சென்னை: சென்னை காவல் துறையில் உள்ள மோப்பநாய் படைப்பிரிவுக்கு, புதிதாக 11 நாய் குட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டு வகை நாய்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டது. கொலை, கொள்ளை, போதைப் பொருள் பதுக்கல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்கவும், வெடிகுண்டுகளைக் கண்டறியும் பணியிலும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பராமரிக்கவும், பயிற்சி அளிக்கவும், சென்னை காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு உள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மற்றும் புனித தோமையர் மலையில் இந்த படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவை மேம்படுத்தும் வகையில் காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி, புதிதாக 11 துப்பறியும் நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அதில் லாப்ரடோர் இனத்தை சேர்ந்த 2 குட்டிகளும், பெல்ஜியம் மாலினோயிஸ் இனத்தை சேர்ந்த 3 குட்டிகளும், டாபர்மேன் இனத்தை சேர்ந்த ஒரு குட்டியும் என மொத்தம் 6 குட்டிகள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. மேலும், பெல்ஜியம்…
Author: admin
டிமென்ஷியா என்பது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொடும் ஒன்று -இது ஒரு நேசிப்பவர், ஒரு நண்பர் அல்லது நாம் வயதாகும்போது கூட. இது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல, மாறாக நினைவகம், சிந்தனை அல்லது முடிவெடுப்பதில் ஒரு பொதுவான சொல், இது அன்றாட வாழ்க்கையில் தலையிடுகிறது. வயதானவர்களில் இது மிகவும் பொதுவானது என்றாலும், இது வயதான ஒரு சாதாரண பகுதி அல்ல. இது ஒரு முக்கியமான வேறுபாடாகும், மேலும் என்ன நடக்கிறது, எவ்வாறு ஆதரவை பெறுவது என்பதை குடும்பங்களுக்கு நன்கு புரிந்துகொள்ள உதவும் ஒன்று.டிமென்ஷியா பற்றி பேசுவது கடினமாக இருக்கும். இது சில நேரங்களில் மிகப்பெரிய, குழப்பமான, பயமுறுத்தும். ஆனால் இது கவனம், கவனிப்பு மற்றும் இரக்கத்திற்கு தகுதியான ஒரு தலைப்பு. நாம் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் செய்ய முடியும் -அதாவது, நேசிப்பவரின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனிப்பது, ஒரு பராமரிப்பாளருக்கு உதவி செய்வதை வழங்குவது அல்லது…
பஹல்காம்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பஹல்காம் பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. எனவே அப்பகுதிவாசிகள் குதிரைகள் மூலம் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருமானம்தான் அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. சுமார் 6 ஆயிரம் குதிரைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பஹல்காமிலிருந்து பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஒரு நபரை குதிரையில் அழைத்துச் செல்ல ரூ.1,300 வசூலிக்கின்றனர். அதேநேரம், பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, டபியாயின் ஆகிய 4 பகுதிகளுக்கும் சேர்த்து அழைத்துச் செல்ல ரூ.2,400 வசூலிக்கின்றனர். சில நேரங்களில் இந்த கட்டணம் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிப்பது உண்டு. கோடைகாலத்தில் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் செல்வது உண்டு. இந்நிலையில், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில்…
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். 29 வயதில் தனது ஒய்வை அறிவித்து பலருக்கும் அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். “ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவை அறிவிக்கிறேன்” என சமூக வலைதள பதிவு மூலம் பூரன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். திங்கள்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது. ஓய்வு குறித்த முடிவை தங்களிடம் பூரன் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. தேசிய அணிக்காக அவரது பங்களிப்புக்கு கிரிக்கெட் நிர்வாகம் நன்றி கூறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக பூரன் திகழ்கிறார். 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்கள் எடுத்துள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட்…
