Author: admin

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தையும், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் திறந்துவைத்தார். மேலும், கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அப்போது, “துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்துக்கு எதிரானது, ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கும் கூட எதிரானது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பஹல்காமில் மனிதநேயம் மற்றும் காஷ்மீர் பெருமிதம் ஆகிய இரண்டின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.…

Read More

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் சனிக்கிழமை காலை அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகும். சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாக பெருந்திருவிழாவில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் ஸ்ரீ அம்மையப்பர் தவம்பெற்ற நாயகி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக அம்மையப்பர் பிரியாவிடை உடன் ராஜ அலங்காரத்திலும், அன்னை தவம்பெற்ற நாயகி மணக்கோலத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். அப்போது பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர். இதில் விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு…

Read More

அதிமுக ஆட்சி காலத்தில் (2011 – 2021) சுமார் எட்டாண்டு காலம் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். அப்போது சுகாதாரத்துறைக்கு அமைச்சராக இருந்த இவர், குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி அனுமதி அளித்தது, கரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கினார். இத்தனை சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். திமுக-வும் இவரைக் கண்டும் காணாமல் இருக்கிறது. 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய​பாஸ்​கருக்கு எதி​ரான பிரச்​சினை​களை எல்​லாம் அடுக்கி பிரச்​சா​ரம் செய்த திமுக, “கழக ஆட்சி வந்​ததும் கம்பி எண்ண வேண்டி இருக்​கும்” என கர்​ஜனை செய்​தது. அதன்​படியே ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகு விஜய​பாஸ்​கருக்கு எதி​ராக விறு விறு நடவடிக்​கை​கள் இருக்​கும் என அனை​வ​ரும் எதிர்​பார்த்​தார்​கள். ஆனால், வருடம் நான்​காகி​யும் அப்​படி எந்த நடவடிக்​கை​யும் பாய்ந்​த​தாக தெரிய​வில்​லை. வரு​மானத்தை…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் 2 பேர், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கோவிட் 19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கேரளா தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது, கேரளாவில் நேற்று ஒரே நாளில் 192 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத் (107), மேற்கு வங்கம் (58) மற்றும் டெல்லி (30) என நாடு தழுவிய அளவில் 498 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி முதல் மொத்தம் 1,276 பேர் மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இந்த ஆண்டில் கரோனா இறப்பு…

Read More

இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது, முதல் டெஸ்ட் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று ஆதாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து அணித்தேர்வுக்குழுவும் இதை உறுதி செய்துள்ளது. இன்னும் 15 நாட்களில் சசெக்ஸ் அணி டுர்ஹம் அணியுடன் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் மோதும் போது ஆர்ச்சரின் உடல்தகுதி தெரிந்து விடும். எனவே 2-வது இந்திய டெஸ்ட் போட்டிக்கு ஆர்ச்சர் அணிக்குள் வருவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. 30 வயதாகும் ஆர்ச்சர் முதல் தர கிரிக்கெட் ஆடியே 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக 2-வது போட்டியில் ஆடுவதாக இருந்தார், ஆனால் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்திய அணி உடனான தொடருக்கு ஆர்ச்சர் வந்தார்…

Read More

சென்னை: தமிழகத்தில் இணைநோய் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுவர்கள் விரைவில் குணமடைகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம், மகாராஷ்டிராவில் 17, கேரளாவில் 11, டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 7 பேர், தமிழகத்தில் 4 பேர் என மொத்தம் 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் கரோனாவால் இறந்த 4 பேரும் இணை நோய்கள் பாதிப்புள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் என்பதால், கரோனா இறப்பாகக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,…

Read More

உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜோசியாஹ்பிசிக், பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் சிந்துவதற்கு உங்கள் உணவில் குறிப்பிட்ட தின்பண்டங்களை இணைக்க அறிவுறுத்துகிறார். அவரது பரிந்துரைகளில் புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுக்கான அவுரிநெல்லிகள், ஆரோக்கியமான கொழுப்புகளுக்கான பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் மற்றும் குறைந்த கலோரி, அதிக புரத விருப்பத்திற்காக வெள்ளரிக்காயுடன் குடிசை சீஸ் ஆகியவை அடங்கும். எடை இழப்பு பயணத்தில் மக்களின் பொதுவான கவலைகளில் ஒன்று பிடிவாதமான தொப்பை கொழுப்பு. சுத்தமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சிகளையும் ஒட்டிக்கொண்டிருந்தாலும், அந்த நடுப்பகுதியைச் சுற்றியுள்ள அந்த வீக்கத்தை அகற்றுவது கடினம். ஆனால் விரும்பத்தக்க சிற்றுண்டிகளை சாப்பிடுவதன் மூலம் அந்த தொப்பை கொழுப்பை உருக முடிந்தால் என்ன செய்வது? ஆம், அது சரி. இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரபலமான உடற்பயிற்சி பயிற்சியாளரான ஜோசியாஹிபிசிக், தொப்பை கொழுப்பைக் சிந்த உதவும் உணவுகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். உணவு மற்றும் உடற்பயிற்சி விதிமுறைகளுடன் பல ஆண்டுகளாக சோதனை மற்றும் பிழைக்குப் பிறகு,…

Read More

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாக முன்வந்து பதவி விலகி உள்ளனர். குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, மறுநாள் (ஜூன் 4) பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோப்பையை வென்ற அணி வீரர்களைக் காண பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், நிகழ்ந்த தவறுக்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் E.S.ஜெய்ராம் ஆகியோர் இன்று…

Read More

ஜூன் 11-ம் தேதியன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தருணம், தேசமே எங்கள் அணியின் பின்னால் இருக்கிறது என்று 360 டிகிரி பேட்ஸ்மேன், ‘ஒயிட் ரிச்சர்ட்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சி வயப்பட்டுள்ளார். தனியார் டி20 லீக் கிரிக்கெட்டுகளின் பெருக்கமும் ஐசிசியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய அணியின் ஆதிக்கத்தினால் டெஸ்ட் போட்டி என்பதே இந்த 3 அணிகளுக்கும் இடையேயாகக் குறுக்கப்பட்டிருக்கும் வேளையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடுவது உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய தருணம் தான். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது: தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட்டிற்கு இது மிகப்பெரிய தருணம். லார்ட்ஸில் இறுதிப் போட்டி. ஒட்டுமொத்த தேசமும் எங்கள் அணியின் பின்னால் ஆதரவாகத் திரண்டெழும். வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். எனக்கு இந்த மோதல் மிகவும் உற்சாகம்…

Read More

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது படக்குழு. ‘TheFacesOfAA22xA6’ என்று ஹேஷ்டேகுடன் இது பகிரப்பட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 16 வினாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இயக்குநர் அட்லி, தீபிகா படுகோனிடம் கதையை விவரிக்கிறார். தொடர்ந்து ஸ்க்ரீன் டெஸ்ட் பணிகள் நடைபெறுகிறது. அதில் குதிரை மீது போர் வாளை ஏந்தியபடி தீபிகா பயிற்சி செய்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவும் அரசியின் வருகை என சொல்லி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2023-ல் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்த ‘ஜவான்’ படத்தில் தீபிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் கதையை…

Read More