இந்தூர்: மேகாலயாவில் தேனிலவு கொலை வழக்கில் கைதான ராஜ் குஷ்வாகாவின் குடும்பத்தினர், அவரை அப்பாவி என்றும், இந்த வழக்கில் சதி காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவரது தாய் சன்னி தேவி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராஜா ரகுவன்சியின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த என் மகன் (ராஜ் குஷ்வாகா) கதறி அழுதான். அவனுக்கு நாங்கள் ஆறுதல் சொல்லியும் அழுகையை நிறுத்தவில்லை. எனது மகன் அப்பாவி. அவன் இந்த கொலை வழக்கில் திட்டமிட்ட சதி காரணமாக சிக்க வைக்கப்பட்டுள்ளான். எப்படி 20 வயதுடைய ஒருவரால் இப்படியொரு குற்றச் சம்பவத்தை செய்ய முடியும். எனது கணவரின் மறைவுக்கு பிறகு என் மகன் தான் குடும்பத்தை கவனித்து வருகிறான்” என தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் ராஜ் குஷ்வாகா. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனத்தின் குடும்பத்துக்கு சொந்தமான ஃபர்னிச்சர் ஷீட் தொழிலில் கணக்காளராக பணிபுரிந்து…
Author: admin
மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடம்பிடித்தனர். மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா ஜூன் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் பல்வேறு வாகனங்களில் வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து 9-ம் நாளான இன்று (ஜூன் 10) தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் வியூக சுந்தரரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 6.15 மணியளவில் பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடம்பிடித்து இழுத்தனர். பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வலம் வந்து காலை 8.30…
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்துக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி `மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் சென்னை ஈசிஆரில் கடந்த 2023 ஆக.12 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2023 செப்.10 அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏற்கெனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதே டிக்கெட்டுடன் இந்நிகழ்ச்சிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த கட்டணத்துடன் ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் பெற்ற அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், “ஆக.12 நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும், செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக…
நாமக்கல்: “கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பில் இரவு வான் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியுள்ளது,” என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். நாமக்கல் முதலைப்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் ரூ. 1.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி, நாமக்கல் முதலைப்பட்டி நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மலைவாழ் மக்களுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்குக் கல்வி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால், அவர்களது குழந்தைகளுக்கு ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. உண்டு, உறைவிடப் பள்ளிகளில் குறைபாடுகள் இருந்தால் கண்டறிந்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.…
இது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது, சாட்ஜிப்ட் விரும்பத்தகாத மற்றும் அறிவிக்கப்படாத விருந்தினரைப் போல இருந்தது, தொழில்நுட்ப ஆர்வலர்களைத் தவிர வேறு யாரும் உண்மையில் அக்கறை காட்டவில்லை. பல ஆண்டுகளாக, AI இயங்குதளம் அனைவரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. பணி மின்னஞ்சல்கள் முதல் தனிப்பட்ட செய்திகள் வரை, உறவு ஆலோசனை முதல் குடும்ப வாதங்கள் வரை, மக்கள் சாட்ஜ்ட்டைக் கேட்க வேண்டாம். க்ரோக் மற்றும் ஜெமினி போன்ற பிற AI தளங்கள் உலகிற்குள் நுழைந்தாலும், அவர்களால் தங்கள் முன்னோடிகளைப் போல மக்களின் இதயங்களை கைப்பற்ற முடியவில்லை.ஆகவே, மக்கள் பெரும்பாலும் நாள் முழுவதும் பயன்படுத்தும் AI தளம் குறைந்துவிட்டபோது, நிச்சயமாக அழிவை ஏற்படுத்தியது, ஆனால் நிறைய இலவச நேரமும் இருந்தது. டவுன்டெக்டரின் கூற்றுப்படி, அறிக்கையிடப்பட்ட சிக்கல்கள் 88% SATGPT இன் வலை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன, 8% பயன்பாட்டுடன் தொடர்புடையவை மற்றும் 3% API உடன் தொடர்புடையவை.இதன் பொருள் சமூக ஊடகங்களின்…
சிவகங்கை: விடுதி மாணவர்கள் ஏஐ தொழில்நுட்பம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது: “தமிழகத்தில் புதிதாக 40 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தில் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரி விடுதிகள் தொடங்கப்பட்டன. நடப்பாண்டில் 10 விடுதிகள் திறக்கப்பட உள்ளன. எங்குமே கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டே இல்லை. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை விடுதி மாணவர்கள் ஆன்லைனில் படிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விடுதி மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் கற்கவும், வைஃபை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள நூலகத்தை…
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் முருகன் தற்போது நிகழ்வுகளில் வித்தியாசமான தொப்பி அணிந்துள்ளதற்கான காரணத்தை தெரிவித்தார். பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அடையாளமாக ஒவ்வொரு பொருளுண்டு. அந்தவகையில் மத்திய அமைச்சராக உள்ள முருகன் தற்போது வித்தியாசமான தொப்பி அணிந்து வருகிறார். புதுச்சேரிக்கு இரு நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற அவரிடம் இந்த வித்தியாச தொப்பி அணியும் காரணம் பற்றி கேட்டதற்கு, “கோயிலுக்கு முடி காணிக்கை தந்தேன். முடி வளரும் வரை தொப்பி அணிய சொன்னார்கள். அப்போது எனது நண்பர் இந்த தொப்பி தந்தார். அதை அணிந்து வருகிறேன். நல்லா இருக்குதானே” என்றார். அதற்கு அங்கிருந்த அமைச்சர் நமச்சிவாயம், “நேதாஜி ஸ்டைலில் இருக்கிறது,” என்றார்.
