திருப்பூர்: அரசு பேச்சுவார்த்தையின்படி கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. சங்க தலைவர் ச.ஈ.பூபதி தலைமை வகித்தார். அவிநாசி சங்க தலைவர் என்.எம்.முத்துசாமி, புதுப்பாளையம் சங்க தலைவர் வி.நடராஜ், கண்ணம்பாளையம் சங்க தலைவர் ஆர்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சுவார்த்தைப்படி சோமனூர் பகுதி ரகத்துக்கு 15 சதவீதமும், இதர பகுதி ரகங்களுக்கு 10 சதவீதமும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் அவிநாசியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம்…
Author: admin
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான நாக் கமிட்டியின் ஏ பிளஸ் (A+) அங்கீகாரம் கிடைத்துள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நாக் கமிட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தது. தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘ஏ’ கிரேடு தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது. மீண்டும் நாக் கமிட்டியின் அங்கீகாரம் பெற புதுச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாக் கமிட்டி ஆய்வு செய்தது. புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ்பாபு , கல்வித் திட்டங்கள், உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களை நாக் குழுவினருக்கு படக்காட்சிகளுடன் எடுத்துரைத்தார். இந்த முறையில் நாக் கமிட்டியினர் ஆன்லைன் மற்றும் நேரில் என இரண்டு வழிமுறைகளில் இந்த ஆய்வை நடத்தி சென்றனர். இந்நிலையில், நாக் கமிட்டியின் ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக…
கோவை: பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என கோவையில் இன்று (ஜூன் 7) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஜூன் 7) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களின் ரத்தம், வியர்வையை உறிஞ்சும் பாஜக அரசுப் பள்ளிக் கல்வி நிதி , பேரிடர் நிவாரண நிதி, தமிழக பங்களிப்பு நிதி போன்றவற்றை ஏன் கொடுக்கவில்லை? ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றது. மக்களைப் பதற்றத்தோடும், அச்சத்தோடு வைத்திருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ், பாஜக நினைக்கிறது. இதற்காகத் தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டைக் குஜராத், உத்திரப்…
நாள்பட்ட சிறுநீரக நோயின் 5 எச்சரிக்கை அறிகுறிகள் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது
சென்னை: இந்தியாவில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு டி200எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸும் அறிமுகமாகி உள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி73 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 32 மெகாபிக்சல்…
புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி எனும் மகத்தான வீரரை இந்திய அணியினர் மிஸ் செய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டது இதற்கு காரணம். இந்நிலையில், இது நடந்தால் விராட் கோலி தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவார். ஏனெனில், அவர் அந்த அளவுக்கு இந்த ஃபார்மெட்டை நேசிக்கிறார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்புகிறார். இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் கிளார்க் பேசியுள்ளார். “இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்தால் இது நடக்கலாம். தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு அவர் மீண்டும் விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள் என…
சென்னை: பிளஸ் 1 சேர்க்கைக்கு அரசு பள்ளிகளை அணுகும் மாணவ, மாணவிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயில சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையின் கல்விக்காக தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இடைநிற்றல் பெருமளவு குறைந்து இருப்பதும், உயர்கல்வி சேர்க்கையில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர் தேர்ச்சியில் 241 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது. இந்தப் பள்ளிகளில்…
இந்த பழக்கங்களைத் தொடங்குவதற்கு முன்பு, நீண்ட காலமாக உங்கள் சருமத்தின் உறுதியைப் பாதுகாக்க முடியும். ஆனால் தொய்வு ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், கவலைப்பட வேண்டாம். சிறிய, சீரான மாற்றங்கள் காலப்போக்கில் புலப்படும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உள் ஆரோக்கியத்துடன் மேற்பூச்சு கவனிப்பை இணைக்கவும் – சுத்தமாக சாப்பிடுங்கள், அடிக்கடி நகர்த்தவும், நன்றாக தூங்கவும், உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும்.உங்கள் முகம் உங்கள் மிகவும் புலப்படும் சொத்து – அதை அன்போடு நடத்துங்கள், மேலும் இது பின்னடைவு மற்றும் பிரகாசத்துடன் ஆதரவைத் தரும்.
சென்னை: உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளைப் பயில்வது தொடர்பாகத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி தற்போது அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி,அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாகப் பயில முடியும். அந்த படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காதபடி அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படலாம். யுஜிசியின்…
தெஹரான்: ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்கள். இது தவிர புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் “அதிக அளவிலான ஆபத்தை” ஏற்படுத்துபவை என குறிப்பிடப்பட்டுள்ளது.…
