இஸ்லாமாபாத்: அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். அவ்வாறு, இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான்…
Author: admin
சென்னை: சென்னை எழும்பூர் அருகே தாசப்பிரகாஷ் பகுதியில் உள்ள தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இடிந்து விழும் நிலையும் உள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக, இக்கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர். சென்னை எழும்பூர் அருகே தாசப்பிரகாஷ் பகுதியில் தமிழக ரயில்வே காவல் துறையின், சென்னை மாவட்டத்துக்கான ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அருகே வலதுபுறத்தில் இந்த அலுவலக கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் ரயில்வே காவல்துறைக்கான அமைச்சுப் பணியாளர்கள் அலுவலகம், முதல் தளத்தில் காவல் கண்காணிப்பாளர் அறை, காவல் கட்டுப்பாட்டு பிரிவு, எஸ்.பி. சிறப்பு குற்றப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவு அலுவலகங்கள் இயங்குகின்றன. தரைதளம், முதல்தளத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த கட்டிடத்தின் முதல்…
மும்பை: தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தங்க நகைகளின் மீது கடன் வாங்குபவர்கள் தங்கள் கடன்களைப் புதுப்பித்தல், நீட்டித்தல், கூடுதல் பணம் பெறுதல் ஆகியவற்றில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க நகைகளைக் கொண்டு கடன் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், இந்த துறையில் ரிசர்வ் வங்கி தனது பிடியை இறுக்கும் என கூறப்படுகிறது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “இது தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்படுகின்றன,” என்று கூறியுள்ளார். வங்கிகள் மட்டுமல்லாது, தனியார் நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்க நகைக் கடன்களை வழங்கி வருகின்றன. வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் கட்டுப்பாடு, இவற்றின் மீது கிடையாது. வரவிருக்கும் விதிமுறைகள் அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களிலும் கடன் வழங்கும் நடைமுறைகளை…
இதயத்தில் ப்ரூக்ஃபீல்ட் மிருகக்காட்சிசாலை சிகாகோவிற்கு அருகில், குக்கீ என்ற சிறிய கிளி பின்னடைவு, வரலாறு மற்றும் தோழமையின் பிரியமான அடையாளமாக மாறியது. குக்கீ, ஒரு ஆண் மேஜர் மிட்சலின் காகடூ அவரது அழகான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை இறகுகளுக்கு பெயர் பெற்றவர், ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார், அது தலைமுறைகளை கவர்ந்தது. 1933 இல் பிறந்து 1934 இல் மிருகக்காட்சிசாலையில் வந்து, அதன் அசல் விலங்கு சேகரிப்பில் கடைசியாக எஞ்சியிருக்கும் உறுப்பினரானார். எட்டு தசாப்தங்களில் மிருகக்காட்சிசாலையின் மாற்றத்தை அவர் கண்டார். கூக்கி பல தசாப்த கால மாற்றங்களில் வாழ்ந்தது மட்டுமல்லாமல், உலகமாக மாறுவதன் மூலம் வரலாற்றையும் உருவாக்கினார் பழமையான வாழ்க்கை கிளி83 வயதை எட்டுகிறது. அவரது கதை கவனிப்பு, சகிப்புத்தன்மை மற்றும் மனிதகுலத்துடன் ஒரு தனித்துவமான பிணைப்பு.குக்கீகளின் பயணம்: ஆஸ்திரேலியாவில் பிறந்தார், அமெரிக்காவில் வளர்ந்தார்குக்கீ ஜூன் 30, 1933 அன்று சிட்னியின் தரோங்கா மிருகக்காட்சிசாலையில் குஞ்சு பொரிக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து,…
புதுடெல்லி: பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே, இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, விசா நிறுத்தம் உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது. இந்த…
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் அடிப்படை தேவைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், கோயில் நிலத்தில் அனுமதியின்றி பணி செய்வதா என கோயில் நிர்வாகம் முட்டிக் கொள்வதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. மலைமீது சுயம்பு மூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், மலைக்கோயிலில் இருந்து கீழே வரும் பாதையில் கல்மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த இந்த ஒரு கல்மண்டபம் குடவரை சிற்பமாக அமைந்துள்ளது. மேலும், மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலில் பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.…
சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் நேற்று 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,225-க்கும், ஒரு பவுன் ரூ.65,800-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கிராமுக்கு ரூ.65 என பவுனுக்கு ரூ.520…
தனது ஆட்சியின் மிக ஆழமான தனிப்பட்ட தருணங்களில் ஒன்றில், மன்னர் சார்லஸ் யாரும் கேட்க விரும்பாத வார்த்தைகளைக் கேட்பது போல் உண்மையில் உணர்ந்ததைப் பற்றி திறந்து வைத்திருக்கிறார்: “உங்களுக்கு புற்றுநோய் உள்ளது.” அவரது செய்தி, ஒரு வரவேற்பின் போது பகிரப்பட்டது புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் பக்கிங்ஹாம் அரண்மனையில், ஒரு அரச அறிக்கை மட்டுமல்ல – இது பாதிப்பு, வலிமை மற்றும் நன்றியுணர்வின் மனித வெளிப்பாடு.பிப்ரவரி 2024 இல் அறியப்படாத புற்றுநோயால் கண்டறியப்பட்ட ராஜா தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். ஆனால் அவரது உடல்நலத்தின் விவரங்களை விட, அவரது உணர்ச்சி நேர்மையே பலரைத் தொட்டது. அவர் சிம்மாசனத்திலிருந்து பேசவில்லை; அவர் அனுபவத்திலிருந்து பேசினார் – பயத்தை அறிந்த ஒருவர், காத்திருப்பைப் புரிந்துகொள்கிறார், உதவி வழங்கும் ஒவ்வொரு கையையும் மதிக்கிறார்.புற்றுநோயைக் கண்டறிவதன் யதார்த்தத்தை விவரிக்க “அச்சுறுத்தும்” மற்றும் “பயமுறுத்தும்” என்ற சொற்களைப் பயன்படுத்துவதிலிருந்து ராஜா பின்வாங்கவில்லை. அது அவரைப் பற்றி மட்டுமல்ல. இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும்…
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புதன்கிழமை அன்று சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 8-வது தோல்வியாக அமைந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே தரப்பில் சாம் கர்ரன் 88 ரன்கள் விளாசினார். டெலவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹாட்-ட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சஹல். ஒரு கட்டத்தில் சென்னை அணி 200+ ரன்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19-வது…
இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையிலே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி குறித்து பாகிஸ்தான் நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கானின் கருத்து கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆவேசமாக அவர் தெரிவித்த கருத்து வைரலாகி உளள்து. “அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள். முதல் அஸானை (பிரார்த்தனை) பாகிஸ்தான் ராணுவ தலைவர் வழங்குவார். மேலும், சீக்கிய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானை தாக்க மாட்டார்கள். ஏனெனில், பாகிஸ்தான் குறு நானாக்கின் மண். இந்தியா அச்சுறுத்தினாலும் சீக்கியர்கள் தக்க மாட்டார்கள்” என அவர் கூறியுள்ளார். “சிந்து நதி எங்களுடையது… அது எங்களுடையதாகவே இருக்கும். ஒன்று எங்கள் தண்ணீர் அதில் பாயும், அல்லது இந்தியர்களின் ரத்தம் பாயும்” என முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அண்மையில்…
