சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை இன்று (ஏப்.11) தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. 3 நாட்களில் ரூ.4,160 உயர்வு: தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சங்கள் நடுத்தர வர்க்க மக்களை இனி தங்கம் வாங்குவது கனவு தான் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்க கெடுபிடியும்; சீனப் பிடிவாததும்! சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என…
Author: admin
சிகங்கரி என்பது பல நூற்றாண்டுகள் பழமையான எம்பிராய்டரி நுட்பமாகும், இது லக்னோவின் தெருக்களிலிருந்து தோன்றியது மற்றும் முக்கியமாக மலர் மற்றும் பைஸ்லி வடிவங்களின் சிக்கலான வடிவமைப்புகளை உள்ளடக்கியது. இது மஸ்லின், கைத்தறி, பருத்தி மற்றும் முல்முல் போன்ற இலகுரக துணிகளில் ஒரு வெள்ளை நூலுடன் தைக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்திற்கு ஏற்றது, காற்றோட்டமான துணிகளில் வடிவமைக்கப்பட்ட எம்பிராய்டரி மென்மையான காற்றோட்டத்தை அனுமதிக்கிறது, இது சூடான காலநிலைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. சிகங்கரி முதன்முதலில் முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர், அதன் காலமற்ற கவர்ச்சி ஒரு இறுதி ஃபேஷன் அழகியலாக மாறியுள்ளது. இந்த பாரம்பரிய இந்திய நுட்பத்தைத் தழுவி, பாலிவுட் பிரபலங்களின் அலமாரிகளில் இருந்து அன்றாட ஓட்டங்களுக்கு சில கோடைகால ஆறுதல், அழகான குர்தாக்களைத் திருடுவோம்.
‘கிங்’ படத்தில் ஷாரூக்கான் உடன் இணைந்து நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெண் குழந்தைக்கு தாயானார் தீபிகா படுகோன். இதனைத் தொடர்ந்து நடிப்பதற்கு இடைவெளிவிட்டு, முழுக்க குழந்தையுடனே நேரம் செலவழித்து வந்தார். இதனால், அவர் ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் தாமதமானது. எப்போது மீண்டும் நடிக்க திரும்புவார் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள ‘கிங்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க திரும்பவுள்ளார் தீபிகா படுகோன். இதில் ஷாரூக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஷாரூக்கான் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷாரூக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மே 18-ம் தேதி முதல் மும்பையில் ‘கிங்’ படப்பிடிப்பு தொடங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்துவிட்டு, பின்பு அனைத்து படப்பிடிப்புமே வெளிநாடுகளில் தான் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பல்வேறு…
மதுரை: பாதுகாப்பான ரயில் பயணத்துக்காக, திண்டுக்கல் அருகே ரயில்வே கேட்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாமரைப்பாடி – வடமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு ரயில்வே கேட்டுகள் செயல்படுகின்றன. இதுவரையிலும் ரயில்களுக்கான கைகாட்டி (சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்கு சைகை/சிக்னல் கம்பம்) வழிகாட்டுதலின்றி செயல்பட்டன. அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி வழிகாட்டுதலில் பாதுகாப்பாக கேட்டுகள் மூடி திறக்கப்பட்டன. ரயில் விபத்துகளை தவிர்க்க, பயண பாதுகாப்பை அதிகரிக்கவும் ஏப். 28 முதல் இந்த ரயில்வே கேட்கள் கைகாட்டி வழிகாட்டுதலுடன் ( இன்டர் லாக்) செயல்பட தொடங்கியுள்ளன. இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் கேட்டுகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கேட் அடைத்தால் தான் கைகாட்டியை இயக்கி பச்சை வர்ண சைகைக்கு கொண்டு வந்து ரயிலுக்கு வழி விட முடியும். கை காட்டியில் எப்போதும்…
புதுடெல்லி: சீனாவுடனான வர்த்தகப் போர் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உட்பட 75 நாடுகளுக்கான கூடுதல் கட்டணங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடைநிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் தொடங்கின. இன்றைய (வெள்ளிக்கிழமை) வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 1061.26 புள்ளிகள் உயர்ந்து, 74,941.53 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 354.90 புள்ளிகள் உயர்ந்து 22,754.05 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளின் இந்த ஏற்றம் முதலீட்டாளர்களிம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சரிவில் ஆசிய சந்தைகள்: முந்தைய நாளில் அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் குறித்த கவலைகள் முதலில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 5.6 சதவீதம்…