சென்னை: பயணி தவறவிட்ட தங்க நகைகளை, ஆட்டோ ஓட்டுநர் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் சக்திவேல் (53). இவர், குடும்பத்துடன் அவர் திருப்பூர் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி இரவு பேருந்தில் சென்னைக்கு வந்தார். சாலிகிராமம் அருகே 100 அடி சாலையில் இறங்கி 3 பைகளுடன் அங்கிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி எம்எம்டிஏ காலனியில் உள்ள அவரது வீட்டினருகே இறங்கி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது 2 பைகளை மட்டும் ஆட்டோவிலிருந்து எடுத்து வந்ததும், 7 பவுன் தங்க நகைகள் அடங்கிய ஒரு பையை ஆட்டோவில் மறந்துவிட்டதும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சக்திவேல் சாலிகிராமம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி ஆட்டோ ஓட்டுநர் விவரம் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அமைந்தகரை, வ.உ.சி. தெருவில் வசித்து…
உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு குடல் ஆரோக்கியம் மையமாக உள்ளது; இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, மன தெளிவு மற்றும் மனநிலையை ஆணையிடுகிறது.ஒரு ஆரோக்கியமற்ற குடல் மலச்சிக்கல் மற்றும் வீக்கம் முதல் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வீக்கம் வரை பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். நல்ல செய்தி என்னவென்றால், இயற்கையில் பல உணவுகள் உள்ளன, அவை உங்கள் செரிமான அமைப்பு சாதாரணமாக செயல்பட உதவுகின்றன மற்றும் உங்கள் குடல் நுண்ணுயிரியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பின்வருபவை சில சிறந்த குடல் நட்பு உணவுகள் மற்றும் அவை உங்கள் செரிமான அமைப்புக்கு சமநிலையை மீட்டெடுப்பதில் ஏன் செயல்படுகின்றன.தயிர்: ஒரு இயற்கை புரோபயாடிக்புரோபயாடிக்குகளின் எளிமையான ஆதாரங்களில் ஒன்று தயிர் -ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை வளர்க்கும் வாழ்க்கை கலாச்சாரங்கள். செரிமானத்தைத் தக்கவைக்க ஒரு வழக்கமான அடிப்படையில் தயிரை உட்கொள்ளுங்கள்; இது லாக்டோஸ் செரிமானத்தை மேம்படுத்துகிறது, அத்துடன் மலச்சிக்கலை நடத்துகிறது. குடல் பாக்டீரியாவை அழிக்கும் கூடுதல் சர்க்கரையைத் தவிர்க்க…
புதுடெல்லி: இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் இந்திய விமானப் படையின் ட்ரோன்கள், உளவு விமானங்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. தற்போது இந்திய விமான படையில் பாம்பார்டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்ஸ்டீரிம் ஜி100 ஆகிய உளவு விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் இஸ்ரேல் தயாரிப்பான ஹெரோன் ட்ரோன்கள் மற்றும் இந்திய விமானப் படையில் இருந்து விடுவிக்கப்பட்ட மிக் 25 ரக போர் விமானங்களும் உளவு விமானங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர பல்வேறு ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களும் எதிரி நாடுகளை வேவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 அதிவீன உளவு விமானங்களை வாங்க முடிவு…
லார்ட்ஸ்: நாளை (ஜூன் 11) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார் என்பதை பார்ப்போம். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைக்கும். தென் ஆப்பிரிக்க அணி வென்றால் 30 ஆண்டுகளாக ஐசிசி தொடரில் பட்டம் வெல்ல முடியாத வரலாற்றை மாற்றி எழுதும். லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்த ஆட்டம் வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். ஜூன் 16 ‘ரிசர்வ் டே’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளும் தங்களது கள செயல்பாடுகள் மூலம் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். மழை வருமா? – போட்டி நடைபெறும் நாட்களில் லார்ட்ஸ் மைதானத்தை ஒட்டிய பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை…
கீவ்: மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது. உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைனின் விமானப்படை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், 10 ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே தங்கள் இலக்குகளைத் தாக்கியதாகவும் கூறியது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களில் இருந்து, இப்போது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை…
சென்னை / சிறுவாபுரி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்ற கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளை ஒட்டி பெரும்பாலான முருகன் கோயில்களில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு பல்வேறு கோயில்களில் விழா நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். குன்றத்தூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குமரன்குன்றம் உள்ளிட்ட கோயில்களில்…
