திண்டிவனம் / சென்னை: மதுரைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ள நிலையில், தைலாபுரத்தில் கடந்த 22 நாட்களாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னைக்கு இன்று (ஜூன் 7) காலை பயணித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகள் வழி பேரன் ‘முகுந்தனுக்கு அரசியல் பட்டாபிஷேகம்’ செய்து வைத்த தனது தந்தையான பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே மோதல், ‘விரிசல்’ உருவானது. சென்னைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டணியை இறுதி செய்ய முடிவெடுத்த அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ஒருநாள் முன்னதாக ராமதாஸ் அறிவித்தார். இதனால் கூட்டணி இறுதியாகவில்லை. இந்நிலையில், 2 நாள் சுற்றுப் பயணமாக மதுரைக்கு உள்துறை…
Author: admin
நம்மில் பெரும்பாலோர் சாய் நீராவி கப் இல்லாமல் நாளைத் தொடங்க முடியாது. கருப்பு தேநீர், பால் மற்றும் மசாலாப் பொருட்களின் வசதியான கலவையா? தூய மந்திரம். இது ஒரு நள்ளிரவு பிக்-மீ-அப் அல்லது செய்திகளை ஸ்க்ரோலிங் செய்வதற்கு முன்பு நீங்கள் முதன்முதலில் பருகுவதாக இருந்தாலும், தேநீர் ஒரு பானத்தை விட அதிகம்-இது ஒரு சடங்கு. உங்கள் அன்பான சாய் அல்லது கிரீன் டீ உங்கள் சிறுநீரகங்களுடன் குழப்பமாக இருந்தால் என்ன செய்வது?ஆமாம், உங்கள் தினசரி கப்பா உங்கள் ஆத்மாவை வெப்பமாக்குவதை விட அதிகமாகச் செய்யக்கூடும் என்று மாறிவிடும் – இது உங்கள் சிறுநீரகங்களுக்கு சில சிரமத்தை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக நீங்கள் கப்பலில் செல்கிறீர்கள் அல்லது பிற ஆபத்து காரணிகளைக் கொண்டிருந்தால்.எனவே, என்ன பிரச்சினை?இது ஆக்ஸலேட்டுகளைப் பற்றியது-தேநீர் உட்பட பல தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் இயற்கையாகவே நிகழும் சேர்மங்கள். நீங்கள் அதிகமான ஆக்சலேட்டுகளை உட்கொள்ளும்போது, உங்கள் உடலால் அவற்றை சரியாகப் பறிக்க…
இஸ்லாமாபாத்: இந்தியா உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியதற்காக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகம்மது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமருடன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தகவல் தொடர்பு அமைச்சர் அத்தாவுல்லா தரார் ஆகியோர் உடன் சென்றனர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சவுதி அரேபிய பயணம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில், “சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், மக்காவில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்தார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்களின் போது, பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை…
சென்னை: சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: “நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி. கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை. இன்று வரை ‘கிளாம்பாக்கம் பரிதாபங்கள்’ ஓய்ந்த பாடில்லை. பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது…
கீவ்: ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஒரே இரவில் 206 ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து இந்த நகரம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள கார்கிவ் நகர மேயர் இஹோர் டெரெகோவ், கிழக்கு உக்ரைன் நகரமான கார்கிவ் மீது இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் மூலம்…
மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருவது முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் மாவட்ட கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது. அதன்பின் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரணியில் திரண்டு வருகிறோம். ஊகங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். மதுரைக்கு வந்த முதல்வரால் இந்த நகருக்கு என்ன நடந்தது?’ இந்த ஆட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம். சாக்கடை கால்வாயை துணியை வைத்து மூடியது தான் மிச்சம். முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து…
புது டெல்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறும் யூடியூப் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி ‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடம் உள்ள இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இந்த வீடியோ மக்களிடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இருப்பினும், மத்திய அரசு இந்த தகவல் ‘போலியானது’ என்றும், ரிசர்வ் வங்கி இத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்படவில்லை, அவை சட்டப்பூர்வமானவை. தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம்.…
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார். கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் மருத்துவர் ரத்தினம் இன்று உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது. மருத்துவர் ரத்தினத்தின் மறைவு பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தினகரன் இரங்கல்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 7) பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 7) கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.9,796 என விற்பனை ஆகிறது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம்…
கோவை: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று கோயம்புத்தூரில் உள்ள சிடிசிஏ – ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இடது கை பேட்ஸ்மேன் துஷார் ரஹேஜா 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். பிரதோஷ் ரஞ்ஜன் பால் 38, முகமது அலி 16 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபிஷேக் தன்வார், விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா அபராஜித்…
