சென்னை: “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) வினா – விடை நேரத்தின்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் முதலாம் ராஜேந்திர…
Author: admin
நடிகை த்ரிஷா பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா. பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும், 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். ப்ரியதர்ஷனின் ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் ஆனார். த்ரிஷா இரண்டாவதாக ஒப்புக்கொண்ட ‘மௌனம் பேசியதே’ அவரது முதல் படமாக வெளியாகி முந்திக்கொண்டது. 2000-ன் துவக்கத்தில் இருந்து இதோ இந்த 2025 வரை தமிழின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா. மலையாள ரசிகர்கள் த்ரிஷாவை ‘ஜெஸ்ஸி’ என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்கே அவர் பிரபலம். விஜய்யுடன் ‘லியோ’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என வரிசைகட்டிய த்ரிஷா, கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் எடுக்கப்பட்ட த்ரிஷாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கிராமத்தின் ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபாடு நடத்தவும், கோயிலுக்குள் செல்வோரை தடுக்கும் விதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, 22 மாதங்களுக்கு பிறகு, கடந்த 18-ம் தேதி வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு, கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின…
சேலம்: சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பாதிப்பதுடன், அரசுக்கு நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் குவாரி மற்றும் கிரஷர்கள் 150-க்கும் மேற்பட்டவை மூடப்பட்டு, சுமார் 1 லட்சம் டன் கனிம உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் குறித்து, சேலம் மாவட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோபால் கூறியதாவது தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிலங்களில் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கு, கனமீட்டருக்கு ரூ.56 ஆக இருந்த ராயல்டியை, கடந்த 2024-ம் ஆண்டில் ரூ.90 ஆக தமிழக…
புதுடெல்லி: அமெரிக்காவில் தனது முதுகலைப் பட்டம் பெற்ற ஆந்திராவில் உள்ள குண்டூரைச் சேர்ந்த இந்திய மூல மாணவர் ஒரு வெற்றி மற்றும் ரன் சம்பவம் டெக்சாஸின் டென்டன் நகரில், அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.ஏப்ரல் 12 ஆம் தேதி கேரில் அல் லாகோ டிரைவின் 2300 தொகுதிக்கு அருகே தனது நண்பர் ஸ்னிக்தாவுடன் வி டீப்ப்தி என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், வேகமான வாகனத்தால் தாக்கப்பட்டபோது அவர்கள் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தனர். அவரது நண்பர் ஸ்னிக்தா குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், இந்த மே மாதம் பட்டம் பெறவிருந்த தீப்தி ஏப்ரல் 15 அன்று காலமானார். அதே நேரத்தில், ஸ்னிக்தா தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார், மேலும் அவரது நிலை நிலையானது என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.செய்தி நிறுவனமான பி.டி.ஐ படி, அவரது தந்தை ஹனுமந்தா ராவ், “நான் எப்போதாவது அவளுடன் பேசினேன், வகுப்புகளில் கலந்துகொள்ள அவர் அவசரப்படுகையில்,…
அட்டாரி: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். காஷ்மீரில் மினி சுவிட்சர்லாந்து என்ற அழைக்கப்படும் பைசரன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தானியர்கள் விசாக்கள் வரும் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விசாக்களை அதிரடியாக ரத்து செய்துள்ளதையடுத்து இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் பாகிஸ்தானுக்குள் செல்ல பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்…
சென்னை: இந்தியாவில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. ரெட்மி நோட் 14 புரோ+ 5ஜி, ரெட்மி நோட் 14 புரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 14 5ஜி என மூன்று மாடல்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிஸ் போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. இந்த மூன்று போன்களும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. லைவ் டிரான்ஸ்லேட், சர்க்கிள் டு சேர்ச் உள்ளிட்ட ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: மூன்று…
சென்னை: அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டுமென துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இத்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இடம்பெறும் பணியாளர்கள் 2024 டிசம்பர் 31-ம் தேதிக்குள் குறிப்பிட்ட பாடத்தில் இளநிலைப் பட்டமும், பிஎட் படிப்பும் முடித்திருக்க வேண்டும். இதுதவிர சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உதவி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற…
நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை தொடங்கினர். ரஷீத் 19 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களும் எடுத்தனர். புதியவரான ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். அடுத்து இறங்கிய ஜடேஜா, துபே இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் தோனி, ஜேமி ஓவர்டன் இருவரும் தலா 4 ரன்கள் எடுத்தனர். இப்படியான 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் சுமார் 12 ஆயிரம் இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவில் உரிமைகள் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள், LGBTQ ஆதரவாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்த ஆர்வலர்கள் உட்பட 150- க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. மேன்ஹேட்டன் தொடங்கி பாஸ்டன் வரையிலான முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களில், அரசாங்க பணி ஆட்குறைப்பு, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்கா தவிர்த்து லண்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நகரங்களில் இந்த போராட்டங்கள் நடந்துள்ளன. வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாம் காணும் இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் சார்ந்தவை மட்டுமல்ல. அவை தனிப்பட்ட…
