பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களையும் ஜன்னிக் சின்னர் 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் சின்னர் கைப்பற்றினார். எனினும் அடுத்த 3 செட்களையும் கடுமையாக போராடி 7-6 (3), 7-6 (10-2) என்ற கணக்கில் கைப்பற்றினார் கார்லோஸ் அல்கராஸ். முடிவில் 5 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டும் அவர்,…
Author: admin
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அமெரிக்கா முழுவதும் நாள்தோறும் 3,000 பேர் கைது செய்யப்பட்டு அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர். அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடந்த சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும்…
சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் மற்றும் சுயேச்சைகள் 7 பேர் என 13 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட, வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, கடந்த ஜூன் 2-ம் தேதி வேட்பு…
சென்னை: உலகிலேயே மிகவும் உயரமான காஷ்மீர் செனாப் ரயில்வே மேம்பாலத்தின் உறுதித்தன்மையை கண்காணிக்கும் பணியை சென்னை சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அம்மையத்தின் இயக்குநர் என்.ஆனந்தவல்லி தெரிவித்தார். சென்னை தரமணியில் இயங்கி வரும் சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆர்சி) இன்று (ஜூன் 10) வைர விழாவை கொண்டாடுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் என்.ஆனந்தவல்லி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 1965-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி தொடங்கப்பட்ட சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி நிறுவனம் 60-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. கட்டமைப்பு பொறியியல் துறையில் இங்கு ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் முறுக்கு கம்பி நாங்கள் உருவாக்கியதுதான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம். கட்டமைப்பு துறையில் புதுமைகளை கண்டறிவதுடன் பாரம்பரிய கட்டிடங்களின்…
சென்னை: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணபிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதம் உள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது. காவலர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சட்டம் – ஒழுங்கு, உளவியல் தொடர்புடைய கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் ஏற்கெனவே உடல் தகுதியை நிரூபித்து காவல் பணிக்கு சேர்ந்தவர்கள் என்பதால் உடல் தகுதி தேர்வு கிடையாது. ஆனால், பொதுப் பிரிவில் வருபவர்களுக்கு கூடுதலாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.…
புதிர்கள், நினைவக விளையாட்டுகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் நடவடிக்கைகள் போன்ற மூளைக்கு சவால் விடும் விளையாட்டுகள் கவனம் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஜிக்சா புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள் அல்லது வரிசைமுறை விளையாட்டுகள் போன்ற செயல்பாடுகளுக்கு குழந்தைகள் நெருக்கமாக கவனம் செலுத்த வேண்டும், விமர்சன ரீதியாக சிந்திக்க வேண்டும், இது காலப்போக்கில் அவர்களின் செறிவு திறன்களை பலப்படுத்துகிறது.
சென்னை: மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநருக்கு கடும் தண்டனை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தில் மது குடித்துவிட்டு பணிக்கு வரக் கூடாது எனவும் அதற்கான தண்டனை குறித்தும் சுற்றறிக்கை வாயிலாக பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தியிருப்பதை கண்டறியும் கருவியும் கொள்முதல் செய்யப்பட்டு, நாள்தோறும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால் மது அருந்தியதாக முன்வைக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது எழும் புகாரையும் முற்றிலும் தவிர்க்கும் வகையில் மது குடித்துவிட்டு பணிக்கு வருவோருக்கு கடும் தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதன்படி, மதுபோதை குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால், அரசின் அனுமதிக்கு பிறகே மீண்டும் பணியில் சேர முடியும். மண்டல அளவில் பணியிடமாற்றம், ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படக் கூடும். இதுதொடர்பான ஆலோசனைகளுக்கு பிறகு அரசு…
சென்னை: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைத்து 23 உறுப்பினர்களுடனான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிதழில் உணவுத்துறை செயலர் சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான இந்த கவுன்சிலில், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், தஞ்சாவூர் எம்.பி., எஸ்.முரசொலி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர், இந்தியன் ஆயில் நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் உதவி பொதுமேலாளர், பிஐஎஸ் தென் மண்டல துணை இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர், ஈரோடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர், சென்னை அம்பத்தூர் இந்திய நுகர்வோர் விழிப்புணர்வு சங்க தலைவர்,…
மதுரை: பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர், சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இந்நிலையில், நேற்று காலை 11.52 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். கிழக்கு கோபுர வாசல் அருகே கோயிலுக்குள் சென்ற அமித்ஷாவை கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.பின்னர் கோயிலுக்குள் சென்ற மத்திய அமைச்சர், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி, முக்குறுணி விநாயகர், விபூதி விநாயகரை தரிசனம் செய்தார். உச்சிகால பூஜையில்…