உங்கள் தலைமுடி எண்ணெயில் கறி இலைகளைப் பயன்படுத்துவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் கறி இலை-உட்செலுத்தப்பட்ட தண்ணீரைக் குடிக்க முயற்சித்தீர்களா? கறி இலைகளில் பீட்டா கரோட்டின், புரதம் மற்றும் இரும்பு ஆகியவை அதிகமாக உள்ளன, இது முடி மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது, முடி வீழ்ச்சியைக் குறைக்கிறது, மற்றும் முன்கூட்டிய சாம்பல் நிறத்தைத் தடுக்கிறது.நீங்கள் கறி இலைகளை நீர் வடிவத்தில் உட்கொள்ளும்போது, அவை உச்சந்தலையில் சுத்தப்படுத்தவும், முடி வேர்களை வளர்க்கவும் உள்ளே இருந்து வேலை செய்கின்றன. கூடுதலாக, இது உங்கள் உடலை நச்சுத்தன்மையடையச் செய்வதற்கும், உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்- முடி தரத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத மற்றொரு காரணி.உட்கொள்வது எப்படி: 10–15 புதிய கறி இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும், கஷ்டமாகவும், வெற்று வயிற்றில் வாரத்திற்கு சில முறை குடிக்கவும்.போனஸ் உதவிக்குறிப்பு: அடிப்படைகளை மறந்துவிடாதீர்கள்முடி தனிமையில் வளராது. நீரேற்றம், தூக்கம், ஹார்மோன் சமநிலை மற்றும் குடல் ஆரோக்கியம் அனைத்தும்…
மதுரை: மதுரையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரிலுள்ள விநாயகா நகரில் தனியார் மழலையர் பள்ளி 10 ஆண்டாக செயல்படுகிறது. இங்கு ஃப்ரி கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகின்றன. மேலும் தற்போது கோடைகால பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகின்றன. இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்ததில், கோடைகால பயிற்சிக்கு 20 குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். இதில் யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அமுதன்-சிவஆனந்தி ஆகியோரின் மகள் ஆருத்ரா படித்தார். ஏப். 29-ம் தேதி பள்ளி வளாகத்தில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மழலையர் பள்ளி தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக…
கேரளாவில் ‘துடரும்’ படத்தின் வசூல் அனைவரும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ‘எம்புரான்’ படத்துக்கு எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, எந்தவித விளம்பரமும் இன்றி வெளியான படம் ‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே, பலரும் இப்படத்தினைக் கொண்டாடத் தொடங்கினார்கள். முதல் நாள் 2-வது காட்சியில் இருந்து படத்தின் வசூல் இறங்கவே இல்லை. 2 நாட்களில் ரூ.40 கோடியை கடந்தது. இதனால் வர்த்தக நிபுணர்கள் பலரும் வியப்படைந்தார்கள். வார நாட்களிலும் தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் கேரளாவில் மட்டுமே மொத்த வசூல் ரூ.100 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்த வசூலை ‘எம்புரான்’ தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், இதர மொழிகளில் இருந்து ரீமேக் உரிமையை கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த வசூல், உரிமைகள் விற்பனை, ஓடிடி மற்றும்…
சென்னை: “உற்பத்தி பெருக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபோ போன்ற நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக 8 மணி நேரம் வேலை என்பதை குறைக்க ஒன்றிய பாஜக ஆட்சியை வலியுறுத்துவோம்.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம் சிந்திய, உயிரை இழந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்யப்பட்ட அடிப்படையில், அவர்கள் 8 மணி நேரம் வேலை செய்திருந்தாலும், உற்பத்தி உலக அளவில் பெருகியுள்ளது. உற்பத்தி பெருக்கத்திற்கு தொழிலாளர்களும், அவர்களது நவீன கண்டு பிடிப்புகளும் பேருதவி செய்துள்ளன.. இதை முதலாளிகளும் முதலாளித்துவமும் மறுக்க முடியாது. இத்தகைய கண்டுபிடிப்புகளையும், உற்பத்தி பெருக்கத்தையும் தனது…
புதுடெல்லி: உலகின் முதல் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா போட்டி போட்டு வரி உயர்வை அறிவித்து வருவது வர்த்தகப் போரின் தன்மையை தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி 84 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக சீனா நேற்று அறிவித்தது. உலக நாடுகளுக்கான வரி விதிப்பு விவகாரத்தில் ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐரோப்பிய யூனியனுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த வரி உயர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்று சீனா தெரிவித்துள்ளது. அதேபோன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வாரத்தில் சீன பொருட்களின் இறக்குமதிக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி வரி விதிப்பு வர்த்தகப் போரை…
