Author: admin

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக சேர வரும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 965 அரசு தொடக்கப் பள்ளிகள், 264 நடுநிலைப் பள்ளிகள், 89 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 95 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,413 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர மேல்நிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெற்றோர் கூறியது: திருப்பூர் மாநகரில் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வரும் மாணவ, மாணவிகளையும், பெற்றோரையும் அலைக்கழிக்கின்றனர். மாணவர்கள்…

Read More

சென்னை: “தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துவிட்டது. மத்திய அரசின் முயற்சியால் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகையைப் பெறவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பாஜக அரசின் சமூக நீதி சிந்தனைத் திட்டம். பிஹார் மற்றும் தெலங்கானா போன்ற…

Read More

மதுரை: “நகைக் கடன் கட்டுப்பாடு விவகாரத்தில் மக்களின் ஆலோசனைகளும் பரிசீலித்து இறுதி செய்யப்படும்” என சு. வெங்கடேசன் எம்.பி எழுதிய கடித்தத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “புதிய நகைக் கடன் ‘நகல்’ விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28-ல் கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார். கவர்னர் பதிலில், தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே. உங்கள் கருத்துகள் கணக்கில் கொள்ளப்படும். இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்படும். சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என பதிலளித்துள்ளார். ஏற்கெனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இப்பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ்…

Read More

மனித மூளை ஒரு அற்புதம், மர்மமான, சக்திவாய்ந்த, அதே நேரத்தில் மென்மையானது. இந்த 1.3 கிலோ உறுப்பிலிருந்து ஒவ்வொரு சிந்தனை, நினைவகம் மற்றும் யோசனை நீரூற்றுகள். ஆனால் அதை கூர்மையாக வைத்திருப்பது எப்போதும் அதிகமாகச் செய்வதாக அர்த்தமல்ல. சில நேரங்களில், புத்திசாலித்தனமான நடவடிக்கை என்ன செய்யக்கூடாது என்பதை அறிவது.மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியரான டாக்டர் பைபிங் சென், அனைத்தையும் பார்த்திருக்கிறார், நினைவக குறைபாடுகள் முதல் முழு அறிவாற்றல் வீழ்ச்சி வரை. ஆனால் தனது சொந்த மூளை ஆரோக்கியத்திற்கு வரும்போது, ​​மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ‘சிஎன்பிசி மேக் இட்’ உடன் சில ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் கூட நினைவகம், கவனம் மற்றும் மூளை பின்னடைவு ஆகியவற்றில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும்.இந்த சிறந்த நரம்பியல் நிபுணர் எதைத் தவிர்க்கிறார் என்பதையும், இயற்கையாகவே மூளை சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதையும் இங்கே நாம்…

Read More

பாட்னா: “வரும் காலத்தில் நாங்கள் (காங்கிரஸ்) எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம். அது பிஹாரில் இருந்து தொடங்கும்,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரின் ராஜ்கிர் நகரில் நடைபெற்ற அரசியலமைப்பை பாதுகாப்போம் நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பிஹாரில் சட்டம் ஒழுங்கு நிலைமை முழுமையாக கெட்டுவிட்டது. ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதிக்கான பூமியாகக் கருதப்பட்ட பிஹார், இப்போது இந்தியாவின் குற்றத் தலைநகராக மாறிவிட்டது. அரசியலமைப்பைக் காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் போராடுகிறேன். எதிர்காலத்தில் நாங்கள் எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பிஹாரில் இருந்து தொடங்கும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான படிவங்கள் மிகவும் முக்கியமானவை. பல்வேறு கேள்விகளைக் கொண்ட அந்த படிவம் எவ்வாறு…

