மதுரை: “மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும்,” என இந்து முண்ணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22-ல் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வேல்களுக்கு வண்டியூரில் உள்ள மாநாட்டு அலுவலகத்தில் இன்று (ஜூன் 10) காலை கணபதி ஹோமம் மற்றும் வேல் பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் கண்காட்சி 13-ம் தேதி தொடங்குகிறது. அறுபடை வீடுகள் அமைப்பதற்காக முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்து முருகனின் வேல்…
Author: admin
கஞ்சீவரம் புடவைகள் தூய மல்பெரி பட்டு நூலிலிருந்து நெய்யப்படுகின்றன, மேலும் பாலிவுட் திவாஸ் அவர்களின் எல்லா ஆடம்பரங்களிலும் அவற்றைக் காட்டிலும் விரும்புகிறது.
பிரஸ்ஸல்ஸ்: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தபோது, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஆழமாக இருந்தால், நாங்கள் பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரச கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் மிகவும் மூழ்கியிருக்கும் ஒரு நாடு. அதுதான் இங்கே முழுப் பிரச்சினை. பயங்கரவாதத்துக்கான உறுதிப்பாட்டை பதற்றத்தின் ஆதாரம் என்று நீங்கள் அழைத்தால், அது நிச்சயமாக பதற்றம்தான்” என்று அவர் கூறினார். மேலும், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படைத் தாக்குதல்கள், பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்பை கடுமையாக சீரழித்துவிட்டன. வெளிப்படையாக சொன்னால் என்னைப் பொறுத்தவரை, ரஃபேல்…
சிவகங்கை: “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்,” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் பிறந்ததினத்தை யொட்டி, இன்று (ஜூன் 10) அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் பாஜக முக்கியமான கட்சி. தமிழகத்தில் ஜெயலலிதா கட்சி தலைமையில் தான் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதாக அமித் ஷா கூறியுள்ளார். அதன்படி, கூட்டணி அமைந்துள்ளது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். பாஜக கூட்டணியை பலப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். வருகிற தேர்தலில் நாங்கள் திமுகவை வீழ்த்தப் போகிறோம் என்ற…
முடி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், எரிச்சலூட்டும் முடி வீழ்ச்சியை நிறுத்துவதற்கும் இயற்கையான வழியைத் தேடுகிறீர்களானால், ரோஸ்மேரி எண்ணெய் உங்கள் புதிய சிறந்த நண்பராக இருக்கலாம். இந்த மூலிகை ஹீரோ பாரம்பரிய வைத்தியங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது, இப்போது இது அழகு உலகில் ஒரு பெரிய மறுபிரவேசம் செய்கிறது. நீங்கள் மெலிந்து, உதிர்தல், அல்லது உங்கள் தலைமுடி வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளர விரும்பினாலும், இந்த DIY ரோஸ்மேரி எண்ணெய் சீரம் முயற்சிப்பது மதிப்பு. போனஸ்? வீட்டில் செய்வது மிகவும் எளிதானது! முடி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், அந்த எரிச்சலூட்டும் முடி வீழ்ச்சியை நிறுத்துவதற்கும் நீங்கள் இயற்கையான வழியைத் தேடுகிறீர்களானால், ரோஸ்மேரி எண்ணெய் உங்கள் புதிய சிறந்த நண்பராக இருக்கலாம். இந்த மூலிகை ஹீரோ பாரம்பரிய வைத்தியங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது, இப்போது இது அழகு உலகில் ஒரு பெரிய மறுபிரவேசம் செய்கிறது. நீங்கள் மெலிந்து, உதிர்தல், அல்லது உங்கள் தலைமுடி வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளர விரும்பினாலும்,…
புதுடெல்லி: மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதுகிறேன். அரசியலமைப்பு ரீதியாக துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு மிகவும் முக்கியம். இரண்டு பதவிகளும் காலியாகும்போது, மற்றொருவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகர் தேர்வுக்கான நடைமுறையைப் போன்றதே. இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பவர் சபாநாயகர் என்பது மட்டுமே. முதல் மக்களவை முதல்…
புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சாட்ஜிபிடி’ முன்னிலை வகிக்கிறது. மிக விரைவாக உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை சென்றடைந்த செயலி இது. இந்நிலையில், ‘சாட்ஜிபிடி’ தற்போது உலக அளவில் இயங்கவில்லை. இதனால் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவையை அணுக முடியவில்லை. ‘சாட்ஜிபிடி’ இயங்காதது தொடர்பான புகார்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிக அளவில் பதிவாகி உள்ளன. நிகழ்நேர கண்காணிப்பு தளமான Downdetector-இன் படி, ‘சாட்ஜிபிடி’ முடக்கம் குறித்த பயனர் புகார்கள் பிற்பகல் 3:00 மணியளவில் வேகமாக அதிகரித்தன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்து வந்த சுமார் 88 சதவீத புகார்கள், சாட்பாட் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதாக பதிவாகி உள்ளது. 8 சதவீதம் பேர் மொபைல் செயலியில் இயங்கவில்லை…
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த…
வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சிதறி ஓடினர். சில மணித்துளிகள் களேபரத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பள்ளியில் உள்ள கழிவறைகளில் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம்…
சென்னை: தொழிலதிபருக்கு எதிரான வங்கிக் கடன் வழக்கு விசாரணையை ஓராண்டில் முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்படாத நிலையில், வெளிநாட்டுக் குடிமகனை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது. தொழிலதிபர் சிவசங்கரன் இந்தியாவில் ஐடிபிஐ வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றார். அந்த பணத்தை சட்டவிரோதமாக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கியில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மேல் விசாரணையும் நடத்தி வருகிறது. அதன்படி, செஷல்ஸ் நாட்டின் குடிமகனான கார்த்திக் பார்த்திபன் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி,…
