சென்னை: கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; நெஞ்சம் கலங்கினேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Author: admin
மும்பை: பணவீக்கத்தை விட பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தான் அதிக கவலை கொண்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று 6% ஆக குறைத்தது. ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 6.25% இலிருந்து 6% ஆகக் குறைத்துள்ளது. புதிய…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனிருந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வரும் வேளையில் இத்தலைவர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் பரந்த வலையமைப்பை இவ்வமைப்பு கொண்டுள்ளது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாதுகாப்பு தொடர்பான உயர்நிலை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு…
லண்டன்: பஹல்காம் தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவும் இங்கிலாந்து உதவும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமீஸ் ஃபல்கனர் பேசியதாவது: பஹல்காம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் முழு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க உதவவும் இங்கிலாந்து முக்கிய பங்காற்றும். இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் இங்கிலாந்து தெருக்களில் எதிரொலிக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கவலையளிக்கிறது. தாக்குதல் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த அங்கீத் லவ்(41) மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த திங்கட் கிழமை நீதிமன்றத்தில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், அவை நடவடிக்கைகள் குறித்தும், திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டும், கட்சியில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டியும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் வலிமையுடன் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை நான் ஓய்வதில்லை. தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பலன் தரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்தந்த துறை சார்பிலான மானியக் கோரிக்கைகளுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்றுள்ளது.…
புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபரின் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள வர்த்தக போர் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்ககத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது, கடந்த 2017 டிசம்பரிலிருந்து ஒப்பிடும்போது இரண்டாவது மிகப்பெரிய அளவாகும். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், தங்க கையிருப்பில் 7-வது இடத்திலும் இந்தியா உள்ளது. உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் அளவு 6.86 சதவீதத்திலிருந்து (2021) 11.35 சதவீதமாக (2024) உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கரன்சி மதிப்பை நிலை நிறுத்தவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், பொருளாதார பாதிப்புகளை தாங்கவும் அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது மிக அவசியமானதாக உள்ளது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் 653 டன்னாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின்…
புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் அளிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு, இந்திய ரசிகர் ஒருவர் தண்ணீர் பாட்டில்களை அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகை ஹனியா அமீருக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த பாட்டில்களை கூரியர் சேவை மூலம் அனுப்பியுள்ளார். சிந்து நதி நீர், நடிகைக்கு இனி கிடைக்காது என்பதால் அவர் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இந்த தண்ணீர் பாட்டில்களை அவர் அனுப்பியுள்ளார். அந்த ரசிகர்கள்…
மதுரை: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையில்லா சான்றிதழ் கோரி திருநங்கை தொடர்ந்துள்ள வழக்கில் வணிக வரித் துறை செயலாளர் பதிலாளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் திருநங்கை. பல்வேறு இடர்பாடுகளை கடந்து, பி ஏ படித்து முடித்தேன். கடந்த 2019 ல் குரூப்-I தேர்வில் வெற்றி பெற்றேன். பிஎஸ்டிஎம் ( தமிழ் வழி கல்வி) சலுகை அடிப்படையில் பணி ஒதுக்கீடு பெற்று வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எனது பிஎஸ்டிஎம் சான்றிதழ் செல்லாது என்று 2024-ல் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து என் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் என்னை பணி இடைநீக்கம் செய்தனர். இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்கு கடந்த 1-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வுக்கு…
சென்னை: இந்தியாவின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் ஒன்றான சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதற்கு, இணக்கமாக வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான 12 மாத டெபாசிட் வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும், 24 மற்றும் 36 மாதங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும் இருக்கும். இதைப்போலவே, பிற நபர்களுக்கு 12 மாத டெபாசிட் வட்டி விகிதம் 7.20 சதவீதமாகவும், 24 மற்றும் 36 மாத டெபாசிட்டிற்கான வட்டி 7.50 சதவீதமாகவும் இருக்கும். மாற்றியமைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் மே 1-ம் (இன்று) தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு சுந்தரம் பைனான்ஸ் கூறியுள்ளது.
புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில், முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 3 பேர், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு பணியிலிருந்து (ஐஎப்எஸ்) ஓய்வு பெற்ற ஒருவர் என 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ராணுவத்தின் தெற்கு பிரிவு முன்னாள் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங், இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு முன்னாள் கமாண்டர் ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா மற்றும் ரியர் அட்மிரல் மான்ட்டி கன்னா ஆகியோர் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜிவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் மற்றும் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரி…
