எழுத்தாளர் அகிலன், கல்கியில் தொடராக எழுதிய ‘பாவை விளக்கு’ கதையை அதே பெயரில் சினிமாவாக இயக்கினார், ஏ.பி.நாகராஜன். சிவாஜி, பண்டரிபாய், குமாரி கமலா, சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம் நடிப்பில் அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே, அகிலன் எழுதிய ‘வாழ்வு எங்கே?’ நாவலையும் திரைப்படமாக்க, திருப்பூர் ஸ்பைடர் என்ற பனியன் நிறுவனம் அதன் உரிமையை பெற்றது. ஸ்பைடர் பிலிம்ஸ் மூலம் அதை ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் தயாரிக்க, அதையும் ஏ.பி.நாகராஜனே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். தவறான புரிதல் காரணமாக வீட்டையும் காதலி ராதையையும் விட்டு வெளியேறி, சர்க்கஸ் ஒன்றில் சேர்கிறார், அச்சக தொழிலாளியாக நாயகன் சந்திரன். அங்கு அவர் சர்க்கஸ் கலைஞரான லீலாவைக் காதலிக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் போது, பார்வையாளராக வரும் காதலி ராதையைக் கண்டதும் தன்னை மறந்து சர்க்கஸின்போது கீழே விழுந்து விடுகிறார். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவருக்கு என்னவாகிறது? காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?…
Author: admin
சென்னை: ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், ரயில் பயணத்தின்போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இருப்பினும் ஆன்லைனில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடும் பிரயத்தனமாக உள்ளது. முன்பதிவு ஆரம்பித்த சில நொடிகளிலேயே ‘கன்பார்ம்’ டிக்கெட் முடிந்து ‘வெயிட்டிங்’ லிஸ்ட்டுக்கு சென்று விடுகிறது. மேலும் தொழில்நுட்ப காரணங்களாலும் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இவற்றை ஆய்வு செய்து களைய…
முன்பை விட இந்தியர்களை விரைவாகப் பிடிக்கும் ஒரு நோய் நீரிழிவு நோய். பெரும்பாலும் ‘சர்க்கரை’ என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அதிகப்படியான சர்க்கரையின் விளைவாகும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். உடலுக்கு போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது அதை திறம்பட பயன்படுத்தாதபோது இது நிகழ்கிறது, பின்னர் அது உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கிறது, இது காலப்போக்கில் கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள் மற்றும் இதயத்தை கூட பாதிக்கும்.நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க டன் மருந்துகளை எடுக்க வேண்டும், தினமும் தங்கள் இரத்தத்தை பரிசோதிக்க வேண்டும், அல்லது வாரத்திற்கு ஒரு முறை, உணவுக்குப் பிறகு ஒரு இன்சுலின் ஷாட்டை எடுக்க வேண்டும், சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல், மேலும் பல. மோசமான பகுதி? இது முற்றிலும் குணப்படுத்த முடியாதது, ஆனால் நிர்வகிக்க முடியும்.
கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஐசிஐசிஐ வங்கி கிளை உள்ளது. இங்கு வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராக பணியாற்றியவர் சாக் ஷி குப்தா. இவர் குறைந்த கால கட்டத்தில் அதிக பணத்தை சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த வைப்பு நிதியை சிறிது சிறிதாக எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்குச் சந்தையில் சாக் ஷிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதனால், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் அந்தப் பணத்தை மீண்டும் செலுத்த முடியவில்லை. எனினும், பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்க, கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் 41 வாடிக்கையாளர்களின் வங்கி வைப்பு நிதியில் இருந்து ரூ.4.58 கோடியை எடுத்துள்ளார். இந்நிலையில், ஒரு வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து தனது வைப்பு நிதி பற்றி விசாரித்துள்ளார். அப்போதுதான் வைப்பு நிதியில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம்…
ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 9-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், சீனாவின் வெய் யி-யுடன் மோதினார். இதில் குகேஷ் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 40-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை பெற்றார். நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கார்ல்சன் 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இன்னும் ஒரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 13 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பேபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன்…
லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. ஆக.14-ல் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஆமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆமிர்கான் நடித்துள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படம் வரும் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட ஆமீர்கானிடம் இதுபற்றி கேட்டபோது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார். “லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோ கதையை வைத்திருப்பதாகவும்…
சென்னை: தமிழகத்தில் சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. இதுகுறித்து மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையரைக் கொண்ட 23 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.23 லட்சம், 227 முதியோர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2.27 கோடி மற்றும் 95 மாற்றுத் திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.95 லட்சம் என மொத்தம் 345 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்காக வழங்கப்படும் வாழ்வாதார நிதியை முறையாக பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் ரூ.2,400 விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 2 முதல் மே 19 வரை கிட்டத்தட்ட முழுமையான முற்றுகையை காசா எதிர்கொண்டது. மனிதாபிமானப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட்டன. அவையும் கடும் சர்வதேச அழுத்தத்திற்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. மனிதாபிமான உதவிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் பறிமுதல் செய்து ஆயுதம் ஏந்துவதாக குற்றம் சாட்டும் இஸ்ரேல், வழக்கமான ஐ.நா. உணவு விநியோகங்களை நிறுத்தியது. அதற்கு பதிலாக, மே 27-ல் சர்ச்சைக்குரிய மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி ரஃபாவில் உள்ள எஸ்டிஎப்1 என்ற வினியோக தளம் மூலம் மனிதாபிமானப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் ரூ.5 மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் 500…
தொடர்ச்சியான சோர்வு, அசாதாரண கட்டிகள் அல்லது வீக்கம் மற்றும் இருண்ட புள்ளிகள் அல்லது மஞ்சள் போன்ற தோல் மாற்றங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். நீடித்த இருமல், சுவாசிப்பதில் சிக்கல், விழுங்குவதில் சிரமம் அல்லது நாள்பட்ட அஜீரணம் ஆகியவை உள் சிக்கல்களைக் குறிக்கலாம். குடல் அல்லது சிறுநீர்ப்பை பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் புறக்கணிக்கப்படக்கூடாது, ஏனெனில் அவை புற்றுநோய் உள்ளிட்ட அடிப்படை நோய்களைக் குறிக்கக்கூடும்.
புதுடெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17-ம் தேதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு கனடா அரசு சார்பில் அழைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாதது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாகவே பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு…
