மாலசானா என்றும் அழைக்கப்படும் கார்லண்ட் போஸ், இடுப்பைத் திறக்கும், உள் தொடைகளை நீட்டி, இடுப்பு தளத்தை பலப்படுத்தும் ஒரு ஆழமான குந்து. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது உட்பட பல நன்மைகளைக் கொண்ட ஒரு தொடக்க நட்பு ஹத யோகா தோரணை.அதை எப்படி செய்வது:இடுப்பு அகலத்தைப் பற்றி உங்கள் கால்களுடன் நிற்கவும்.உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் இடுப்பை ஒரு குந்துகையில் குறைக்கவும்.உங்கள் குதிகால் தரையில் மற்றும் உங்கள் முதுகில் நேராக வைத்திருங்கள்.பிரார்த்தனை நிலையில் உங்கள் உள்ளங்கைகளை உங்கள் மார்பின் முன் ஒன்றாகக் கொண்டு வாருங்கள்.உங்கள் முழங்கால்களை மெதுவாகத் தள்ள உங்கள் முழங்கைகளைப் பயன்படுத்தவும்.ஆழமாக சுவாசிக்கும்போது 30 முதல் 40 வினாடிகள் போஸைப் பிடித்துக் கொள்ளுங்கள்.இந்த போஸ் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் தொடை தசைகளை பலப்படுத்துகிறது. இது இடுப்புகளை நீட்டி, வயிற்றைத் தட்டையானது.
Author: admin
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்சிபி (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே கூறினார். சரத் பவார் மற்றும் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் இயங்கி வரும் என்சிபி-யின் இரு அணிகளும் இணையவிருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளது. சமீப காலத்தில் சரத் பவாரை அஜித் பவார் பலமுறை சந்தித்து பேசியதால் இணைப்பு குறித்த பேச்சு எழுந்தது. இதுதுகுறித்து என்சிபி (சரத் பவார்) எம்.பி.யும் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலேவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், “இரு அணிகளும் இணைவது எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை.. அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கூட்டம் கூட்டப்படும்போது அதில் எங்களைப் பார்ப்பீர்கள்” என்றார். மகாராஷ்டிராவில் கடந்த 2003 ஜூலையில் என்சிபி இரண்டாக உடைந்தது. அஜித் பவார் தலைமையில்…
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூன் 6) முடிவடைகிறது. இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்களை ஜூன் 9-ம் தேதி வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2500 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனர். தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர் என்ற அளவில் விண்ணப்பங்கள் பதிவாகி வந்தன. 6-வது நாளில் மொத்த விண்ணப்பப் பதிவு ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், 14-வது நாளில் 2 லட்சத்தைத் தாண்டியது. இந்நிலையில், 30-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் விண்ணப்பம்…
சென்னை: பொதுமக்கள் கருத்து கேட்புக்கு பின் கு எரிஉலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை, வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டோக்கியோவில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-ம் மேற்பட்ட ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் அருகில் செயல்படுகிறது. கொடுங்கையூரில் எரிஉலை அமைக்கும் திட்ட பணிகள், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் மேற்கொள்ளப்படும்” என கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக் கூறி 6 லட்சம் பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரத் தொடங்கின. அந்த புகார்கள் மாநில சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், போலி இணையதளம் உருவாக்கி, ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தப்பட்டது தெரியவந்தது. காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ராமர் கோயில் பிரசாதம் பெற இந்தியாவில் ரூ.51 எனவும், வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் எனவும் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அந்தவகையில், 3 கோடியே 85 லட்சம் ரூபாயை, 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் ஏமாற்றி வசூல் செய்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் தடுப்பு போலீஸார் அதிரடியாக செயல்பட்டு ஆசிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “எல்லோரையும் விட இந்த புதிய மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப்…
டெல்லியில் சகோதர தாதாக்களான, ரங்கராய சக்திவேல் (கமலஹாசன்) மற்றும் மாணிக்கம் (நாசர்) மீது போலீஸ் என்கவுன்டர் முயற்சி நடக்கிறது. இதில் சம்பந்தமில்லாத அமரனின் (சிம்பு) தந்தை இறந்துவிடுகிறார். அமரனை அழைத்து வந்து சக்திவேல் வளர்த்து ஆளாக்குகிறார். திடீரென ரங்கராய சக்திவேல் மீது நடக்கும் கொலை முயற்சியில் அமரனை, சந்தேகிக்கிறார் சக்திவேல். இதைப் பயன்படுத்தி ரங்கராய சக்திவேலுக்கும் அமரனுக்கும் இடையே கொம்பு சீவி விடுகிறார்கள். அப்போது ஓர் உண்மை, அமரனுக்குத் தெரிய வர, சக்திவேலைக் கொல்லத் துணிகிறார். இதிலிருந்து தப்பிக்கும் சக்திவேல், அமரனையும் அவருடன் இருப்பவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறார். இந்த மோதலில் என்ன நடக்கிறது, யார் யாரைக் கொல்கிறார்கள் என்பது கதை. முப்பத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்த இப்படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. தாதாக்களை நாயகர்களாகக் கொண்டாடும் படங்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம். பிளாஷ் பேக்கில் கதை தொடங்கும் போதே, நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதைத் தொடக்கக்…
தாம்பரம் / திருவள்ளூர் / மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏரிக்கரை பகுதியை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது அந்த காலங்களில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருந்தது. எல்லா…
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி கடந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. ராமர் கோயில் வளாகத்தில் மற்ற சன்னதிகளின் கட்டுமானம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்தப் பணிகள் நிறைவடைந்ததால், புதிதாக கட்டப்பட்ட சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை அபிஜித் முகூர்த்தத்தில் நடைபெற்றது. இதற்கான யாக பூஜைகள் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கின. அதன்பின் அனைத்து சன்னதி களிலும் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ராம் தர்பார், ஷேசாவதார், சிவன், விநாயகர், அனுமன், சூர்யா, பகவதி, அன்னபூர்ணா ஆகிய சிலைகள் அந்தந்த சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ராமர் கோயிலின் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பாரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். அதன்பின் அருகில் உள்ள அனுமன்கர்கி கோயிலில் வழிபட்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் யோகி ஆதித்யநாத்…
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குமரியில் கடல் நடுவேயுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக இந்த படகுப் போக்குவரத்து அமைந்துள்ளது. சமீபத்தில் இவ்விரு பாறைகளையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்து, விவேகானந்தர் பாறையை அடைந்து அங்கு சுற்றிப்பார்த்த பின்னர், கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை அடைகின்றனர். இதற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. படகுப் போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், படகு சவாரிக்கான சாதாரணக் கட்டணம் ரூ.75 ல் இருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம்…
