Author: admin

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய 2 பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போரானது கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, 2 நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்…

Read More

மூலவர்: தான்தோன்றீஸ்வரர் அம்பாள்: குங்குமவல்லி தல வரலாறு: சூரவாதித்த சோழ மன்னன், காந்திமதி என்ற நாககன்னிகை மீது விருப்பம் கொண்டு, நாகலோகத் தலைவர் ஆதிசேஷனின் அனுமதி பெற்றுஅவளை மணந்து கொண்டான். சிவபக்தையான காந்திமதி திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை தினமும் வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பின் கர்ப்பவதியான அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறி வழிபாடு செய்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தானே அங்கு தோன்றி, “மகளே.. காந்திமதி.. கலங்க வேண்டாம். உனக்கு பிரசவம் ஆகும்வரை நான் மலையடிவாரத்திலேயே அமர்வேன். நீ என்னை அவ்விடத்திலேயே வணங்கலாம். நான் தான்தோன்றீஸ்வரர் என்ற அழைக்கப்படுவேன். பார்வதிதேவி உன்னை போன்ற பெண்களுக்கு தாயாக இருந்து பிரசவம் பார்ப்பாள். அவள் குங்குமம் காப்பாள், குங்குமவல்லி என்று அழைக்கப்படுவாள்” என்று திருவாய் மலர்ந்தார். அதன்படி ஈசன் அருளால் காந்திமதி குழந்தையைப் பெற்றெடுத்தாள். கோயில் சிறப்பு: தெற்கு பிரகாரத்தில்…

Read More

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம்(96), வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம்(96). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார். கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் மருத்துவர் ரத்தினம் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் இன்று(ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது.

Read More

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டனுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார். முன்னதாக, டேவிட் லாமி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: நாட்டில் தீவிரவாதம் சிறிதும் இருக்கக்கூடாது என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் தீவிரவாதம் வளர்வதை ஒருபோதும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுப்பதே எங்களது நோக்கம். பஹல்காமில் 26 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்காகவே நாங்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். எங்களது நிலையை, எங்கள் நட்பு நாடான பிரிட்டன் உள்ளிட்டவை புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம். பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது அதை மிகவும்…

Read More

நாகப்​பட்​டினம்: பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு நாகூர் தர்​கா​வில் நேற்று நடை​பெற்ற சிறப்​புத் தொழு​கையில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர். இறைதூத​ரான நபிகளாரின் தியாகத்தை நினை​வு​கூரும் வகை​யில், முஸ்​லிம்​கள் பக்​ரீத் பண்​டிகையை கொண்​டாடு​கின்​றனர். அதன்​படி, நாகை மாவட்​டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்​கா​வில் நேற்று பக்​ரீத் பண்​டிகை கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி அங்கு நடை​பெற்ற சிறப்​புத் தொழுகை​யில் ஏராள​மான முஸ்​லிம்​கள் பங்​கேற்​றனர். அப்​போது காசா​வில் அமை​தி​யும், சமா​தான​மும் நிலவ பிரார்த்​தனை செய்​யப்​பட்​டது. தொழுகைக்​குப் பின், ஒரு​வரையொரு​வர் ஆரத்​தழுவி பக்​ரீத் வாழ்த்​துகளை பகிர்ந்து கொண்​டனர். இதே​போல நாகை மாவட்​டத்​தில் உள்ள 66 பள்ளி வாசல்​களி​லும் பக்​ரீத் சிறப்புத் தொழுகை நடை​பெற்​றது. பின்​னர், ஆடு, மாடு, ஒட்​டகம் போன்​றவற்றை பலி​யிட்​டு, அவற்றை மூன்று சம பங்​கு​களாக பிரித்​து, ஒரு பங்கை உறவினர்​கள், நண்​பர்​களுக்​கும், மற்​றொரு பங்கை ஏழைகளுக்​கும்கொடுத்​து​விட்​டு, 3-வது பங்கை தாங்​கள்​ பயன்​படுத்​திக்​ கொண்டனர்.

Read More

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. பல இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான துணை மின் நிலையம் உள்ளது. இந்நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள ஒரு மின்மாற்றியில் திடீரெனத தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோவில்பட்டி, கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்மாற்றியில் ஆயில் அதிகம் உள்ளதால் வெப்பம் அதிகரித்து வெடித்துவிடக் கூடாது என்பதற்காக நுரை…

Read More

புஷ்-அப்களுக்கும் புல்-அப்களுக்கும் என்ன வித்தியாசம்?ஒரு உடற்பயிற்சி கூடம் அல்லது பயிற்சித் திட்டத்தில் நீங்கள் காணும் மிகவும் பிரபலமான மேல் உடல் உடற்பயிற்சிகளில் இரண்டு புஷ்-அப்கள் மற்றும் புல்-அப்கள். அநேகமாக மிகவும் பிரபலமான பயிற்சிகளில் ஒன்று புஷ்-அப் ஆகும். புல்-அப்களைப் போலவே, புஷ்-அப்களும் மிகவும் எளிதான உடற்பயிற்சிகளாகும், அவை எந்தவொரு இடத்திலும் (கிட்டத்தட்ட) செய்யப்படலாம் மற்றும் பலவிதமான தசைக் குழுக்களைச் செய்ய முடியும். அடிப்படை பயிற்சிகளுக்காக நீங்கள் உங்கள் சொந்த உடல் எடையுடன் பயிற்சி பெறுகிறீர்கள், எனவே உங்களுக்கு தேவையானது நீங்களே மட்டுமே. புஷ்-அப்களுக்கு கூடுதலாக, புல்-அப்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதற்கான மற்றொரு பெயர் “உடல் எடை உடற்பயிற்சி”. அவர்களுக்கு இடையே முதன்மை வேறுபாடு? இந்த இடுகையில், நாங்கள் அதைக் குறிவைப்போம், அதே போல் அவர்கள் குறிவைக்கும் தசைகள் மற்றும் இரண்டு பயிற்சிகள் குறித்து அடிக்கடி கவலைகள் கேட்கின்றன. புல் அப்களைதோள்கள் மற்றும் வயிற்று தசைகளை…

Read More

சென்னை: தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், தனியார் நிர்வாகங்கள் தங்களுக்கு சேர வேண்டிய தொகை நிலுவையாக உள்ள காரணத்தை முன்னிறுத்தி, 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்காமல் மாணவர் சேர்க்கையை மறுத்து வருகின்றன. பள்ளிகள் திறந்து ஒருவாரம் ஆன பின்பும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு…

Read More

தமிழகத்தில் இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், 11-ம் தேதி கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், 13-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும்…

Read More

தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒடிஆர் எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெறுவோருக்கு 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எழுதலாம். தமிழகத்தில் இத்தேர்வை மத்திய அரசு சார்பில் அரசு தேர்வுத் துறை நடத்துகிறது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-2026) தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வித்துறை, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள…

Read More