Author: admin

கரூர்: தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தற்போது தேமுதிகவின் வளர்ச்சி மட்டுமே எங்கள் நிலைப்பாடாக உள்ளது. தவெக-தேமுதிக கூட்டணி அமையுமா என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில், பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11-ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், 12-ம் தேதி வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில்…

Read More

உடல் எடையை குறைப்பதற்கு நிறைய ஒழுக்கம் தேவைப்படுகிறது, மேலும் இது வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல காரணிகளின் கலவையாகும். இருப்பினும், இதையெல்லாம் செய்வதைத் தவிர, உங்கள் அட்டவணையில் சில சீரற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக நீங்கள் இன்னும் உடல் எடையை குறைக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? எல்லா “சரியான” காரியங்களையும் செய்வதன் மூலம் மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வழக்கத்துடன் ஒட்டிக்கொள்வதன் மூலமும் எடையை குறைக்கிறோம், இது சீரானது, மேலும் நீண்ட காலமாக பின்பற்றப்படலாம். உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் உடல் எடையை குறைக்க உதவும் 5 இரவு பழக்கவழக்கங்கள் இங்கே. அவர்களுடன் இணக்கமாக இருங்கள், முடிவுகளை நீங்களே பாருங்கள் …

Read More

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ‘அன்றைய தினம் சென்னையில் கனமழை பெய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், எங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை’ என்று கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுதிய 13 பேர், குன்றத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 2 பேர், கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர் ஒருவர் என 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்…

Read More

சென்னை: வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 12-வது இடத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகி்த்த ஆர்எம்டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நீதிபதி டீக்காராமன் ஆர்.எம்.திருவேங்கடம், மீனாட்சி தம்பதிக்கு கடந்த 1963 ஜூன் 9 அன்று பிறந்தார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் வூர்ஹீஸ் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பையும், வேலூர் வூர்ஹீஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். சென்னை பல்கலைக்கழகத் தின் ராமானுஜம் நிறுவனத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1988-ம் ஆண்டு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1988 நவ.11 அன்று பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு…

Read More

சென்னை: கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிக அளவு கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். கோயில் சொத்துகளையும், பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோயில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது. எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டுமொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக்கூட விட்டு வைக்காமல் திருடுவதா? இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாக…

Read More

உடுமலை: பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த உடுமலை இளம் பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை விஜிராவ் நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி. உடுமலை தமிழிசை சங்கத்தின் துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி எஸ்.ராஜலட்சுமி. உடுமலை அருகேயுள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக உள்ளார். இவர்களது மகள் எம்.ஆர்.காமாட்சி (29). கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா கல்லூரியில் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் முடித்த இவர், பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் அனலிஸ்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கான வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதைக் காண தோழியுடன் சென்ற காமாட்சி, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெங்களூரு விரைந்தனர். நேற்று பகல் 2 மணியளவில் காமாட்சியின்…

Read More

திருச்சி: தமிழக கோயில்களில் பக்தர்களின் செலுத்தும் காணிக்கை மாதம் ரூ.53.70 கோடி அறநிலையத் துறைக்குச் செல்லும் நிலையில், 90 சதவீத கோயில்களில் இரவு விளக்குகள் எரிவதில்லை என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார். திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி- ஜம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையினர் பக்தர்களின் காணிக்கை பணத்தை, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து தினமும் ரூ.1.79 கோடி என, மாதத்துக்கு ரூ.53.70 கோடியை எடுத்துச் செல்கின்றனர். அதேநேரத்தில், மின் கட்டண செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயிலை அதிகாலையில் திறக்காமல், காலை 9 மணிக்கு மேல் திறக்கின்றனர். கோயில் கருவறையில் கடந்த 50 ஆண்டுகாலமாக பூஜை செய்பவருக்கு தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 சதவீத கோயில்களில் இரவு நேரங்களில் விளக்குகள்…

Read More

வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ என்னவோ, தொகுதிக்கு வெளியே வசித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலுக்காக சொந்தத் தொகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு மக்கள் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ​பாஜக-வைச் சேர்ந்த நமச்​சி​வா​யம் முதல்​வர் ரங்​க​சாமி​யின் அண்​ணன் மகளை திரு​மணம் செய்​தவர் என்​ப​தால், அவருக்கு மரு​மகன் முறை. 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் வில்​லிய​னூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட இவர், வெற்​றி​பெற்று அமைச்​சர​வை​யிலும் இடம்​பிடித்​தார். 2016-ல் மீண்​டும் வில்​லிய​னூரில் போட்​டி​யிட்ட இவரை முதல்​வர் வேட்​பாளர் என பிரகடனம் செய்​தது காங்​கிரஸ். அந்​தத் தேர்​தலிலும் நமச்​சி​வா​யம் வெற்​றி​பெற்​றாலும் அவரை முதல்​வர் நாற்​காலி​யில் அமர​விட​வில்லை காங்​கிரஸ். அவருக்​குப் பதிலாக நாராயண​சாமி முதல்​வ​ரா​னார். நமச்​சி​வா​யம் பொதுப்​பணித்​துறைக்கு அமைச்​ச​ரா​னார்.…

Read More

புதுச்சேரி: துரோகம் செய்தோரை காங்கிரஸில் சேர்க்கமாட்டோம். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: தமிழகத்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு உரிய பாதுகாப்பை அந்நாட்டு அரசு தராதது கண்டிக்கத்தக்கது. வாழ்வாதாரம் அவர்களுக்கு தரப்படுகிறதா என்பதையும் இந்திய அரசு கவனிக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதன் மூலம் தென் மாநிலங்களை மத்திய ரயில்வே அமைச்சர் புறக்கணிப்பது தெளிவாகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காததற்கு விமான பயணத்தை அவர் தவிர்ப்பதும், அப்பா பைத்தியசாமி குருபூஜையும் காரணம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். ரங்கசாமிக்கு உயிர் மீது பயமா? முதல்வர் விமானத்தில் செல்ல பயம் என்றால் ரயிலிலோ, காரிலோ சென்றிருக்கலாம். பிரதமர் அறிவித்த கூட்டத்தை புறக்கணிக்க இது ஓர் காரணமா என முதல்வர் ரங்கசாமி விளக்கம் தரவேண்டும். மாநில அந்தஸ்து…

Read More