நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் புலனாய்வு நிறுவனமான என்எஸ்ஓ-வின் ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு புகார் எழுந்தது. சர்வதேச ஊடக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியின் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கள் செல்போன்களை ஒட்டு கேட்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் புகார் குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை நீதிமன்றம் ஆய்வு…
Author: admin
குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த பள்ளி மாணவர் மெத்னேஷ் திரிவேதி. இவர் 3 மாதங்கள் கடினமாக உழைத்து ஒரு ட்ரோனை உருவாக்கி உள்ளார். ஹெலிகாப்டர் போன்று இந்த ட்ரோன் – காப்டரில் 80 கிலோ எடை கொண்ட ஒருவர் பறந்து செல்ல முடியும். ஆறு நிமிடங்கள் வரை பறக்கும் திறனுடன் இதை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘திரிவேதியின் ட்ரோன் புதுமையைப் பற்றியது அல்ல. இணையதளத்தில் இயந்திரத்தை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், இது இயந்திரவியலில் திரிவேதிக்கு உள்ள ஆர்வம், அர்ப்பணிப்புப் பற்றியது. இந்த இயந்திரத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற அவரது பொறுமையை பற்றியது. இவரைப் போன்ற இளைஞர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும்போது, அந்தளவுக்கு நமது நாடும் புதுமையானதாக மாறும்’’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படுகிறது. 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு வரும் ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி…
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் சுற்றில் அந்த அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறுமா? கேப்டன் தோனி என்ன சொல்கிறார்? உள்ளிட்டவற்றை பார்ப்போம். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008 சீசன் முதல் 2024 சீசன் வரையில் மூன்று முறை, அதவாது 2020, 2022, 2024-ஆம் ஆண்டு சீசன்களில் மட்டுமே முதல் சுற்றான லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறி உள்ளது. 2016 மற்றும் 2017 சீசன்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் சிஎஸ்கே விளையாடவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 10 இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டமும்,…
கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா – கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு தூதரங்களிலும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்நிலையில் கனடா பிரதமராக இருந்து ட்ரூடா உட்கட்சி பூசல் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இது லிபரல் கட்சிக்கு மார்க் கார்னே தலைமை ஏற்க வழிவகுத்தது. பொது தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று, பிரதமரானால், இந்தியா – கனடா இடையேயான உறவை மேம்படுத்துவேன் என மார்க் கார்னே ஏற்கெனவே…
பழநி: மார்ச் 29-ல் சூரிய கிரகணம் நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால், பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வானியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை கிரகணங்கள். கிரகண காலங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை, இந்திய நேரப்படி பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி, மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது. இந்நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே, அன்றைய தினம் வழக்கம் போல் ஆறு கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழநி முருகன் கோயிலில் அனைத்து…
சக நடிகை ஒருவர் பொறுப்பற்ற முறையில் தன்னிடம் பேசியதாக நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சிம்ரன் பேசியது: “என்னுடைய சக நடிகை ஒருவருக்கு சமீபத்தில் மெசேஜ் செய்திருந்தேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உங்களை பார்ப்பதில் ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். உடனடியாக அவரிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது. ‘ஆன்ட்டி’ கதாபாத்திரங்களில் நடிப்பதை விட இது பரவாயில்லை என்று கூறியிருந்தார். அப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் என்னுடைய கருத்தைத்தான் சொல்லியிருந்தேன். அவரிடமிருந்து இன்னும் நல்ல பதில் எனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆன்ட்டி ரோல்களில் நடிப்பது, 25 வயது பிள்ளைக்கு அம்மாவாக நடிப்பது ஒன்றும் தவறில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இது மேல் என்று எனக்கு தோன்றியது. நாம் என்ன…
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு, அவர் வீட்டருகே கட்டியுள்ள அப்பா பைத்தியசாமி கோயில், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியிலுள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல இடங்களுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும், மீண்டும் மிரட்டல்கள்: இந்நிலையில் இன்று (ஏப்.29) முதல்வர் ரங்கசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இம்மிரட்டல் இம்மாதத்தில் 2-வது முறையாக வருகிறது. அவர் வீட்டடுக்கு அருகே ரங்கசாமி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் அங்கும் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் பிரெஞ்சு தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இங்கும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மிரட்டல் வந்து சோதனை நடந்தது. இச்சூழலில் ஜிப்மர் மருத்துவமனைக்கும் மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார்…
சென்னை: ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைக்கு அரசு ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அது குறித்து பார்ப்போம். இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் என்பது அதீத வளர்ச்சியை தினந்தோறும் கண்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.2000-க்கு மேலான ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இது ஏற்கப்பட்டால் 18 சதவீதம் என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. பெரும்பாலான டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது நடைமுறைக்கு வந்தால் யுபிஐ பரிவர்த்தனையில் பெரிய மாற்றம் நிகழும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது. “ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது, மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் எந்த அடிப்படையும் இல்லாதது. இப்போது…
சுகாதார கவலைகள் உடனடி ஆறுதல் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டவை. உடலின் இயற்கையான வெப்பநிலை அதிகாலை 4 முதல் 6 மணி வரை குறைகிறது. இது நீடித்த குளிர் காற்று வெளிப்பாட்டுடன் இணைக்கப்படும்போது, இது வறட்சி மற்றும் அரிப்பு உள்ளிட்ட தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது முகப்பரு, மோசமான தோல் தடை மற்றும் குறைந்த ஈரப்பதம் அளவை மேலும் அதிகரிக்கிறது. குறைந்த ஈரப்பதம் கொண்ட தோல் காலப்போக்கில் சுருக்கங்கள், மந்தமான தன்மை மற்றும் இருண்ட புள்ளிகளுக்கு ஆளாகிறது.
