சென்னை: தமிழகத்தில் 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்றும் உயர்கல்வியை திமுக அரசு சீரழிக்கிறது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேலும் 4 இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 35 புதிய கல்லூரிகளைத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு ஒரே ஒரு புதிய பேராசிரியரைக் கூட திமுக அரசு தேர்ந்தெடுத்து நியமிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தலா 10 கல்லூரிகள் வீதம் இரு கட்டங்களாக 20 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26 ஆம் தேதி 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல்…
Author: admin
சென்னை: “அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோலாக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வரே, உங்கள் ஆட்சியில் அவுட் ஆஃப் கன்ட்ரோலாக இருக்கும் பாலியல் ‘சார்’களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.…
சென்னை: வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் கடந்த மாதம் 26-ம் தேதி பிறப்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறிய நிலையில், அந்த அறிவிப்புக்கு மாறாக, இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என அறிய விரும்புகிறோம். வேளாண்மை என்பது இயற்கையை சார்ந்த தொழிலாகும். போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கும் வரை, விவசாயிகள் மட்டுமல்ல அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் படும் துன்பங்கள் மாளாது.…
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சு. குணசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜுன் 9) காலை உயிரிழந்தார். திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன்(58). இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் குணசேகரன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார். 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தொடர்ந்து 2-ம் முறையாக…
நவீன காலங்களில், திருமணங்களும் சிக்கலானதாகிவிட்டன. ஒவ்வொரு திருமணமும் வெவ்வேறு பருவங்களில் செல்கிறது- சிரிப்பு மற்றும் ஆழமான தொடர்பால் நிரப்பப்பட்ட உயர்வுகள் உள்ளன, பின்னர் விஷயங்கள் தொலைதூர அல்லது வழக்கத்தை உணரும் இடங்கள் உள்ளன. காலப்போக்கில், வேலை, பொறுப்புகள், மன அழுத்தம் மற்றும் பெற்றோருக்கு கூட தம்பதிகள் உணர்ச்சி ரீதியாக விலகிச் செல்லக்கூடும். எனவே, உங்கள் திருமணத்தில் அன்பை மீண்டும் எழுப்புவதற்கும், உங்கள் கூட்டாளருடனான உங்கள் உறவை புதுப்பிப்பதற்கும் சில எளிய தட்டுகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
சென்னை: சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது? என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார்…
சென்னை: கடைசி செமஸ்டர் தேர்வு மற்றும் துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து ஜூன், ஜூலையில் ஒரு சிறப்பு துணை தேர்வு நடத்துவதன் மூலம் அரியர் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் அறிவுரையின் பேரில், அம்மாணவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன், ஜூலையில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 18-ம் தேதி…
சென்னை: தவெகவில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propagada & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி,…
லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-க்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. 11-ம் தேதி இந்த ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், இதில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் பேசியுள்ளார். “இதில் வெற்றி பெற வேண்டுமென்பது எங்களுக்காக மட்டுமல்ல. எங்களது அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்காவும் தான். அவர்கள் வெளிப்படுத்திய அதே சிறப்பான ஆட்டத்தை நாங்களும் வெளிப்படுத்துவோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பயணம் தொடங்கிய போது நாங்கள் இந்த இடத்தில் இருப்போம் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் ஒவ்வொரு தொடராக மேம்பட்டோம், வளர்ச்சி கண்டோம். எங்கள் அணியில் அனுபவமும், இளமையும் கலந்துள்ளது. இந்த நிலையை எட்ட கடுமையாக உழைத்தோம். இதற்கு முன்பு எங்களது முயற்சிகளில் நாங்கள் இரண்டு அரையிறுதி…
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூன் 10) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (ஜூன் 11) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12-ம் தேதி கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு…
