சேலம்: அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி ஐஐடி-க்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி-கவிதா தம்பதியின் 3-வது மகள் ராஜேஸ்வரி. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள அரசு பழங்குடியின உறைவிட பள்ளியில் பிளஸ்-2 பயின்று, 600-க்கு 521 மதிப்பெண் பெற்றார். பின்னர், ஆசிரியர்கள் ஊக்குவித்ததால், அரசு சார்பில் பெருந்துறையில் செயல்படும் உயர்கல்வி பயிற்சி மையத்தில் ராஜேஸ்வரி சேர்ந்தார். மருத்துவராக வேண்டுமென்ற ஆசையுடன் இருந்த ராஜேஸ்வரி நீட் தேர்வுக்கு மட்டுமின்றி, ஐஐடி சேர்க்கைக்கான ஜேஇஇ தேர்வுக்கும் தயாரானார். ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றதும், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு முனைப்புடன் பயின்றார். இந்நிலையில், அந்த தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் பழங்குடியினருக்கான பிரிவில் 417-வது இடம் பெற்றுள்ளார். மேலும், தமிழக அளவில் பழங்குடியின மாணவிகளில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தையல் கலைஞராகப் பணியாற்றிய ராஜேஸ்வரியின் தந்தை…
Author: admin
அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் – யு மும்பா அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), யு மும்பா அணியின் லிலியன் பார்டெட்டை 2-1 (11-6, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் இந்திய நட்சத்திரமான ஸ்ரீஜா அகுலா, யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸுடன் (ருமேனியா) மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சாக்ஸை 2-1 (11-9, 8-11, 11-5) என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரீஜா அகுலா. 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் ஆகாஷ் பால், பெர்னாடெட் சாக்ஸ் ஜோடி 3-0 (11-8, 11-6, 11-6)…
நியூயார்க்: காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இஸ்ரேல் – காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. நிவாரண பொருட்கள் காசாவுக்குள் நுழைவதையும் தடுத்தது. இதனால் காசாவில் உள்ள மக்கள் உணவுக்கு போராடும் நிலை ஏற்பட்டது. உணவு விநியோகிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதல் காரணாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் இறந்தனர். இந்த நிலை தொடர்ந்ததால், காசாவில் உணவு பொருட்களை விநியோகித்த அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை அமைப்பு தனது பணியை நிறுத்தியது. இதையடுத்து , காசாவில் உடனடி போர் நிறுத்தம்…
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார். அதேநேரத்தில், சென்னை சோழிங்கநல்லூரில் தனது ஆதரவாளர்களுடன் அன்புமணி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். ராமதாஸால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் அதே பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்று அறிவித்த அன்புமணி, ‘‘உங்களை யாராலும் மாற்ற முடியாது. கட்சியின் தலைவருக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது’’ என்று திட்டவட்டமாக…
கடலூர்: நடிகர் விஜய், மாணவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வேல்முருகனுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி விருது நிகழ்வையும், விருது பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் குறித்தும் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வேல்முருகன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தி வந்தனர். மேலும், விஜய் ஆதரவாளரான நடிகர் தாடி பாலாஜி, விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகம் முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து,…
சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் சார்ந்து நடப்பாண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் குறித்து முதல் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 9 முதல் 13-ம்…
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. படிப்படி யாக உயர்ந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இதன்பிறகு, விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.9,130-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, கிராம் ரூ.114-க்கு விற்பனையானது.
வாஷிங்டன்: நாட்டு நலனுக்காக பணிபுரிவதை கட்சி விரோத செயல் என கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசி தரூர் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விமர்சனம் செய்திருப்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டு நலனுக்காக பணி புரிவதை கட்சி விரோத செயல் என சிலர் கருதுகின்றனர். அவர்கள் நம்மைவிட தங்களைத்…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜூன் 6) ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்), லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10-ம் தேதி சில இடங்களில், 11-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும்…
புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை காக்க “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” பிரச்சாரத்தையும் பிரதமர் முன்னெடுத்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கீழ் 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 -ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு இந்தநாள் மிகப்பெரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரக்கன்று நடும் இயக்கத்தில் கலந்து கொண்டு மரக்கன்று ஒன்றை நட்டார். மேலும், ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளதாவது: உலகின் மிகப் பழமையான…
