ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டீ நகரத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்காட்லாந்தை மீண்டுமொரு முறை அச்சுறுத்தியது நேபாள் அணி. ஸ்காட்லாந்தின் 323 ரன்கள் இலக்கை விரட்டிய நேபாளம் 321 வரை போராடி வந்து 2 ரன்களில் தோல்வி கண்டது. இதற்கு முந்தைய போட்டியில்தான் ஸ்காட்லாந்தின் 297 ரன்கள் இலக்கை வெற்ற்கரமாக சேஸிங் செய்து சாதித்தது நேபாளம். நேற்று 323 ரன்களை எடுத்தும் ஸ்காட்லாந்தினால் இலக்கைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம் என்ற நிலைமைக்கு நேபாள் ஆளாக்கியது. ஏற்கெனவே ஸ்காட்லாந்து அணியை ஒரு பந்து மீதமிருக்கையில் வென்றிருந்த நேபாள் அதன் பிறகான போட்டியில்தான் 297 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது. நேற்று ஸ்காட்லாந்து சொந்த மண்ணில் அந்த அணியை தொடர் 3வது தோல்வி அடையச் செய்திருக்கும் நேபாளம். ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெரிங்டன் பிரமாதமாக ஆடி 114 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசி 102 ரன்களை எடுத்தார்,…
Author: admin
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா இன்று (ஜூன் 9) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும், சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு முனிகுமார்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது. விசாகத் திருவிழாவை முன்னிட்டு…
உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் விதமாக கரூர் வைஸ்யா வங்கி (KVB), சென்னைப் பல்கலைக்கழகம் – கம்யூனிட்ரீ தொண்டு நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் 10,000 பூர்வீக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நகரின் பசுமையை மேம்படுத்துவதையும், நீண்டகால பல்லுயிர் பெருக்கத்தையும் இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், சமூக தன்னார்வலர்கள், பிற சமூக உறுப்பினர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். நிகழ்வில் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் – தலைமை நிர்வாக அதிகாரி பி. ரமேஷ் பாபு பேசுகையில், “உலக சுற்றுச்சூழல் தினம் என்பது இந்த பூமியை பாதுகாப்பதற்கான நமது கடமையை நினைவூட்டுகிறது. கரூர் வைஸ்யா வங்கியின் வழியாக சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 10,000 மரங்களை நட்டு இந்த நாளைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது வருங்கால சந்ததியினருக்கு பசுமையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாகும்”…
இதய நோயைப் பற்றி நாம் பேசும்போது, நினைவுக்கு வரும் முதல் அறிகுறி மார்பு வலி மற்றும் படபடப்பு. இருப்பினும், இது துரதிர்ஷ்டவசமானது, மார்பு வலி (பொதுவாக) ஒருபோதும் இதய நோயின் முதல் அறிகுறியாக இல்லை. இதய நோயின் முதல் அறிகுறி உண்மையில், நிலை முன்னுக்கு வருவதற்கு முன்பே மாதங்கள் (அல்லது ஆண்டுகள் கூட) தோன்றலாம், மேலும் அது எளிதில் புறக்கணிக்கப்படுகையில், ஆரம்பத்தில் இதய நிலையை கண்டறிவதில் இது மிகவும் உதவியாக இருக்கும், மேலும் மாரடைப்பைத் தடுப்பது, இல்லையெனில் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.இதய நோயின் முதல் அறிகுறி தீவிர சோர்வுஇல்லை, நாங்கள் “வேலையில் நீண்ட நாள் சோர்வாக உணர்கிறேன்” பற்றி பேசவில்லை. உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன்பே, காலையில் உங்களைத் துடைக்கும் தொடர்ச்சியான சோர்வு பற்றி நாங்கள் பேசுகிறோம், மேலும் சில நிமிடங்கள் கூட நீங்கள் நடப்பதை சாத்தியமில்லை. ஆனால் இது ஏன் நடக்கும்? கண்டுபிடிப்போம் ..உங்கள் இதயம் உங்கள் உடலின் ஒவ்வொரு…
