Author: admin

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 12,748 வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை அதிக செலவில் கட்டப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் டெல்லி காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) கண்டறிந்துள்ளது. இதையடுத்து அப்போதைய துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது ஏசிபி ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த ஊழலில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பிறரின் பங்கை கண்டறிய விரிவான விசாரணையை ஏசிபி தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறியதாவது: 34 ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலோர் ஆம் ஆத்மி…

Read More

கராச்சி: வங்கதேச கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெற்ற இந்த தொடரை வங்கதேச அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறது வங்கதேச அணி. அங்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடுகிறது. இந்தத் தொடர் முதலில் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களை கொண்டவையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் முழுமையாக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடராக நடத்த பாகிஸ்தான்…

Read More

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாருன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய இயக்குநர் ஒருவர், கோல்டன் குளோப் விருதின் சிறந்த இயக்குநர் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விருது கிடைக்கவில்லை. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராக பாயல் கபாடியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஜூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பிரெஞ்சு மற்றும் ஆங்கில நடிகை ஜூலியட் பினோஜ் தலைமையில், அமெரிக்க நடிகை ஹாலே பெரி, நடிகர் ஜெர்மி ஸ்ட்ராங்க்,…

Read More

தருமபுரி: தருமபுரியில் நடந்த தேமுதிக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையில் நேற்று தேமுதிக-வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் ஆகியோர் வரவேற்றனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக சுதீஷ் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் பிரேமலதா மேடையில் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு தேமுதிக வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நாட்டின் எல்லைப்பகுதிகளை மத்திய அரசு…

Read More

மும்பை: ட்ரம்ப் தொடங்கிவைத்த வரி யுத்தம், பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது. அத்துடன், உலக வர்த்தகத்தையே உலுக்கி வருகிறது. அதேபோல், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு பதிலடியாக வரி உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார போரை துவக்கி வைத்துள்ளது. இந்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கமாக, ‘ரெசஷன்’ எனப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் வலுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகள் வரலாறு காணாத தடுமாற்றத்தைக் கண்டுள்ளன. இந்தப் போக்கு, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. சென்செக்ஸ் சரிவும் மீட்சியும்:…

Read More

பெற்றோருக்குரியது முடிவில்லாத மகிழ்ச்சியுடன் வருகிறது. டிஜிட்டல் யுகத்தில், கூகிள் புதிய பெற்றோர் மற்றும் பெற்றோருக்குரிய வழிகாட்டியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் பராமரிப்பாளர்களை ஒன்றிணைக்கும் மிகவும் கேட்கப்பட்ட சில கேள்விகளைப் பாருங்கள்.

Read More

நெல்லூர்: ஆந்திராவில் கார் விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் நாராயணா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 6 மாணவர்கள், புச்சிரெட்டி பாளையம் பகுதியில் நேற்று காலையில் நடைபெற்ற தங்கள் நண்பனின் தங்கை நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர். பிறகு இவர்கள் மீண்டும் கல்லூரி விடுதிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நெல்லூர்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாதிரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் வீட்டில் இருந்த வெங்கடரமணய்யா (50) என்பவர் அதே உயிரிழந்தார். மாணவர்கள் 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நெல்லூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நெல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read More

லண்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சீசனில் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்தார். ஆனால் இந்த சீசனில் அவர், கவுண்டி போட்டியில் விளையாட உள்ளதால் ஆலோசகராக செயல்படவில்லை. இதனால் 36 வயதான டிம் சவுதி இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்படக்கூடும் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிம் சவுதி கடந்த டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 391 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இங்கிலாந்து அணி கோடைகால சீசனை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட இந்த தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி,…

Read More

நடிகர் அஜித்குமார், டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-விடம் இருந்து பத்மபூஷண் விருதைப் பெற்றார். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். அவரை ரசிகர்கள் திரண்டு வரவேற்றனர். இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித்குமார் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த செய்தி பரபரப்பானது. அவர் துபாய் செல்ல இருப்பதால் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கெடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அக்கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிகளை அகற்ற கெடு விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, பொது இடங்களில் உள்ள திமுக கொடிகளை அகற்றுமாறு, அக்கட்சி நிர்வாகிகளை தலைமை கேட்டுக் கொண்டது. அக்கட்சியினரும் பொது இடங்களில் உள்ள கொடிகளை அகற்றி வருகின்றனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.…

Read More