இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு 1,806 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து குஜராத் 717, டெல்லி 665, மேற்கு வங்கம் 622, மகாராஷ்டிரா 577, கர்நாடகா 444, உ.பி. 208, தமிழ்நாடு 194, புதுச்சேரி 13, ஹரியானா 87, ஆந்திரா…
Author: admin
ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்டு இந்த தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது. இதன் கடைசி சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். தொடக்கத்தில் குகேஷ் பின்தங்கிய நிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், மீண்டு வர முயற்சித்த போது கண்மூடித்தமாக செய்த தவறால் தனது வாய்ப்பை நழுவவிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் அவர், வெற்றி பெற்றிருந்தால் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பார். ஏனெனில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் தனது கடை சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 56-வது நகர்த்தலின் போது டிராடிவில்…
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் குர்பானி வழங்கி மகிழ்ந்தனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாகத்தைப் போற்றும் வகையில் இஸ்லாமிய மாதமான துல்ஹிஜ்ஜா 10ம் தேதி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தனது மகனை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல நேற்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முக்கிய பள்ளி வாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்களில் பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் நேற்று புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன், அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என இஸ்லாமியர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.…
இந்தி நடிகை ஹினா கான், ‘நாகினி’ டி.வி.தொடரில் நடித்ததன் மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். “எனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்த நோயை வெல்வேன் என்று நம்புகிறேன். சிகிச்சை தொடங்கி விட்டது. எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சில மாதங்களுக்கு முன் உருக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் தனது காதலரான, டி.வி.தொடர் தயாரிப்பாளர் ராக்கி ஜெய்ஷ்வால் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இருவரும் 13 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தன்னை ஏற்றுக்கொண்டதற்காக கணவருக்கு நன்றி தெரிவித்துள்ள ஹினா கான், “காதலிக்கப்படுவது எப்போதும் அழகானது. ஆனால் எனக்கு நாளை என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், ஒரு பெண்ணை அரவணைப்பதும், ஏற்றுக்கொள்வதும் பெரிய ஆசிர்வாதம்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரைக்கு வந்தார். இன்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் நி்ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 8) நடைபெறுகிறது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பேராசிரியர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் உள்துறை அமித்ஷா மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவரது வருகையையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற…
ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதுகுறித்து பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, தங்க நகைகளின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இது வாடிக்கையாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டுதலின் பேரில் புதிய வரைவு விதிமுறைகளை பரிசீலித்த நிதி சேவைகள் துறை, ரிசர்வ் வங்கிக்கு தனது பரிந்துரையை அனுப்பி இருந்தது. அதில், ரூ.2 லட்சம் வரையிலான…
ஹவுஸ்ஃபுல் 2 இல் பாத்திரத்திற்காக அறியப்பட்ட ஷாஜான் பதம்சி, தனது நீண்டகால கூட்டாளியான ஆஷிஷ் கனகியாவை ஒரு வெளிர் கருப்பொருள் திருமணத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் தங்களது சிறப்பு நாளின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது, அவர்களின் ஒருங்கிணைந்த தந்தம் மற்றும் ப்ளஷ் பிங்க் ஆடைகளைக் காண்பிக்கும். கொண்டாட்டங்களில் பாரம்பரிய சடங்குகள் மற்றும் மும்பையில் ஒரு வரவேற்பு ஆகியவை அடங்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நடிகர் ஷசான் பதம்சி, அவரது பாத்திரத்திற்காக சிறப்பாக நினைவுகூரப்பட்டார் ஹவுஸ்ஃபுல் 2இப்போது அதிகாரப்பூர்வமாக சந்தையில் இல்லை! நடிகை ஒரு அழகான விழாவில் நீண்டகால கூட்டாளர் ஆஷிஷ் கனகியாவுடன் முடிச்சு கட்டினார், இது ஒரு வெளிர் விசித்திரக் கதைக்கு ஒன்றுமில்லை. தம்பதியினர் தங்கள் பெரிய நாளிலிருந்து மனதைக் கவரும் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்றனர், ஒருவருக்கொருவர் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டனர். பாரம்பரிய இந்திய திருமணங்களின் வழக்கமான சிவப்பு மற்றும்…
ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கடற்படைக்காக 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிக்கும் பணி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐஎன்எஸ் விஷால் என பெயரிடப்பட்டு உள்ள இந்த போர்க்கப்பல் வரும் 2030-ம் ஆண்டில் கடற்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 புதிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக வரும் 18-ம் தேதி ஐஎன்எஸ் அர்னாலா கடற்படையில் இணைகிறது.…
பா.ஜ.க திட்டமிட்டது போல நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களின் ரத்தம், வியர்வையை உறிஞ்சும் பாஜக அரசு பள்ளிக் கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி, தமிழக பங்களிப்பு நிதி போன்றவற்றை ஏன் கொடுக்கவில்லை? ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. மக்களை பதற்றத்தோடும், அச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நினைக்கிறது. இதற்காகத்தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டை குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தி…
வீடு மற்றும் அலுவலகங்களில் ஏ.சி பயன்படுத்துவோர் 24 டிகிரி செல்சியஸ் வைத்தால், இந்த கோடையில் மின் கட்டணம் அதிகரிப்பை தடுக்க முடியும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம்(பிஇஇ) கூறியுள்ளது. கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது ஏ.சி. பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனால் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய மின் கட்டணமும் மிக அதிகமாக உள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் பலரும் தங்கள் ஏ.சியி.யில் வெப்ப நிலை அளவை 20 முதல் 21 டிகிரி செல்சியஸில் வைக்கின்றனர். இதை 24 டிகிரியில் வைத்தால் மின்சாரம் உபயோகம் குறைந்து மின் கட்டணம் வெகுவாக குறையும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் (பிஇஇ) கூறியுள்ளது. ஏ.சியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், நம்மால் 6 சதவீதம் மின்சார உபயோகத்தை குறைக்க முடியும். ஏ.சி.யில் 24 டிகிரி முதல் 25 டிகிரி வெப்பநிலை வைத்தாலே, அறை குளிர்ச்சியாக…