மும்பை: மும்பையில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். மும்பையில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSTM) நோக்கிச் சென்றுகொண்டிருந்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர். அப்போது, பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சுமார் 12 பயணிகள் தண்டவாளத்தில் விழுந்ததாகவும், அவர்களில் 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் நடந்த மும்ப்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து, மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு மூடும்…
காசா: காசாவில் தாய்லாந்து பிணைக் கைதி ஒருவரை இஸ்ரேல் நேற்று மீட்டது. காசாவில் தொடரும் விமான தாக்குதலில் நேற்று 95 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 54,000 பேரும் உயிரிழந்தனர். இன்னும் 55 பிணைக் கைதிகள் பற்றிய தகவலை தெரிவிக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ளனர். இவர்களில் பாதிபேர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என இஸ்ரேல் நம்புகிறது. எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பிணைக் கைதிகளை வைத்திருக்கும் முஜாகிதீன் படை என்ற பிரிவின் தலைவர் அஸ் அத் அபி ஷரையா என்பவரை இஸ்ரேல் ராணுவம் காசாவில் சமீபத்தில் சுட்டுக் கொன்றது. காசாவின் ரஃபா நகரில் முஜாகிதீன் படை பிரிவினருடன் நடைபெற்ற…
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதை இருக்கிறது. ஆனாலும், ரயில் நிலையம் இல்லை. இதனால், இங்கு மின்சார, விரைவு ரயில்களை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது. இங்கு ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதையடுத்து,…
கார்டியோ மற்றும் எடை இழப்பு உலகில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது, கால் தசைகள் உண்மையில் உங்கள் முழு உடலின் எடையும் கொண்டு செல்கின்றன, எனவே அவை சிறப்பாக நகர்த்தவும், காயங்களைத் தடுக்கவும், தினசரி இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகின்றன. வலுவான கால்களுக்கு, உடற்பயிற்சி மற்றும் உணவு இரண்டும் அவசியம். உங்கள் கால் தசைகளை வலுப்படுத்த உதவும் 6 எளிய உதவிக்குறிப்புகள் இங்கே. இன்று அவற்றைச் செய்யத் தொடங்குங்கள்!அதிக புரதத்தை சாப்பிடுங்கள்புரதம் என்பது உடலின் கட்டுமானத் தொகுதி என்பதை நாம் அனைவரும் அறிவோம், இது உடற்பயிற்சியின் பின்னர் தசை திசுக்களை சரிசெய்யவும் உருவாக்கவும் உதவுகிறது, மேலும் மீட்கவும் உதவுகிறது. பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.75 கிராம் புரதம் தேவைப்படுகிறது. வலுவான கால்களுக்கான சில சிறந்த புரத ஆதாரங்கள் பின்வருமாறு:(மெலிந்த) கோழி மார்பக: மெலிந்த மற்றும் உயர்தர புரதத்தால் நிரம்பியிருக்கும், இது தசை மீட்பை ஆதரிக்கிறது.கிரேக்க தயிர்: இதில் வேகமான…
மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள கோயிலுக்கு வந்த பெண் நீதிபதியிடம் தாலி சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 10 பெண்கள் கொண்ட திருட்டு கும்பலை போஸீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறியுள்ளதாவது: மத்திய பிரேதச மாநிலம் உஜ்ஜைனில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றுபவர் பிரேமா சாகு. இவர், பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருத்தார். அப்போது, நீதிபதியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருடுபோனது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் 10 பெண்களைக் கொண்ட திருட்டு கும்பலை போலீஸார் அடையாளம் கண்டு கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இதுபோன்று கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் அம்பலமானது. அவர்களிடமிருந்து ஆண் மற்றும் பெண்கள் பயன்படுத்தும்…
சென்னை: பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கடைசி நாள் நிலவரப்படி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள்…
