Author: admin

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகிறார். அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் கங்குலி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூலை 18-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ‘சையாரா’ என்ற தலைப்புப் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்ததாக மோஹித் சூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல புத்தகங்களைச் சேகரிக்க விரும்புபவர்களைப் போல மெல்லிசைகளையும் பாடல்களையும் சேகரிப்பதும் பிடிக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்துத் தொகுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், போரூர் – பூந்தமல்லி வரையிலான மற்றொரு பாதையில் (கீழ் பாதை) ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான ஒரு பாதையில் (மேல் பாதை) ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்ரல்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு , மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதிபர்…

Read More

கியாரா அத்வானிஇந்த கவர்ச்சியான மஞ்சள் ஷராரா தொகுப்பில் அதை புதுப்பாணியாகவும், மாற்றியமாகவும் வைத்திருந்த அவர், எரியும் ஷராரா பேண்ட்டுடன் ஒரு தைரியமான குறுகிய ரவிக்கை அணிந்திருந்தார், ரிதிகா மிர்ச்சந்தனியின் அலமாரிகளில் இருந்து எடுக்கப்பட்டார், வழக்கமான துப்பட்டா தோற்றத்தைத் தள்ளிவிட்டார். அதற்கு பதிலாக, அவர் ஒரு சுத்த, பெரிதும் அலங்கரிக்கப்பட்ட ஜாக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார், இந்த ஸ்டைலான கிளப்பின் திட்டவட்டமான உறுப்பினராக இருந்தார்.

Read More

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இதனிடையே புதிய வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, “இந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. இதனால் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் வைத்துள்ளளது. மேலும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் வக்பு சட்டத்தில் உள்ள சில அம்சங்களை தற்போது செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.…

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் என்னென்ன பாடப்பிரிவுகள், பட்டமேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஜூன் 9-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் ஏற்கனவே சிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்து மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி (Open House 2025) ஜூன் 9-ம் அன்று நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கிண்டி பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறையில் வழங்கப்படும் பிஇ சிவில் இன்ஜினியரிங், பிஇ ஜியோ- இன்பர்மேட்டிக்ஸ், பிஇ சிவில் இன்ஜினியரிங் (தமிழ் வழிக்கல்வி), பிஇ சிவில் இன்ஜினியரிங் (பகுதி நேர படிப்பு) குறித்தும், சிவில் இன்ஜினியரிங் மற்றும் அது தொடர்புடைய படிப்புகளில் வழங்கப்படும் எம்இ, எம்டெக் மேற்படிப்புகள்…

Read More

அகமதாபாத்: யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ், புனே ஜாகுவார்ஸ் அணியுடன் மோதியது. இதில் கோவா சேலஞ்சர்ஸ் 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய், 2–1 (11–10, 11–9, 10–11) என்ற செட் கணக்கில் அல்வாரோ ரோபிள்ஸை வீழ்த்தினார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கோவா அணியின் கிருத்விகா சின்ஹா ராய் 2–1 (11–5, 5–11, 6–11) என்ற கணக்கில் ஸியோன் லீயை தோற்கடித்தார். 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் கோவா அணியின் ஜெங் ஜியான்-ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 (11-9, 11-5, 11-9) என்ற கணக்கில் புனே அணியின் ஸியோன் லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை வென்றது. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் புனே அணியின் அனிர்பன் கோஷ் 2-1 (11-9,…

Read More

அறிவியல் புனைகதையைக் கூடச் சுவாரஸ்யமாக எழுதிவிடலாம்; ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதையை நாவலாக எழுத முடியாது என்று சலித்துக்கொள்கிறார் எழுத்தாளர் ஜோதி ராமையா (சத்யராஜ்). ஆனால், ஆட்டோ ஓட்டுநரான கண்ணனின் (காளி வெங்கட்) வாழ்க்கையை உற்றுநோக்கி, நடுத்தரக் குடும்பம் ஒன்றின் கதையை அவர் நாவலாக எழுத முயலும்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார். தன்னால் அடுத்தக் கட்டத்தில் அடி எடுத்து வைக்க முடியாது என்று தெரிந்தும், வாரிசுகளையாவது தலைநிமிரச் செய்துவிட வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் அப்பாவின் வாழ்க்கைப் பக்கங்கள்தான் கதை. சத்யராஜை வைத்துக் கதை சொன்ன உத்தி, தொடக்கத்தில் தொந்தரவுபோல் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அவரது குரலையும் முகத்தையும் தேடத் தொடங்கிவிடுகிறது மனம். நடுத்தரக் குடும்பங்களுக்கேயுரிய தன்னிறைவற்ற பொருளாதாரம் உள்ளிட்ட போதாமைகளைத் தாண்டி, கண்ணனின் குடும்பம் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதைச் சித்தரிக்க, தன்னுடைய கதாபாத்திரங்களை இயக்குநர் கார்த்திகேயன் மணி கையாண்ட விதத்தில் யதார்த்தம். கண்ணனின்…

Read More

சென்னை: ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சர்வதேச லெவல் கிராஸிங் வாரமாக கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், சர்வதேச லெவல் கிராஸிங் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியை, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் கூடுதல் ரயில்வே மேலாளர் தேஜ் பிரதாப் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் எண்- 26 முன்பு, ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி…

Read More

புதுடெல்லி: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து முக்கிய உரிமத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இருந்த ஒரு பெரிய தடை நீங்கியுள்ளது. உரிமம் பெற்றுள்ளதையடுத்து இந்தியாவில் அந்த நிறுவனம் மிக வேகமாக வணிக நடவடிக்கைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து உரிமம் பெற்ற மூன்றாவது பெரிய நிறுவனம் ஸ்டார்லிங்க் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் விண்ணப்பங்களையும் தொலைத்தொடர்பு அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், உரிமம் பெற்றது குறித்தான கேள்விக்கு ஸ்டார்லிங்க் மற்றும் தொலைத்தொடர்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. இந்தியாவில் வணிக ரீதியிலான செயல்பாடுகளுக்கு உரிமம் பெறுவதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனம் 2022 முதல் காத்திருந்த நிலையில், தேசப் பாதுகாப்பை காரணம்காட்டி உரிமம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து அதற்கான அனுமதி…

Read More