சென்னை: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் 2026-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறும். அந்த மாநாட்டில், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்று அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு 2026-ம் ஆண்டில் ஜன.7-ம் தேதி மதுரையில் நடைபெறும்.இந்த மாநாட்டில் வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கவின் கொலை குறித்து திருச்சியில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆணவப்படுகொலை சம்பவங்களுக்கு அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் செப்.17-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பாக, புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும். ஆணவப்படுகொலைக்கு சட்டம் இயற்றப்படும் போது, அது போன்ற நிகழ்வுகள் குறையும்.பள்ளி…
Author: admin
உயர் இரத்த அழுத்தம் உலகின் மிகவும் பொதுவான நாள்பட்ட சுகாதார நிலைமைகளில் ஒன்றாகும். WHO தரவு 2023 இன் படி, உலகளவில் 1.28 பில்லியன் பெரியவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 46% க்கும் மேற்பட்ட பெரியவர்கள் உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியாது. பாரம்பரிய மூலிகை மருத்துவம் மற்றும் பல பழைய பள்ளி வைத்தியம் ஆகியவை இருதய செயல்பாடு மற்றும் சுழற்சிக்கு உதவும். பர்டாக் ரூட், மஞ்சள் கப்பல்துறை, சர்சபரில்லா, எல்டர்பெர்ரி மற்றும் ஹைட்ரேஞ்சா வேர் போன்ற மூலிகைகள் பல நூற்றாண்டுகளாக அவற்றின் சுத்திகரிப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்தத்தை செலுத்தும் விளைவுகளுக்கு மிகவும் மதிப்புடையவை. தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லாவிட்டாலும், இந்த மூலிகைகள் ஆரோக்கியமான இரத்த அழுத்த ஒழுங்குமுறைக்கு ஒரு துணை உதவியாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்போம் …
புதுடெல்லி: இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்தது. ஜூலை 30 அன்று அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட நிர்வாக உத்தரவு எண் 14324-ஐ தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியா மீது 25 சதவீத வரியையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தார். இதனால் மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பை பொருட்படுத்தாமல், நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார சக்திச்…
சென்னை: குற்ற வழக்குகளில் சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளாக உள்ள குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க மாநில அளவில் விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவையில் 5 வயது சிறுமியின் கண் முன்பாக, அவரது தாயாரை கொடூரமாகக் கொலை செய்து எரித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், இதுபோன்ற சிக்கலான வழக்குகளில் கொலைகளை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகளாக உள்ள குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் விதமாக மனநல ரீதியிலான உளவியல் ஆலோசனைகள், சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த…
புதுடெல்லி: ‘இந்தியா மிக விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்கும். அடுத்து, சொந்தமாக விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் துறையில் சாதனைகளைப் படைப்பது தற்போது இந்தியாவின் இயல்பாகிவிட்டது எனக் குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். அவர் தனது உரையில், “இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது. இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம். விண்வெளித் துறையில் சாதனைக்குப் பின் சாதனைகளை எட்டுவது இந்தியா மற்றும் அதன் விஞ்ஞானிகளின் இயல்பான பண்பாக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா சந்திரனின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக மாறி, வரலாற்றை…
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளும் சமீப ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியைத் தீவிரப்படுத்தி வரு கின்றன. அந்த வகையில் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ இந்திய விண்வெளித் துறையின் சாதனை களுக்கு மற்றுமொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற இந்திய வம்சாவளியினர் விண் வெளிக்குப் பயணித்திருந்தாலும், அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக இல்லாமல், அமெரிக்காவின் சார்பாகவே பயணங்களை மேற்கொண்டனர். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்னும் பெருமைக்குரிய ராகேஷ் சர்மாகூட சோவியத் ஒன்றி யத்தின் ‘சோயுஸ் டி-11’ என்கிற விண் வெளித் திட்டத்தில்தான் அந்தச் சாதனையைப் படைத்தார். இஸ்ரோ தற்போது உருவாக்கியுள்ள ககன்யான் விண்கலம், விண்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி இருக்கிறது. சுமார் ரூ.10,000 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த விண்கலம், முழுக்க…
ஊட்டி: மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது தடகள வீரர்களுக்கு களத்தில் பயனளிக்கும் என இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய சாம்பியன் ஷர்வானி சாங்லே தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் கிரசண்ட் பள்ளி விளையாட்டு விழா இன்று நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், நகராட்சி துணை தலைவர் ஜே.ரவிகுமார் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பாரா ஒலிம்பிக் தடகள வீரர் திலிப் காவிட், இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய தடகள சாம்பியன் ஷர்வானி சாங்லே மற்றும் பயிற்சியாளர் வைஜ்நாத் காலே கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். இந்திய தடகள வீராங்கனை ஷர்வானி சாங்லே மற்றும் தெற்காசிய தடகள சாம்பியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தின் காலநிலை தடகள பயிற்சிக்கு ஏதுவாக உள்ளது. நாங்கள் ஒரு மாத காலமாக இங்கு பயிற்சி பெற்று வருகிறோம். மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆக. 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆக.24) முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45…
உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து அடர்த்தியான சூப்பர்ஃபுட்கள் ஆகும், அவை சீரான ஊட்டச்சத்துக்கு அவசியமானவை. இந்த உணவுகளை உட்கொள்வதற்கான நேரம் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதில் ஆற்றலை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்துதல், எடை நிர்வாகத்திற்கு உதவுதல் மற்றும் தூக்க தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். ஊட்டச்சத்துக்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்களில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் வயிற்றில் விரைவாக அணுகக்கூடியவை, அவை மேல் சிறுகுடலில் உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. முந்தைய நாளில் இந்த உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்து அதிகரிப்பை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த சுகாதார நன்மைகளுக்கு பங்களிக்கும் என்று இது அறிவுறுத்துகிறது. தேதிகள் மற்றும் கொட்டைகள் கொண்ட முன்-வொர்க்அவுட் தின்பண்டங்கள் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன, அதே நேரத்தில் பாதாம் போன்ற மெக்னீசியம் நிறைந்த கொட்டைகள் மாலை உட்கொள்வது சிறந்த தூக்கத்தை…
செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதும் அதனால் ஏற்பட்ட முன் னேற்றங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். அன்று முதல் இன்று வரை செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி தொடர்பியல், நாட்டுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண் காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மேலாண்மை, அறிவியல் ஆராய்ச்சி போன்று பல துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. என்ன நடந்தது? – 1957ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து முதல் முறையாக ஸ்புட்னிக் 1 என்கிற செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுமார் 1000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றியும், வேறு சில செயற்கைக்கோள்கள் பிற கோள்களைச் சுற்றியும் வருகின்றன. 1975இல் விண் வெளி ஆராய்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்த இந்தியா, முதல் முறையாக ரஷ்யாவின் உதவியோடு ஆர்யபட்டா செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. உலகின் எந்த மூலையில் இருந்தும் தொலைத் தொடர்பு கிடைக்கவும், இணைய வசதி கிடைக்கவும்,…