Author: admin

தரு​மபுரி: தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத் திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, தேர்​தல் பணி மேற்​கொள்​கிறோம். இதற்​காக விரை​வில் மாநில, மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கான கூட்​டம் நடை​பெற உள்​ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்​ளோம். தொடர்ந்து எங்​கள் பயணம் தொடரும். பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு எந்த அழைப்​பும் வரவில்​லை‌. அதே​நேரத்​தில், அதி​முக கூட்​ட​ணி​யில் இல்லை என்று நாங்​கள் எங்​கும் சொல்​ல​வில்​லை. திமுக பொதுக்​குழு​வில் நிறைவேற்​றப்​பட்ட இரங்​கல் தீர்​மானத்​துக்கு நன்றி சொன்​னோம். இது அரசி​யல் நாகரி​கம். எந்​தக் கட்​சி​யாக இருந்​தா​லும் பிறந்த நாள் வாழ்த்து சொல்​வது, அதற்கு நன்றி சொல்​வது அரசி​யல் மாண்​பு, அதைத்​தான் நாங்​கள் செய்​தோம். இதனால் கூட்​டணி மாறு​மா, அதே கூட்​டணி தொடருமா என்​பது உங்​கள் கற்​பனை. கூட்​டணி தொடர்​பான இறுதி முடிவை…

Read More

குழந்தைகள் பெரும்பாலும் பெரியவர்களுடன் பேசுவதன் மூலம் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். உரையாடல்களைக் கொண்டிருப்பது அவற்றை அதிக சொல்லகராதி மற்றும் இலக்கண கட்டமைப்புகளுக்கு அம்பலப்படுத்துகிறது. எவ்வாறாயினும், திரைகளின் இருப்பு இதை சீர்குலைக்கும், குறிப்பாக ஒரு வயது வந்தவர் நூல்கள் அல்லது அறிவிப்புகளால் குறுக்கிடப்பட்டால். ஆய்வின் போது, ​​ஆராய்ச்சியாளர்கள் குடும்பங்களை குறைந்த, மிதமான மற்றும் உயர் திரை பயன்பாட்டுக் குழுக்களாக வகைப்படுத்தினர். பெற்றோர்களும் குழந்தைகளும் பொதுவாக ஒரே குழுவில் விழுந்ததை அவர்கள் கண்டறிந்தனர். அதிக திரை நேரமுள்ள குழந்தைகள் சொல்லகராதி மற்றும் இலக்கணம் இரண்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றனர். எந்தவொரு வகையான திரை பயன்பாடும் சிறந்த மொழி விளைவுகளுடன் தொடர்புடையதாக இல்லை. “மின்புத்தகங்களைப் படிப்பதும், சில கல்வி விளையாட்டுகளை விளையாடுவதும் மொழி கற்றல் வாய்ப்புகளை வழங்கக்கூடும், குறிப்பாக வயதான குழந்தைகளுக்கு, வாழ்க்கையின் முதல் ஆண்டுகளில், மிகவும் செல்வாக்குமிக்க காரணி அன்றாட டைடிக் நேருக்கு நேர் பெற்றோர்-குழந்தை வாய்மொழி தொடர்பு என்று ஆராய்ச்சி காட்டுகிறது”…

Read More

சென்னை: மின்வாரிய கள பணியாளர்களுக்கு ரூ.1.59 கோடியில் சிறப்பு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மின்தடை உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்யும் கள பணியாளர்கள் சில நேரங்களில் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு செயலி மூலம் அவர்களது செயல்பாடுகளை மின்வாரியம் கண்காணிக்கிறது. இருப்பினும், எதிர்பாராதவிதமாக சூழல்களில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன. இதில் பெரும்பாலும் கேங்மேன் எனும் தற்காலிக ஊழியர்களே பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்கும் விதமாக, பணியாளர்களுக்கு சீரிய முறையில் பாதுகாப்பு பயிற்சி வழங்க வேண்டும் என மின்வாரிய தலைவரிடம் பிஎம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விபத்தின்றி பாதுகாப்பாக பணியாற்றுவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்தை சேர்ந்த 24 ஆயிரம் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான செலவினமாக ரூ.1.59 கோடியை ஒதுக்க வாரியம் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

Read More

வைட்டமின் பி 12 குறைபாடும் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கிறது. இது நினைவக குறைபாடுகள், கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது மூளை மூடுபனி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். விஷயங்களை நினைவில் கொள்வது அல்லது எளிதில் குழப்பமடைவது போன்றவற்றையும் நீங்கள் அனுபவிக்கலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், இது டிமென்ஷியா போன்ற அறிகுறிகளைப் பிரதிபலிக்கக்கூடும், குறிப்பாக வயதான பெரியவர்களில், பி 12 மூளை ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.

Read More

சென்னை: பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில்லறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையடுத்து, யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தும் வகையிலான பயணச்சீட்டு கருவிகளை பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் பயணச்சீட்டு கருவி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. எனினும், தொலைதொடர்பு சிக்கலால் சில நேரங்களில் பரிவர்த்தனையை முடிக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால், நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே தேவையற்ற…

Read More

மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார். மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்காக அமித்ஷா நேற்று இரவில் மதுரை வந்தார். விமான நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் தங்கும் விடுதிக்கு திரும்பிய அவர் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 22 மாநில நிர்வாகிகள் அடங்கிய தமிழக பாஜக மையக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தாதது ஏன்? கட்சி நிர்வாகிகளிடம் சுணக்கம் காணப்படுவது ஏன்? என்பது குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா விவாதித்ததாக கூறப்படுகிறது. பின்னர், கடந்த பாராளுமன்ற தேர்தலில்,…

Read More

ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போல 2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப்பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது: தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 3 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமையுடைய மதுரை மண்ணின் நாயகரான முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன். வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டைச் சிறப்பாக நடத்தித்தர வேண்டுகிறேன். மதுரை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. மதுரை மண் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நீண்டகால அரசியல்அனுபவம்…

Read More

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. 2019-ல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைச் செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலர் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். தமிழக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், 2 அதிமுகவுக்கும் கிடைக்கும். திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உள்ளிட்ட 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். கடந்த 6-ம் தேதி…

Read More

‘டான்செட்’ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளிலும், தனியார் சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து சரண் செய்யப்படும் எம்பிஏ, எம்சிஏ இடங்களிலும் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கை பணிகளை கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜிசிடி) மேற்கொள்கிறது. ‘டான்செட்’ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி. விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளியிடப்படும். எம்பிஏ, எம்சிஏ ஆகிய 2…

Read More

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ’இறுகப்பற்று’ படத்துக்குப் பின் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘ரெய்ட்’. அப்படம் பெரியளவில் எடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த பட வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார் விக்ரம் பிரபு. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரவு உடன் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இதன் போஸ்டர் மற்றும் வெளியான பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாயகனுக்கு திருமணம் தாமதமாவதால் இந்த சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இப்படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.…

Read More