மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி) என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன் சிங் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவங்களி்ல் கனன் சிங் சந்தேகத்துக்குரிய முக்கிய நபராக உள்ளார். இவர், மாநில காவல்துறையின் கமாண்டோ பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். கடமையை செய்ய தவறியதற்காக இவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மெய்தி இனக்குழுவின் முக்கிய தலைவராக கருதப்படும் கனன் சிங் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து நூற்றுகணக்கான இளைஞர்கள் கருப்பு நிற டி-சர்ட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைகளில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக்…
Author: admin
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், கலிபோர்னியா ஆளுநர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து முக கவசம் (மாஸ்க்) அணிந்த பலர் தொழில் பூங்காவுக்கு எதிரில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்களை (தேசிய படையினர்) போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.…
சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையத்தை திறந்தால் அதற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. இந்நிலையில் இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மத்திய அரசிடம் இருந்து சில பிரத்யேக ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு…
மதுரை: தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சூளுரை செய்தனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “காஷ்மீரில் பிரதமர் மோடி மேற்கொண்டது ஆபரேசன் சிந்தூர் , அமித்ஷா மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி சிந்தூர் எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் சைலன்ட் ஆபரேசன் செய்யப்போகிறார். யார் ஷா எனக் கேட்கிறார் ஸ்டாலின். ஹரியானா, மகாராஷ்டிரா, டில்லியில் பாஜக ஆட்சியை கொண்டு வந்தவர் தான் இந்த ஷா. அவர் தான் எங்கள் அமித்ஷா. திமுக ஆட்சியை ஆளுனராக இருந்த கே.கே.ஷா கலைத்த திமுக தோல்வி பயத்திலும் உளறிக் கொண்டிருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி துரோக கூட்டணி என்கிறார்கள். இந்திராகாந்தி மதுரை வந்த போது அவர் மீது திமுகவினர் கல்வீசினர். இதில் அவரது தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. அதை கொச்சையாக பேசியது யார்? இப்போது அதே…
கோயம்புத்தூர்: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி கோயம்புத்தூரில் உள்ள சிடிசிஏ ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 8) பிற்பகலிலல் நடைபெற்றது. இதில் சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதீக் உர் ரஹ்மான் 38 ரன்களும் (21 பந்துகள்), ராம் அர்விந்த் 37 ரன்களும் (34 பந்துகள்), என்.எஸ். சதுர்வேத் 32 ரன்களும் (26 பந்துகள்) எடுத்தனர். சேலம் ஸ்பார்டன்ஸ் பந்துவீச்சில் எம். முகமது 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், எஸ். அஜித் ராம் 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும்,…
சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் ஜூன் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இப்படம் மே 23-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 13-ம் தேதி ‘படை தலைவன்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான காட்சிகளை காடுகளுக்குள் படமாக்கி இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ் குமார், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ’படை தலைவன்’ படத்தின் விநியோக உரிமையினை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் கூறப்பட்டபோதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமித்ஷா உட்பட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடும் போது நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக எழுந்து துண்டை சுழற்றியபடி விசில் எழுப்பினர். அண்ணாமலை பேசும் போது அப்படியே செய்தனர். அமைதியாக இருக்கும்படி அண்ணாமலை கூறியதும் விசில் சப்தம் நின்றது. பாஜக நிர்வாகிகள் மாநாடு என்பதால் அமித்ஷா வந்ததும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறி விட வேண்டும் என ஊடகங்களுக்கு…
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் கிச்சா சுதீப். ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தினை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது அந்த வரிசையில் கிச்சா சுதீப்பும் இணைந்திருக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தொடர்பாக கிச்சா சுதீப், “சமீபத்திய படங்களில் மிகச் சிறந்த எழுந்து மற்றும் செயல்பாடு. கதை சொல்லும் விதத்தில் நிச்சயமாக ஒரு மைல்கல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். இப்படம் என்னை இருக்கையிலேயே கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் சொந்த தருணத்திற்கான இடமும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகர்களால் குறைபாடு இல்லாமல் சித்திரித்திருக்கிறார்கள். அருமையான நடிகர்கள் தேர்வு மற்றும் படத்தின் இசை பெரிய சொத்து” என்று தெரிவித்துள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர்…
சென்னை – புதுடெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் ( ஜி.டி.,) விரைவு ரயில் நாளை முதல் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ரயில் கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி இடையே இயக்கப்பட்டு வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் (12615), கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்றதால், மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. பின்னர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு கிராண்ட் டிரங்க் ரயில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ரயில் நாளை (9-ம் தேதி)…
நாசா, இஸ்ரோ ஜூன் 10 அன்று இந்திய பைலட்டுடன் விண்வெளிக்கு தனியார் மிஷனைத் தொடங்கினார் (ANI) வாஷிங்டன் டி.சி: இஸ்ரோவுடனான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) கூறியது ஆக்சியம் மிஷன் 4 ஆக்ஸியம் ஸ்பேஸிலிருந்து நான்காவது தனியார் விண்வெளி வீரர் பணி ஜூன் 10 அன்று தொடங்கப்படும், இது பைலட் செய்யப்படும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா.முதல் இஸ்ரோ விண்வெளி வீரரை நிலையத்திற்கு அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் சிறப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை ஆக்சியம் மிஷன் 4 வழங்குகிறது. விண்வெளி முகவர் நிறுவனங்கள் ஐந்து கூட்டு அறிவியல் விசாரணைகள் மற்றும் இரண்டு சுற்றுப்பாதை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றன. நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞான அறிவை முன்னேற்றுவதற்கும் விண்வெளி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் பகிரப்பட்ட பார்வையில் கட்டமைக்கப்பட்ட நீண்டகால…
