புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: “140 கோடி இந்தியர்களின் கூட்டான பங்கேற்பின் மூலம் சிறப்பான ஆளுகை, மாற்றம் என்பதில் தெளிவான கவனம் செலுத்தியது பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி’ என்ற வழிகாட்டப்பட்ட கோட்பாடுகள் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரைவாகவும், பெருமளவிலும், உணர்வுப்பூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை தந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி முதல் சமூக முன்னேற்றம் வரை எனது அரசு மக்களை மையப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்குதல், அனைத்துத் துறையிலும் முன்னேற்றம் என்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியா தற்போது அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, பருவநிலை செயல்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் உலகளாவிய முக்கிய…
Author: admin
மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக விழா (வசந்த உற்சவம்) 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக விழா இன்று (ஜூன் 9) நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் தொடங்கினர். பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு சண்முக வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் வரையிலும் பக்தர்கள் சுமந்து வந்த பாலில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து…
மீண்டும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. சன்னி தியோல் நடிப்பில் வெளியான ‘ஜாட்’ படத்தினை இயக்கியிருந்தார் கோபிசந்த் மாலினேனி. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் ‘ஜாட் 2’ படத்தினை அறிவித்தது படக்குழு. இப்போதைக்கு இந்தப் படம் தொடங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால், கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பாலகிருஷ்ணா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 111-வது படமாகும். இதனை ‘விரித்தி’ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் தான் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி’ படத்தினை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தில் கோபிசந்த் மாலினேனி – பாலகிருஷ்ணா கூட்டணி இணைந்து பணிபுரிந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து இன்று (ஜூன் 9) அளித்த மனுவின் விவரம்: கடந்த மே 26-ம் தேதி தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர், விவசாயி கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு, விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் எனஉத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர்க்கடன்கள் வழங்கப்படும். ஆனால் அந்த பயிர்க் கடன்கள் 2 மடங்கு…
புகைப்படம்: பிரகாசமான பக்கம்/ யூடியூப் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவர்கள் ஒரு நபரின் உண்மையான பண்புகளை சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர். இந்த சோதனைகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு கூறுகளைக் கொண்ட வித்தியாசமான படங்களைக் கொண்டுள்ளன, அவை கண்களை ஏமாற்றுகின்றன- எனவே இந்த சோதனைகள் ஆப்டிகல் மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், ஒரு நபர் படத்தில் முதலில் கவனிப்பதைப் பொறுத்து அவற்றின் உண்மையான இயல்பு பற்றி நிறைய சொல்கிறது.YouTube வீடியோவில் பிரகாசமான பக்கத்தால் பகிரப்பட்ட இந்த குறிப்பிட்ட படம், ஒரு நபர் பிடிவாதமாக அல்லது வெட்கப்படுகிறாரா என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. எப்படி? சரி, ஒரு நபர் ஒரு காகம் அல்லது முயலைக் காணக்கூடிய படத்தை முதல் பார்வையில் பார்வையில், ஒரு நபர் முதலில் ஒரு நபர் கவனிப்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் உண்மையான…
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், செப்டம்பர் 10-ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்திருந்த சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், ஆகஸ்ட் 12-ம் தேதி முறையான முன்னறிவிப்பு செய்யாததாலும், செப்டம்பர் மாதம் நடந்த போது போக்குவரத்து…
மதுரை: தமிழகத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைப்பதற்காக ‘தலைவர்கள் பூங்கா’ உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி மார்க்கெட் நுழைவுவாயிலில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க அனுமதி கோரி பால்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதில், “பொது இடங்களில் தலைவர்களின் சிலை அமைக்கும் விவகாரத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைக்கும் வகையில் தலைவர்கள் பூங்கா அமைக்க தேவையான இடங்களை அடையாளம் காண வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளையும் தலைவர்கள் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைவர்கள் பூங்கா உருவாக்கும்…
உங்கள் மூளை வேலையில்லா நேரத்தைக் கொடுங்கள்அதை நம்புங்கள் அல்லது இல்லை, மறப்பது சில நேரங்களில் உங்கள் மூளையின் அதிக சுமை என்று சொல்லும் வழி. நன்றாக தூங்கு, மன இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள், ஆஃப்லைனில் நேரத்தை செலவிடுங்கள். மனம் கொண்ட சுவாசம், இயற்கையில் நடப்பது அல்லது 10 நிமிடங்களுக்கு எதுவும் செய்யாதது கவனம் மீட்டமைக்க உதவுகிறது மற்றும் நினைவக தக்கவைப்பை அதிகரிக்கும்.
சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலின் வைகாசி விசாகத் தேரோட்டம் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். சேலத்தின் பழமை வாய்ந்த சுகவனேஸ்வர சுவாமி கோயிலில், வைகாசி விசாகப்பெருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய உற்சவமான வைகாசி விசாகத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவ மூர்த்திகள் தேர்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், காலை 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட…
‘தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ஜூலையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார். ‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள படத்தை முடித்துவிட்டு, பாண்டிராஜ் படத்துக்கு விஜய் சேதுபதி தேதிகள் ஒதுக்குவார் எனக் கூறப்படுகிறது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரிக்க லைகா நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
