கரூர்: 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விஜயகாந்த் மீதான இரங்கல் தீர்மானத்துக்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரிகம். 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்குவது என்பது ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க…
Author: admin
புதுடெல்லி: தேஜாஸ் மார்க் -1ஏ ஜெட் இன்ஜின் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில் அவற்றின் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிஇ நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவுமான லாரி கல்ப் கூறியுள்ளதாவது: இந்திய விமானப் படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்துக்கான ஜெட் என்ஜின்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு தயாரித்து வழங்குவதில் ஜெனரல் எலக்ட்ரிக் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. சப்ளையர்களின் திறனை அதிகரிக்க நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டை விட ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிறுவனத்தின் செயல்திறன் இரட்டை இலக்க அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் 5-வது தலைமுறை போர் விமானத் திட்டத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு பலமாக உள்ளது. அதனால்தான் இந்தியாவின் செயல்பாட்டுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளோம். இவ்வாறு…
மகிழ்ச்சி வெறும் அதிர்ஷ்டம் அல்ல – இது காலப்போக்கில் கட்டப்பட்ட ஒரு பழக்கம். நீங்கள் உணர்வுபூர்வமாக உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கலாம், மேலும் வாழ்க்கையில் உள்ள நேர்மறைகளில் கவனம் செலுத்தவும், மகிழ்ச்சியாகவும் உணர உங்கள் மனநிலையை மாற்றியமைக்கலாம். அதற்கான சில உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
துங்கர்பூர்: ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர். முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத தம்பதியினர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற கட்டுப்பாடு மட்டும் இந்த பழங்குடியினர் சமுதாயத்தில் உள்ளது. அதனால் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ராமா பாய் கராரிக்கும், ஜீவாலி தேவிக்கும் ஏற்பட்டது. இதனால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும்படி பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும்…
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிசாவில் நடந்தது. படப்பிடிப்பில் மகேஷ்பாபு, பிருத்விராஜ் பங்கேற்ற காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் மாதவன் இணைய உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.“இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்ஷன் அட்வென்சர் படமாக இருக்கும்’ என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார். இந்தப் படத்துக்கு மரகதமணி இசை அமைக்கிறார்.
சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, புறநகர் பகுதிகளில் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. பின்னர் மாலை நேரத்தில் இருள் சூழ்ந்து, புறநகர் பகுதிகளான திருப்போரூர், தாம்பரம், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், புழல், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மாநகரப் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், மாதவரம், கிண்டி, கோயம்பேடு, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது. பலத்த காற்று வீசியதால், மாநகர் மற்றும் புறநகர்…
புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான பாதுகாப்பு கவச வாகனங்கள், ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 9 விதமான தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) கடந்த சனிக்கிழமை வழங்கியது. தரையில் இருந்து இயக்கப்படும் பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் சிபிஆர்என் (ரசாயனம், உயிரி, கதிர்வீச்சு, அணுசக்தி) கண்காணிப்பு வாகனங்கள், பாதுகாப்பு கவச வாகனங்கள் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பங்கள் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. தொழில்நுட்பங்களுக்கான லைசென்ஸ் ஆவணங்களை மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் பகுதியில் டிஆர்டிஓ கீழ் செயல்படும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (விஆர்டிஇ) கடந்த சனிக்கிழமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியது. பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், (பெல்), தனியார் நிறுவனமான பாரத் போர்ஜ், மெட்டல்டெக் மோட்டார் பாடிஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு…
கொச்சி: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்எஸ்சி ஐரினா, கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது. . உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்று எம்எஸ்சி ஐரினா. இது 24,346 டிஇயு (20 அடிக்கு சமமானது) திறன் கொண்டது. 26 அடுக்குகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல் நேற்று காலை 8 மணியளவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் வந்தடைந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இது இன்று வரை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். பொறியியலின் அதிசயம் என்று போற்றப்படும் இது, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சரக்கு பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வளவு பெரிய கப்பல் இந்தியாவின் துறைமுகம் ஒன்றில் நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இந்த நிகழ்வு, மிகப்பெரிய சரக்கு போக்குவரத்தை கையாள விழிஞ்சம் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதுகுறித்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி…
திருமலை: ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு திருமலையில் நேற்று வைர கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் நடத்துவது வழக்கம். உற்சவ மூர்த்திகளின் சிலைகளில் ஏதாவது தேய்மானம் இருந்தால் அதனை சரிசெய்யும் விதமாக இந்த 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேக விழாவை கடந்த 1990-ம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதையொட்டி, கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதயடுத்து சிறப்பு திருமஞ்சன சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு ஆண்டுக்கு ஒரே ஒருமுறை அணிவிக்கப்படும் வைர கவச அலங்காரம் செய்யப்பட்டு, கோயிலுக்கு வெளியே சகஸ்ர தீப அலங்கார சேவையில் உற்சவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஜேஷ்டாபிஷேகத்தில் இன்று முத்து அங்கி அலங்காரத்திலும் நாளை…
அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நாயகன் ஜீவா (விஜித் பச்சான்), குழந்தை கடத்தல் வழக்குக்காகக் கைது செய்யப்படுகிறார். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அவர் அதைச் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அவர் போலீஸிடம் சில ரகசியங்களைச் சொல்கிறார். செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி ஜீவா சிறைக்குச் சென்றது ஏன்? போலீஸாரிடம் அவர் தெரிவித்த ரகசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது, படம். உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சாதி கொடுமைகள் பற்றியும் அதை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பின்னணியிலும் எத்தனை படங்கள் வந்தாலும் அவை அனைத்தும் இன்றைய தேவையே. அப்படி ஒரு பின்னணியில் ஆணவக் கொலை பற்றி அழுத்தமாகப் பேசுகிறது, அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி இருக்கும் இந்த படமும். பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை மட்டுமே வைத்து சாதாரணம் என்று ஒதுக்கிவிட முடியாது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் திரைக்கதை சில இடங்களில்…
