மழைக்காலத்தில் உங்கள் வீட்டிற்கு எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல், எலிகள் மற்றும் கொறித்துண்ணிகள் பல சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும், அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தானவை. உங்கள் உறுப்புகளை பாதிக்கும் ஹந்தா வைரஸிலிருந்து அமெரிக்காவில் சமீபத்திய இறப்புகள், எலிகள் ஏற்படுத்தக்கூடிய பல நோய்களைப் பற்றி உரையாடலைத் தூண்டியுள்ளன. கூடுதலாக, பலவிதமான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்கள் வீட்டு எலிகள் மற்றும் பிற கொறித்துண்ணிகளால் பரவுகின்றன. அவற்றில்:புபோனிக் பிளேக்”பிளாக் பிளேக்” என்றும் அழைக்கப்படும் புபோனிக் பிளேக் மற்றும் அதன் மாறுபாடுகள் மிகவும் வரலாற்று ரீதியாக பேரழிவு தரும் எலி-பரவும் நோய்களில் ஒன்றாகும். மனிதர்கள் எலி பிளேஸால் கடிக்கப்படும்போது, பரிமாற்றம் நடைபெறுகிறது. இடைக்காலத்தில் இந்த பிளேக்கிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர், இது எலிகள் மீது கொண்டு செல்லப்பட்ட பிளேஸால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. எலி தொற்றுகள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை, ஏனெனில் அவை டைபஸ், ஹந்தா வைரஸ் மற்றும் புபோனிக் பிளேக் உள்ளிட்ட நோய்களை பரப்ப முடியும்.ஹந்தவைரஸ்ஹன்டவைரஸ் எனப்படும் ஒரு…
Author: admin
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் தொடர் என்கவுன்டர் சம்பவங்களில் இரு முக்கிய தலைவர்கள் உட்பட 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர். சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசியப் பூங்காவின் அடந்த வனப் பகுதிக்குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த 3 நாட்களில் நடைபெற்ற தொடர் என்கவுன்ட்டர் சம்பவங்களில் 2 பெண்கள் உட்பட 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் நரசிம்மாசலம் என்கிற சுதாகர், பாஸ்கர் என்கிற மைலரபு அடெல்லு ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவர். இவர்களில் சுதாகர் பற்றிய தகவலுக்கு ரூ.40 லட்சமும் பாஸ்கர் பற்றிய தகவலுக்கு ரூ.45 லட்சமும் கூட்டு வெகுமதியாக சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தன. சுதாகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் கடந்த 4-ம் தேதி தேடுதல் வேட்டை தொடங்கினர். என்கவுன்ட்டரில் இறந்த மற்ற…
செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினனார். ஜேமி ஸ்மித் 38, ஜேக்கப் பெத்தேல் 23 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 189 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக எவின் லீவிஸ் 39, ராஸ்டன் சேஸ் 24, ஜான்சன் சார்லஸ் 18, ரொமாரியோ ஷெப்பர்டு 16, ஆந்த்ரே ரஸ்ஸல் 15…
மதிமுக-வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை தராவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் எனச் சொன்னார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்போது, “வைகோவுக்கு ராஜ்யசபா சீட் தராதது வருத்தமே” என்று பளிச்சென தனது கருத்தைச் சொல்லி இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மதிமுக நிர்வாகிகளுக்கும் இந்த வருத்தம் இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக மவுனம் காக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு சட்டமன்றத் தேர்தலிலாவது மதிமுக-வுக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமா என்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக துரை வைகோவிடம் பேசினோம். மதிமுக-வின் 31 ஆண்டு கால பயணத்தில், தனித்தன்மை பெற்ற இயக்கமென பெருமைப்படும் இரண்டு விஷயங்களைக் கூற முடியுமா? திராவிட இயக்க கோட்பாடுகளில் சமரசமின்றி பயணிக்கிறோம். தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலனுக்காக தன்னலம் கருதாமல் பாடுபடுகிறோம். தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வெற்றி பெறுகிறோம். 25 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலை…
