கொடைக்கானல்: முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் மத சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது. வக்பு திருத்தச் சட்டம் என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரானது தான். ஜனநாயகத்தை காப்பவர்களும் மதச்சார்பின்மையை காப்பவர்களும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் பாஜக ஒவ்வொரு வடிவத்தை எடுத்து வருகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ராமர் வடிவம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் துர்கா தேவி, மத்திய இந்தியாவில் விநாயகர் அவதாரம், தமிழ்நாட்டில்…
Author: admin
மதுரை: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: “தமிழகத்துக்கு வந்து தமிழ் மொழியில் பேசமுடியவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன். 3,000 ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட பழமை வாய்ந்த நகரம் மதுரை. வரும் ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மதுரை பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். அந்தவகையில், இன்று நடந்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டமும், திமுக ஆட்சியை…
வேலூர்: வேலூர் மாவட்டம், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், வேலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், ரங்காபுரத்தையொட்டியுள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் என்ற இடத்தில் 500 அடி உயரமுள்ள தீர்த்தகிரி மலையில் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு 92 அடி உயரத்தில் உலகிலேயே 3வது அதிக உயரமுள்ள (92 அடி) மிகப்பிரமாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென்வடக்கு திசையை நோக்கியவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை, மலையின் உச்சியில் மிக…
திண்டுக்கல்: ஆபத்தை உணராமல் ரீல்ஸ்க்காக கொடைக்கானல் குணா குகை தடுப்பு கம்பிகளை கடந்து சென்று வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை, கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கு பிறகு மேலும் பிரபலமடையத் துவங்கியுள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடாத இடமாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. இதனால் மற்ற சுற்றுலாத்தலங்களை விட குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும். கடந்த இரண்டு மாதங்களில் கோடை விடுமுறையில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குணா குகை பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஆழமான குகை பகுதிகளை எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இரும்பு கம்பிகள் வைத்து வனத்துறையினர் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை குணாகுகையில் தவறி விழுந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் குணா…
உங்கள் உளவுத்துறையை சோதிக்கவும், உங்கள் மனக் கூர்மையை மேம்படுத்தவும் ஒரு சிறந்த முறையாகும். அவை உங்கள் ஐ.க்யூ மட்டுமல்ல, விமர்சன சிந்தனை, தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் அவதானிப்புக்கான உங்கள் திறனையும் மதிப்பிடுகின்றன. நேர அழுத்தத்தின் கீழ் இதுபோன்ற புளோண்டீசர்களை தீர்ப்பதன் மூலம் சூழ்நிலைகளை சரியாகவும் விரைவாகவும் பகுப்பாய்வு செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் நிரூபிக்கலாம்.இன்றைய பணி ஒரு சவாலான புதிர், இது வயதான பெண்ணின் மகளை ஐந்து வினாடிகளில் மட்டுமே அடையாளம் காண வேண்டும்! இந்த சவாலை அசாதாரண கவனம், விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் மற்றும் கூர்மையான மனம் ஆகியவற்றைக் கொண்ட நபர்களால் மட்டுமே பதிவு நேரத்தில் முடிக்க முடியும்.உங்கள் உளவுத்துறையை நிரூபிக்க நீங்கள் தயாரா? இந்த ஐ.க்யூ சோதனையை எடுத்து நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்று பார்ப்போம்!பிரச்சனை இதுதான்: இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு வயதான பெண்ணின் இந்த படத்தைப் பாருங்கள். தனது மகளாக இருக்கும் பெண்ணை அடையாளம் காண்பது…
ராமேசுவரம்: உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமேசுவரம் கோயிலில் ஜுன்17-ந்தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன வழியில் சென்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பொறுப்பேற்ற இணை ஆணையர், உள்ளூர் மக்கள் ரூ.200 கட்டண தரிசன வழியில்தான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறார். இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளூர் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து கட்டணம் வசூலிக்கும் கோயில் நிர்வாகத்தை கண்டித்தும், வழக்கமான சிறப்பு தரிசன வழியில் உள்ளூர் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரியும் மக்கள் நல பேரவை சார்பில் வருகிற 17-ந்தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்ட அறிவிப்பிற்கு பின்னர் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக…
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார். இந்த ஆட்டம் நேற்று பாரிஸில் நடைபெற்றது. “இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான ஃபைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன். இந்த வெற்றிக்கு கோகோ காஃப் தகுதியானார். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன்” என அரினா சபலென்கா தெரிவித்தார். இந்த இறுதி ஆட்டத்தை 6-7(5), 6-2,…
புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்சஅளவாக இன்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவாக இருந்தது. அத்துடன் கடும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் புதுச்சேரியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் தொடர்கிறது. குறிப்பாக கடந்த வாரம் முழுக்க அதிகளவு வெப்பம் பதிவானது. கிட்டத்தட்ட நூறு டிகிரி அளவுக்கு நெருக்கமாக வெயிலின் தாக்கம் உள்ளது. சனிக்கிழமை 100.8 டிகிரியை தொட்டது. இன்று (ஜூன் 8) நடப்பாண்டிலேயே அதிகளவாக 104 டிகிரி பதிவானது. நடப்பு கோடையில் ஆறாவது முறையாக புதுச்சேரியில் வெயிலின் அளவு சதத்தை கடந்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் 3வது முறையாக நூறு டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட வரவு: கெட்டி படங்கள் இயற்கையானது அங்குள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்படுகிறது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துகையில், இயற்கையின் துறை ஒரு படி பின்வாங்கியுள்ளது, தாய் பூமி மிகப்பெரிய மந்திரவாதி மற்றும் அனைவரையும் உருவாக்கியவர் என்பதை அறிந்த மக்களின் ஏமாற்றத்திற்கு.ஒரு புதிய ஆய்வு இப்போது நம் உடலுக்குள் தண்ணீர் மற்றும் உணவைக் கொண்டு நுழையும் ‘என்றென்றும் ரசாயனங்கள்’ ஒரு பொதுவான உணவு நிரப்புதலுடன் அகற்றப்படலாம் என்று கூறுகிறது.ஓட்ஸ் தீர்வு பி.எஃப்.ஏக்கள்?ஒவ்வொரு உணவிற்கும் முன்னர் ஓட்ஸிலிருந்து பெறப்பட்ட ஒரு ஃபைபர் சப்ளிமெண்ட் சாப்பிடுவது, ஆய்வின் படி, உடலில் இருந்து நச்சு என்றென்றும் ரசாயனங்களை வெளியேற்ற உதவும்.பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கில் பொருட்கள் அல்லது பி.எஃப்.ஏக்கள் பொதுவாக எப்போதும் ரசாயனங்கள் என அழைக்கப்படுகின்றன, அவை அல்லாத அன்றாட பயன்பாட்டு தயாரிப்புகளான குச்சி அல்லாத சமையல் பாத்திரங்கள், அழகுசாதனப் பொருட்கள், கறை-எதிர்ப்பு துணிகள், தீயணைப்பு நுரைகள்,…
புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது. தூய்மை இந்தியா மூலம் கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து ஜன் தன் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை பல்வேறு முயற்சிகள் மூலம், நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை. முத்ரா கடன்கள், லட்சக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோர்களாகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாகத் தொடரவும் உதவியுள்ளன. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தையைப்…
