Author: admin

Last Updated : 21 Apr, 2025 12:50 PM Published : 21 Apr 2025 12:50 PM Last Updated : 21 Apr 2025 12:50 PM மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் கடந்த முறை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2023 – 2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘கிரேடு ஏ+’ பிரிவில்…

Read More

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3.31 லட்சம் பேர் இந்திய மாணவ, மாணவியர் ஆவர். சுமார் 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்களும் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர். அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் (ஓபிடி) இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அதாவது இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் ஓபிடி திட்டத்தில்…

Read More

திருநள்ளாறு: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும் தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மரபுபடி வாக்கிய பஞ்சாங்க முறையின்படியே சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகமும் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது என்பதாலும், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுவோராக இருப்பதாலும், இன்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது. கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளே இன்றும் நடைபெற்றன. சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் வெளிப்புற பகுதியிலும், உள் பிரகாரங்களிலும்…

Read More

சென்னை: பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’. இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கினார். முன்னதாக, துபாயில் நடந்த ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்று 2-ஆம் இடம் பிடித்தது. இந்த நிலையில், தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில்…

Read More

கூடலூர்: கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க வனத்துறை கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கண்ணகி கோயில் மலையடிவாரமான பளியன்குடியில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இதற்காக மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் இன்று (ஏப்.29) கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். அப்போது இன்னொரு பிரிவினரும் கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். இதனால் கொடியேற்றுவதில் இருதரப்பினர் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் முரளீதரன் காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட…

Read More

ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்புகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது, திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை (24 கேரட்) ரூ.93,353 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.97,730 ஆக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.10 லட்சமாக அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. தங்கம் விலை உயர்வு காரணமாக ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணிசமாக அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.12,000 கோடி அதிகரித்திருக்கிறது. இதன்படி ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின்…

Read More

விஷயங்களைச் செய்ய விரும்புகிறீர்களா? எப்படி என்பதை அறிக!அனைவருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம் ஒரு தொகுப்பு உள்ளது. இந்த 24 மணி நேரத்தில், சிலர் அவர்களை தூங்கச் செலவிடுகிறார்கள், சிலர் அவர்களை வேடிக்கையாக செலவிடுகிறார்கள், மேலும் சிலர் அவற்றை துண்டுகளாக உடைத்து, வேலை மற்றும் விளையாட்டிற்கான நேரத்தைப் பிரிக்கிறார்கள். நீங்கள் 3 வது பிரிவில் இருக்க விரும்பினால், உதவக்கூடிய புத்தகங்கள் இங்கே.

Read More

லண்டனில் உள்ள இந்தியா உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே பஹல்கம் பயங்கரவாத தாக்குதலை கண்டனம் செய்த போராட்டத்தை நடத்தும் இந்திய சமூகத்தின் உறுப்பினர்களின் கோப்பு புகைப்படம். (படம் கடன்: அனி) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் இப்போது லண்டனுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன, அங்கு இரு நாடுகளின் புலம்பெயர் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இதற்கிடையில், இங்கிலாந்தின் தலைநகரில் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயத்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியதாக இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜே & கே பஹல்கத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. படி பெருநகர போலீசார்,, 41 வயதான அன்கிட் லவ் கைது செய்யப்பட்டு குற்றவியல் சேதமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இராஜதந்திர பணியின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படும் ஒருவர் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது ஏற்பட்டது.வாக்கெடுப்புசர்வதேச மோதல்கள் தொடர்பான அமைதியான ஆர்ப்பாட்டங்களை…

Read More

புதுடெல்லி: குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அண்மையில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை என்ஏஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ போலீஸார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறியதாதாவது: பஹல்காம் தாக்குதலுக்கும், ரூ.21 ஆயிரம் கோடி…

Read More

புளோரிடா: சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம். உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான். வரும் நாட்களில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை அதிகளவில் விண்ணில் நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்கள் பூமியில் இருந்து சுமார் 400 மைல் தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2023-ல் சோதனை ஓட்டமாக இரண்டு Kuiper சாட்டிலைட்டை விண்ணில் நிலை நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.…

Read More