கோவை: கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கழிவு பஞ்சு தரம் 50 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஓபன் எண்ட் நூற்பாலைகளில் தூய பருத்தி கட்டாயம் கலக்க வேண்டியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சு முக்கிய மூலப்பொருளாக ஓபன் எண்ட் நூற்பாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஓஇ நூற்பாலைகள் உள்ளன. இத்தகைய நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு ஜூன்ஸ், திரைசீலைகள், கிட்சன் மேட் அப்ஸ் துணி வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சின் தரம் மற்றும் திடத்தன்மை மிகவும் மோசமாக உள்ளதால் கழிவு பஞ்சுடன் துய முதல் தர பஞ்சு கட்டாயம் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் எம்.ஜெயபால் கூறியதாவது: ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும்…
Author: admin
இத்தகைய பணிநீக்கத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் செவிஸ் பதிவுகளை நிறுத்தியதற்காக அமெரிக்க ஏஜென்சிகளுக்கு எதிராக சட்ட சவால்கள் அதிகரித்து வருவதால், இத்தகைய பணிநீக்கத்திற்கு எதிராக தற்காலிக தடை உத்தரவுகளை (டி.ஆர்.ஓக்கள்) அதிகளவில் வழங்கி வருவதால், மாணவர்களுக்கு ஏற்படாத தீங்குகளை குறைத்து மதிப்பிடுவதற்காக அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு குடியேற்ற வழக்கறிஞர்களால் பரவலாக விவாதிக்கப்படுகிறது.ஆண்ட்ரே சமர்ப்பித்த பிரமாணப் பத்திரம் வாட்சன்உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் மூத்த அதிகாரி (டி.எச்.எஸ்) ஒரு அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு (மிச்சிகன் தெற்கு பிரிவு) ஒரு SEVIS பதிவை நிறுத்துவது விசா திரும்புவதை பாதிக்காது என்று கூறினார். இந்த பிரமாணப் பத்திரம் நான்கு வாதிகளில் ஒருவர் இந்திய மாணவராக இருக்கும் ஒரு வழக்கின் விஷயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சர்வதேச மாணவர்கள் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வர முற்படுகையில், ஒரு செவிஸ் பணிநீக்கம் மூலம் அவர்களுக்கு ஏற்படாத ‘சரிசெய்ய முடியாத தீங்கு’, இந்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள…
இடாநகர்: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது சுற்றுலா பயணிகள் தப்பிப்பதற்கு உதவி செய்து துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான விமானப்படை வீரர் தாகே ஹைல்யாங்குக்கு மாநில அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் சுபான்சிரி மாவட்டம் தஜாங் கிராமத்தை சேர்ந்தவர் தாகே ஹைல்யாங். விமானப்படையில் கார்போரல் அந்தஸ்தில் பணியாற்றும் இவர், விடுமுறையில் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தாகே ஹைல்யாங்கும் ஒருவர். தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கியதும் இவர் அங்கிருந்து தப்பிச் செல்லாமல், மற்ற சுற்றுலா பயணிகள் தப்பிப்பதற்கு உதவியுள்ளார். இறுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். இவரது உடல் அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, தாகே ஹைல்யாங் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்…
சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் புகாரளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து #MetaDown, #WhatsappDown போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பயனர்கள் பலரும் புகார் கூறிவருகின்றனர். இதனால் சில நிமிடங்களிலேயே இந்த ஹேஷ்டேகுகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா…
சென்னை: பத்தாம் வகுப்புக்கான தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். மேலும், தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினாத்தாளில் 1, 2, 3 , 5 மதிப்பெண் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டன. இத்தேர்வில் மெல்ல கற்கும் மாணவர்கள் கூட…
ஹைதராபாத்: ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, வைக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம் உள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்(எச்சிஏ) இதை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு விவிஎஸ் லஷ்மண் ஸ்டாண்ட் என்று இருந்ததை, 2019-ம் ஆண்டில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, ‘முகமது அசாருதீன் ஸ்டாண்ட்’ என பெயர் மாற்றம் செய்தது. இந்நிலையில், இதை எதிர்த்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை நீதிபதியும், எச்சிஏ குறைகேட்பு அதிகாரியுமான வி.ஈஸ்வரய்யா விசாரித்து வந்தார். விசாரணையின் முடிவில், இது அதிகார துஷ்பிரயோகம் என்று கூறி, அசாருதீன் என்ற பெயரை நீக்க உத்தரவிட்டார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்படாமல் தன்னிச்சையாக அசாருதீன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது…
அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34% பழிவாங்கும் வரிகளை விதித்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும்” என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும்…
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி முதல் நாள் திருவிழா நடந்தது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. அதனையொட்டி 11-ம் நாள் (மார்ச் 17) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் 12-ம் நாள் (மார்ச் 18) திருக்கல்யாணம் நடைபெற்றது. 13-ம் நாளான (மார்ச் 19) இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் தீபாராதனைக்குப்பின் காலை 6.15…
நடிகர் ‘8 தோட்டாக்கள்’ ‘வெற்றி’, நாயகனாக நடிக்கும் படத்தை ‘வெப்’ மற்றும் ‘7/ஜி’ படங்களை இயக்கிய ஹாரூன் இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை அக்ஷிதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி எனபலர் நடிக்கின் றனர். ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன், மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜான் ராபின்ஸ் இசைஅமைக்கிறார். கே.வி.கிரண் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் பற்றி இயக்குநர் ஹாரூன் கூறும்போது, “இதில் ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக, வெற்றி மீண்டும் நடிக்கிறார். அவர் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார். அதிக சஸ்பென்ஸ்களை கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக் கானல், சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது” என்றார்.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி நேரமில்லா நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், நேற்று சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான நோக்கம் குறித்து அதற்கான விளக்க உரையில், ‘‘தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகமானது, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி திருவாரூர் ஆகிய 8 மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த…