இந்தியாவில் 11 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை 27% – லிருந்து 5.3% ஆக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏழ்மை நிலை தொடர்பாக உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 நிதியாண்டில் இந்தியாவில் பரம ஏழைகள் எண்ணிக்கை 34.44 கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் 7.52 கோடியாகக் குறைந்துள்ளது. 11 ஆண்டில் 26.9 கோடி பேர் பரம ஏழைகள் என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு 27.1 சதவீதமாக இருந்த பரம ஏழைகளின் விகிதம் இப்போது 5.3% ஆக குறைந்துள்ளது. கடந்த 2011-12-ல் நாட்டின் ஒட்டுமொத்த ஏழைகளில் 65 சதவீதம் பேர் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2022-23-ல் ஏழைகள் எண்ணிக்கை குறைந்ததற்கு (3-ல் 2 பங்கு) இந்த மாநிலங்கள் முக்கிய…
தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலாகப் போராடி தனது உயிரை தியாகம் செய்தவர் குதிரைத் தொழிலாளி சையத் ஆதில் ஷா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கத்ரா- ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்து நின்ற ஒரே வீரர் குதிரையேற்ற வீரரா சையத் ஆதில் ஷா. வயிற்றுப்பிழைப்புக்காக சுற்றுலாப் பயணிகளை தனது குதிரையில் ஏற்றிச் சென்று மகிழ்விக்கும் தொழிலை செய்து வந்தார். தீவிரவாதிகள் சுட்டதில் அவரும் உயிரிழந்தார். தீவிரவாதிகளைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து துணிச்சலாகப் போராடியவர் அவர். அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அந்த தீரமிக்க இளைஞன், தனது குடும்பத்தினரின் வாழ்க்கைக்காக சுற்றுலாப் பயணிகளை குதிரைகளில் ஏற்றி…
ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவன அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் அனந்தவரம்-நெக்கள்ளு சாலையில் அலுவலகத்தை நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இ-8 சாலையில் சர்வே எண் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நிலப்பரப்பில் சர்வே நடைபெற்றது. இதில் 143 ஏக்கர் நிலம் கூகுள் நிறுவனத்துக்கு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலை கூகுள் நிறுவன அதிகாரிகள், ஆந்திர அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தங்களின் ஒப்புதலை தெரிவித்துள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவை இந்த இடத்துக்கு அருகில் வர உள்ளதால், ஆந்திர அரசு வழங்குவதாக தெரிவித்த நிலத்தை பார்த்தவுடன் கூகுள் நிறுவன அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். விரைவில் இங்கு இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். திருப்பதியில் புகழ்பெற்ற கோவிந்தராஜர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் மாட வீதிகளில் கோவிந்தர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் உற்சவ மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். இதையடுத்து மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு கஜ வாகனத்தில் கோவிந்தர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், நடனக் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் செல்வாக்கை திமுக இழந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் அச்சுந்தன் வயலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆளும் திமுக அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. ஆனால், திட்டமிட்டபடி வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெறும். அதிமுக, பாஜக கூட்டணி அமைந்ததும், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். நாளை (இன்று) காலை மீனாட்சி அம்மன் கோயிலில்…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்துக்காக பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ராவை, ஹரியானா போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். கடந்த வாரம் மற்றொரு யூடியூபர் ஜஸ்பிர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இருவரும் இந்தியாவின் ராணுவ முகாம்கள், நடமாட்டங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு பகிர்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவரது அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு பல முறை சென்று வந்ததும் அங்கு பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அதிகாரிகளை சந்தித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரி டேனிஷ் இந்தியாவில் இருந்து கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில்,ஜோதி மல்கோத்ரா, ஜஸ்பிர் சிங் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய போது நசிர் என்பவரின் பெயர் தெரிய வந்தது. இவர் பாகிஸ்தானில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி பிரபலமாகி உள்ளார். அத்துடன்…