Read More

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் இன்று முன்னதாகவே வளைகுடா நாடுகளை பின்பற்றி பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் சில பகுதிகளில் வளைகுடா நாடுகளை பின்பற்றி முன்னதாகவே பக்ரீத், ரம்ஜான் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை, கொண்டாட்டங்களில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், இஸ்லாமிய வளைகுடா நாடுகளை பின்பற்றி கேரள மாநிலத்தின் சில இடங்கள், மற்றும் குமரி மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் ஒருநாள் முன்னதாகவே பக்ரீத் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரஃப் பள்ளிவாசலில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதைப்போல் திருவிதாங்கோடு, அழகியமண்படம், திட்டுவிளை, குலசேகரம் பகுதியிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அதேநேரம் குமரி மாவட்டத்தில்…

Read More

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. இந்த தற்காலிக அறுபடை வீடுகளில் ஜூன் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், ஜூன் 22-ல் ஒரே நேரத்தில்…

Read More

அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் அகில் அக்கினேனி மற்றும் ஜைனாப் ரவ்த்ஜியின் திருமணம் குறைவான நேர்த்தியுடன் ஒரு மாஸ்டர் கிளாஸாக இருந்தது, தெலுங்கு பாரம்பரியத்தை அமைதியான ஆடம்பரத்துடன் கலக்கிறது. விருந்தினர் பட்டியலில் தென்னிந்திய சினிமா ராயல்டி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கத்தை கொண்டாடுகிறார்கள். ஒரு கலைஞரும் வாசனை திரவிய ரசவாதியும் ஜைனாப் தனது தனித்துவமான பாணியை நிகழ்விற்கு கொண்டு வந்தார், நிஜாமி-ஈர்க்கப்பட்ட பாணியின் எதிர்காலத்தை சுட்டிக்காட்டினார். டோலிவுட்டின் கோல்டன் பாய், அகில் அக்கினேனி இந்த ஆண்டின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட கொண்டாட்டத்தை வழங்கியபோது யாருக்கு பாலிவுட் பெரிய கொழுப்பு திருமணம் தேவை? ஜூன் 6, 2025 அன்று, அவரது புகழ்பெற்ற தாத்தா அகினேனி நாகேஸ்வர ராவ் கட்டிய அன்னபூர்ணா ஸ்டுடியோவின் ஏக்கம் கூரையின் கீழ், நடிகர் தொழில்முனைவோரும் கலைஞருமான ஜைனாப் ரவ்த்ஜியுடன் முடிச்சு கட்டினார்.காலமற்ற பாரம்பரியத்திற்காக மேலதிக தியேட்டரிகளைத் தள்ளி, அகில் ஒரு உன்னதமான வெள்ளை சட்டை மற்றும் பஞ்சாவில் திருமண பேரின்பத்தில் இறங்கினார், மரபுரிமையில்…

Read More

புதுடெல்லி: வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதனை தொடங்கிவைத்தார். இந்தியாவின் வக்பு சொத்து நிர்வாக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு, சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ‘UMEED’ போர்ட்டலை இன்று தொடங்கிவைத்த அவர், இந்தப் போர்ட்டல் தொழில்நுட்ப மேன்மைப்படுத்தலைவிட கூடுதல் சிறப்பு உடையது என்று கூறினார். சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு இது ஓர் அடையாளம் என்று குறிப்பிட்ட கிரண் ரிஜிஜூ, அந்த சமூகத்துக்கு சொந்தமான வக்பு சொத்துகள் ஏழை முஸ்லீம்களுக்கு பயனுள்ள வகையிலும், நியாயமாகவும் பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும் என்றார்.…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் – வின்’ (win – win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது. பொங்கி வழிந்த ‘ப்ரோமேன்ஸ்’ – அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருடன் ஒட்டி உறவாடியவர் எலான் மஸ்க். அதன் பின்னரும் அந்த உறவு ‘இதெல்லாம் ஓவர்’ என்று செனட் உறுப்பினர்கள் சொல்லும் அளவுக்கு சென்று கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் என்றால், உலகின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்ட, ஒப்பந்தங்கள் கையெழுத்தான அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் மஸ்கின் குழந்தை விளையாடியது வரை…

Read More