நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட, (பெரும்பாலும்) மீளமுடியாத மற்றும் வாழ்நாள் முழுவதும் உள்ளது, இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. ஒரு நாள்பட்ட நிலை, இன்சுலின் உற்பத்தி இல்லாததால் அல்லது உடலின் இன்சுலின் திறம்பட பயன்படுத்த இயலாமை காரணமாக உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், நீரிழிவு உங்கள் இதயம், நரம்புகள் மற்றும் கண்பார்வை ஆகியவற்றைக் கூட சேதப்படுத்தும். பிரபலமான கருத்துக்கு மாறாக, நீரிழிவு நோய் குழந்தைகளிலும் ஏற்படலாம், மேலும் மிகச் சிறிய வயதிலிருந்தே தொடங்கலாம். ஆனால், குழந்தைகளில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன? கண்டுபிடிப்போம் …குழந்தைகளில் நீரிழிவு என்ன?நீரிழிவு நோயின் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன, அவை குழந்தைகளை பாதிக்கக்கூடும்:வகை 1 நீரிழிவு: இன்சுலின் உருவாக்கும் கணையத்தில் உள்ள உயிரணுக்களை உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தாக்கும்போது இது நிகழ்கிறது. இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது…
Author: admin
புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லி, கர்நாடகாவில் தலா இருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்கள் ஆவர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையில் 1,487 பேருடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா…
மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்றுமாறு உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை மாற்றியமைக்கவும், மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு இன்று விசாரித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில், இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை…
மேம்பட்ட சுகாதார நலன்களுக்கான மூலோபாய உணவு இணைப்புகளை டாக்டர் ச ura ரப் சேத்தி அறிவுறுத்துகிறார். கோகோவை காபியுடன் இணைப்பது மனநிலையையும் கவனத்தையும் அதிகரிக்கும், அதே நேரத்தில் அவுரிநெல்லிகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. தயிருடன் ஓட்ஸை இணைப்பது ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக் சினெர்ஜி மூலம் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உணவு மருந்தாக இருந்தால் என்ன செய்வது? நோய்களைத் தணிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்? ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது முக்கியம். ஆனால் நீங்கள் அதை எவ்வாறு இணைக்கிறீர்கள் என்பது அதன் செயல்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சியளிக்கப்பட்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய சில அறிவியல் ஆதரவு உணவு ஜோடிகளைப் பகிர்ந்துள்ளார். “சரியான உணவை சாப்பிடுவது…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக மலையேறி செல்லும் பக்தர்களுக்கு பாதி வழியில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஒரு லட்டு பிரசாதமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை ஜெகன் ஆட்சியில் ரத்து செய்தனர். தற்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானதும், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இன்று ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் திவ்ய தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 10 விநியோக கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 திவ்ய தரிசன டோக்கன்களுக்காகவும், மீதமுள்ள 4 கவுன்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையங்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமலையில் வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு…
கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு மேல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர்…
ரேவா: மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (30) நேற்று மதியம் சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவ்வழியாக சென்ற ஆட்டோ சிக்கிக் கொண்டது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 4 குழந்தைகள், 2 ஆண்கள் ஒரு பெண் என 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியில் புனித நீராடிவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பை: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதையொட்டி மும்பையில் நேற்று கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஷுப்மன் கில் கூறியதாவது: நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பேட்டிங் வரிசையை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எங்கள் திட்டங்களை வகுக்க 10 நாட்கள் உள்ளன. இங்கிலாந்தில் 10 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறோம். இதனுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்துக்கு பின்னரே டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம். ஒரு தலைவராக நான், முன்மாதிரியாக செயல்பட்டு அணியை வழிநடத்த விரும்புகிறேன், நான் விளையாடும் எந்த போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். சராசரி மற்றும் ரன்கள் எண்ணிக்கையை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் எனது செயல்திறனால்…
வாஷிங்டன்: அமெரிக்கா – சீனா இடையே வரி தொடர்பான பேச்சு தடைபட்டிருந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசியில் பேசினார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் வரிவிதிப்பில் நியாயமாக இல்லை என குற்றம்சாட்டினார். அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிக்கப்போவதாக கூறினார். சீனப் பொருட்களுக்கான வரியை அவர் 145 சதவீதமாக உயர்த்தினார். இதனால் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இரு நாடுகள் இடையே சுமூக உறவு பாதிப்படைந்தது. வரி உயர்வு காரணமாக இரு நாடுகளிலும் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வரியை குறைக்க கடந்த மாதம் 12-ம் தேதி இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. வரி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக 90 நாட்களுக்கு சீனப் பொருட்கள் மீதான வரியை…
ஊட்டி: தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் தினமும் 35 டன் கழிவு மற்றும் குப்பை சேகாரமாகிறது. குப்பையைக் கையாள்வது மற்றும் அகற்றுவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு வருவதால் தினமும் அதிக அளவு குப்பை சேகாரமாகிறது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மற்றும் நில அமைப்பு ஆகிய காரணங்களாக குப்பையை சேகரிப்பதில் சவால் நிலவுகிறது. இந்நிலையில், ஊட்டி நகராட்சி தற்போது கிண்ட்ரில் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் துணையுடன், ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் குப்பையைக் கையாள முயற்சி மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக ஊட்டி நகராட்சி காந்தல் பகுதியில் இதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, காந்தல் பகுதியை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்களுடன் நேற்று நகராட்சித் தலைவர் எம்.வாணீஸ்வரி, ஆணையர் வினோத், நகர் நல…
