காஞ்சிபுரம்: “உயர் கல்வி முடிக்கும் மாணவர்கள் சமூக முன்னேற்றதுக்கு ஏதாவது பங்காற்ற வேண்டும்” என்று முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி ஆண்டு விழா இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் முருககூத்தன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இறையன்பு பேசியது: “மாணவர்கள் உயர் கல்விக்கு வரும்போதுதான் ஒரு படிப்பை ஆழ்ந்து படிக்கின்றனர். பள்ளியில் பல்வேறு பாடங்களை படிக்கிறோம். ஆனால் உயர் கல்வியில் புலமை பெரும் வகையில் ஒரு குறிப்பிட்ட பாடத்தை ஆழ்ந்து படிக்கிறோம். உயர் கல்வியில் சிறந்து படிப்பவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக முடியும். பல நாடுகளுக்கு செல்வதால் கிடைத்த புகழைவிட கல்வி வளர்ச்சியால் கிடைத்த புகழ்தான் முக்கியமானது. கிரேக்கத்துக்கு பணத்தாலா புகழ் கிடைத்தது. அங்கு பல்வேறு தத்துவஞானிகள் தோன்றினர். கல்வியால்தான் கிரேக்கம் புகழ் பெற்றது. இந்த விழாவில் மாணவர்களை பார்க்கும்போது திருவிழாக் கூட்டத்தை பார்ப்பதுபோல் உள்ளது.…
Author: admin
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷி நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி மிரளச் செய்தார். அவரது புயல் வேக ஆட்டத்தால் 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பிஹார் மாநில தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமஸ்திபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் வலுவான மும்பை அணிக்கு எதிராக களமிறங்கினார். யு-19 இந்திய அணிக்காகவும் சூர்யவன்ஷி விளையாடி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா ஏ அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4 நாட்கள் ஆட்டத்தில் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க…
கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்பு கொழும்புவில் பேசிய அதிபர் அனுர திசநாயக்க, “வளர்ச்சி, புதுமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கிறது. இந்த கொள்கையின் தொடக்கமாக பிரதமர் மோடியும் நானும் பல்வேறு மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் சாத்தியமான கூட்டாண்மை குறித்து விவாதித்தோம். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்துக்காக இந்திய அரசு வழங்கியுள்ள ரூ.300 கோடி நிதியுதவிக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை அரசு அவருக்கு (பிரதமர் நரேந்திர மோடி) இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை வழங்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த…
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14-ம் தேதி மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக அங்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஐயப்ப பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சாரலாகப் பெய்த மழை வலுவடைந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பத்தினம்திட்டா, ஆலுவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ’ஏஸ்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே, தற்போது மே 23-ம் தேதி ‘ஏஸ்’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் வியாபார பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இப்படத்தின் பாடல்களை ஜஸ்டின் பிரபாகரன் உருவாக்கி இருக்கிறார். பின்னணி இசையமைக்கும் பணிகளை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கும் இதனை ஆறுமுக குமாரே தயாரித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக மலேசியாவிலேயே நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்…
சென்னை: அமைச்சரவையில் விடுவிக்கப்பட்ட பொன்முடி, செந்தில்பாலாஜி இருவரும் 2-வது நாளாக பேரவைக்கு வரவில்லை. தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் முதல் வரிசையில் இருந்த பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்த செந்தில்பாலாஜி பெயரும் நீக்கப்பட்டு, 3-வது வரிசைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் பேரவைக்கு வரவில்லை. இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான நேற்று இருவரும் பேரவைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் இருவரும் பேரவைக்கு வரவில்லை. அதேநேரம், அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்று பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8815-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சற்றே குறைந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.16) மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8815-க்கும், பவுனுக்கு ரூ.760…
அதை எதிர்கொள்வோம்: நாங்கள் நாய்களை வணங்குவதைப் போலவே, எங்கள் உடைகள், தளபாடங்கள் மற்றும் தளங்களில் ரோமங்களுக்கு எதிரான தொடர்ச்சியான போர் சோர்வடையும். உரோமம் இல்லாமல் ஒரு கோரை தோழரைப் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! எந்தவொரு நாய் முழுவதுமாக சிந்திக்கப்படவில்லை என்றாலும், சில இனங்கள் அவற்றின் குறைந்தபட்ச உதிர்தலுக்கு பெயர் பெற்றவை, இது ஒவ்வாமை பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது தூய்மையான வீட்டை விரும்புவோருக்கு ஏற்றதாக அமைகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தை 21 வயதான இளங்கலை இந்தியரை நாடு கடத்துவதை அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிகமாக தடுத்துள்ளார், அதன் மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது.கிருஷ் லால் இசெர்டாசனி இல் இளங்கலை பட்டம் பெற்று வருகிறார் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம் 2021 முதல் ஒரு எஃப் -1 மாணவர் விசாவுடன். நீதிமன்ற ஆவணங்கள் “நல்ல கல்வி நிலைப்பாட்டைப் பராமரித்து, இசெர்டாசனி இப்போது தனது மூத்த ஆண்டின் இறுதி செமஸ்டரில் உள்ளது, இது பட்டப்படிப்பு வரை 30 நாட்களுக்குள் மீதமுள்ளது.””நவம்பர் 22, 2024 அன்று அவர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொள்கிறார்” என்று இசெர்டசானி ஒப்புக்கொள்கிறார் “என்று ஆவணங்கள் தெரிவித்தன, ஆனால் வழக்கை மறுபரிசீலனை செய்த பின்னர் குற்றச்சாட்டுகளைத் தொடர வழக்கறிஞர் மறுத்துவிட்டார். பி.டி.ஐ அறிவித்தபடி அவரது விசா ரத்து தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. “ஒழுங்கற்ற நடத்தைக்காக இசெர்டாசனி கைது செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை மறுபரிசீலனை செய்தபின் மாவட்ட வழக்கறிஞர்…
தனியார் பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து கட்டண நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தவும் அதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய சட்டம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லி அரசு ஒரு துணிச்சலான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நடத்தும் 1,677 பள்ளிகளில் கட்டண நிர்ணய நடைமுறை மற்றும் வழிகாட்டுதலை இந்த சட்டம் அளிக்கும். அரசால் இதுபோன்ற ஒரு சட்டம் கொண்டு வரப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை” என்றார். கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் கூறுகையில், “புதிய விதிகளை நடைமுறைப்படுத்த 3 குழுக்கள் அமைக்கப்படும்.…
