுகளையும் ஏற்படுத்தியது. சாகசக்காரர்கள், புவியியலாளர்கள் மற்றும் விடுமுறையாளர்களிடையே பிரபலமானவர், எரிமலை சாம்பல் போர்வை சாலைகள், தடங்கள் மற்றும் நகரங்கள் என்பதால் எட்னா மலையைச் சுற்றியுள்ள பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.எந்தவொரு உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்றாலும், வெடிப்பு பயண பாதுகாப்பு, அவசரகால தயாரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. நில அதிர்வு நடுக்கம் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதால், மேலும் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இத்தாலிய அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.…
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை (ஜூன் 6-ம் தேதி) வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில்,…
