Author: admin

மதிப்புகளைப் பிரசங்கிக்காதீர்கள், அவற்றை வாழ்கநேர்மை, இரக்கம் அல்லது ஒழுக்கம் குறித்த விரிவுரைகளை வழங்குவதற்கு பதிலாக, சத்குரு ஒவ்வொரு நாளும் அந்த மதிப்புகளை உருவாக்க வலியுறுத்துகிறார். குழந்தைகள் கீழ்ப்படிதலை விட அமைதியாக கவனிக்கிறார்கள், மேலும் அவர்கள் சொற்களை அல்ல, இருப்பின் மூலம் தன்மையை உறிஞ்சுகிறார்கள்.

Read More

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள பூச்சுபல்லி எனும் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனாதையாய் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பாலாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த சூட்கேஸில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாலாப்பூர் உதவி போலீஸ் ஆய்வாளர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் போலீஸ் குழுக்கள் ஏற்பாடு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளியை வெறும் 48 மணி நேரத்தில் பாலாப்பூர் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேபாளத்தை சேர்ந்த தாரா…

Read More

கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 38 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாருக்கான் 25, ஆந்த்ரே சித்தார்த் 25 ரன்கள் சேர்த்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர், அஸ்வின், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 150 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திண்டுக்கல் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஷிவம் சிங் 50 பந்துகளில், 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார்.

Read More

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (89) நேற்று காலமானார். அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. கடந்த 1988 முதல் 1998-ம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் எம்.எஸ்.ஜனார்த்தனம். தனது பதவிக் காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை அளித்திருந்தார். பின்னர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில நுகர்வோர் ஆணையம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க பரிந்துரை மற்றும் தீர்ப்புகளை வழங்கிய எம்.எஸ்.ஜனார்த்தனம், செஞ்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் நேற்று அதிகாலை காலமானார். இதையடுத்து,…

Read More

எந்த காரணமும் இல்லாமல் ஏதாவது செய்யுங்கள், விளைவு இல்லை, அழுத்தம் இல்லை, மகிழ்ச்சி. உங்களுக்கு ஏதாவது உணர வைக்கும் புத்தகத்தைப் படியுங்கள். வண்ணம் தீட்டவும், சமைக்கவும், பின்னவும், எழுதவும், தூங்கவும் அல்லது பகல் கனவு கூட. உங்கள் வேலை தலைப்பு அல்ல, உங்களைப் போல உணரும் ஒன்றைத் தேர்வுசெய்க. நீங்கள் மகிழ்ச்சி அடிப்படையிலான செயலில் ஈடுபடும்போது, ​​உங்கள் மூளை ஒரு சமிக்ஞையைப் பெறுகிறது: “நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.” நீங்கள் நிகழ்ச்சியை நிறுத்துகிறீர்கள். நீங்கள் இருக்க ஆரம்பிக்கிறீர்கள். இந்த விளையாட்டு மற்றும் இன்பம் செயல்கள் குணப்படுத்துதல் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறைக்கு முக்கியமானவை. சாதனைகளுக்கு வெளியே உங்கள் அடையாளம் இருக்க இடத்தை அவை அனுமதிக்கின்றன. இந்த வகையான நேரம் வீணாகாது; நீங்கள் அதைத் தவிர வேறு யாரும் பார்க்காவிட்டாலும் கூட, இது ஆழமாக மறுசீரமைப்பு செய்கிறது.

Read More

புதுடெல்லி: உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்தது. இந்நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழுவும் ஒன்று. இந்தக் குழுவில் எம்.பி.க்கள் சர்பராஸ் அகமது, காந்தி ஹரிஷ் மதுர் பாலயோகி, சஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி சூர்யா, அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரஞ்சித் சந்து…

Read More

நார்த்தம்டன்: இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கருண் நாயருடன் இணைந்து கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய கருண் நாயர் 71 பந்துதுகளில், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது. சீராக ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல் 151 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். 56 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்தியா ஏ அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 101, துருவ் ஜூரெல் 50…

Read More

சென்னை: சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு வெட்டியெடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கல்குவாரி உரிமதாரர்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. சுற்றுசூழல் ஒப்புதல் பெறாமல் 2016 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து குவாரி உரிமம் பெற்றிருந்த 82 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என கூறியுள்ள நிலையில், ஒப்புதல் இல்லாமல் கல் குவாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்ட…

Read More

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இதனிடையே புதிய வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, “இந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. இதனால் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் வைத்துள்ளளது. மேலும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் வக்பு சட்டத்தில் உள்ள சில அம்சங்களை தற்போது செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.…

Read More

மதுரை: மதுபான கொள்முதல், விற்பனை விவரங்களை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்றக் கோரி வழக்கில், அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் நிறுவனங்களின் விவரம், அதிக அளவில் விற்பனையான மதுபானத்தின் விவரம், விலை, உரிமக் கட்டணம், சிறப்புக் கட்டணம், வருவாய் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். 2016-2017-க்​குப் பிறகு… ஆனால், 2016-2017-க்குப் பிறகு ஆண்டறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சில மது வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, ரசீது வழங்காமல் விற்பனை செய்வது, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து மட்டும் அதிக மது வகைகள் கொள்முதல் செய்யப்படுவது போன்ற விவரங்கள் தெரியவந்தன. குறிப்பிட்ட நிறுவனங்கள்… டாஸ்மாக் நிறுவனம் 11 நிறுவனங்களிடமிருந்து 125 வகையான மது வகைகளையும், 7 நிறுவனங்களிடமிருந்து…

Read More