உலகளவில் மிகவும் ஆக்ரோஷமான புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோய் உள்ளது, பொதுவாக சிகிச்சையளிக்க கடினமாக இருக்கும்போது அதன் மேம்பட்ட கட்டங்களில் கண்டறியப்படுகிறது. தாமதத்திற்கான ஒரு முக்கிய விளக்கம் என்னவென்றால், ஆரம்ப அறிகுறிகள் மென்மையானவை, குறிப்பிட்டவை அல்ல, சிறிய நோய்கள் அல்லது வாழ்க்கை முறை காரணிகளுடன் எளிதில் குழப்பமடைகின்றன. தனிநபர்கள் பொதுவாக புறக்கணிக்கும் நுரையீரல் புற்றுநோயின் ஆறு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு-ஆரம்ப கட்டத்தில் அதன் அங்கீகாரம் உயிர் காக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.தொடர்ச்சியான இருமல்நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால் அல்லது மாசுபாடு அல்லது செயலற்ற புகைப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தால் 2-3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான இருமல் ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அத்தகைய இருமல் அமைதியாகவும் படிப்படியாகவும் தீவிரத்தை அதிகரிக்கும். இது உலர்ந்த அல்லது இடைப்பட்டதாக இருந்தாலும், புற்றுநோய் உள்ளிட்ட நுரையீரல் நிலைமைகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல் ஒன்றாகும்.மூச்சுத் திணறல்பலர் மூச்சுத் திணறலை வயதானவரின் அடையாளமாகவோ அல்லது “வடிவத்திற்கு வெளியே” இருக்கவோ பார்க்கிறார்கள். படிக்கட்டுகளில்…
திண்டிவனம்: பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் பாலுவை, சமூக நீதி பேரவைத் தலைவர் பதவியில் இருந்து கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கம் செய்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் பலமுறை முயற்சித்தும், முழு உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 5-ம் தேதி காலை ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, சென்னையில் உள்ள மகள் வீட்டில் 3 நாட்களாக ராமதாஸ் முகாமிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு திண்டிவனம் அடுத்த தைலாபுரத்துக்கு திரும்பிய ராமதாஸ், தனது வழக்கமான அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார். அன்புமணியின் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் திலகபாமா உட்பட 45 மாவட்ட நிர்வாகிகளை ஏற்கெனவே ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கியிருந்தார். இந்நிலையில், சென்னையில் அன்புமணி…
டேராடூன்: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டுக் கொன்றனர். நாம் அவர்களின் ‘தர்மா’வை கேட்கவில்லை. மாறாக, அவர்களின் கர்மாவை (செயல்) பார்த்து பதிலடி கொடுத்தோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பிரதமரின் தலைமையில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதி குறித்தும் நாங்கள் போதுமான கவனம் செலுத்தியிருந்தாலும், எல்லை மற்றும் மலைப்பகுதி மாநிலங்களின் வளர்ச்சியில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதற்குக் காரணம், நமது எல்லை மாநிலங்கள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானவை. நான் நாட்டின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளேன். இன்று பாதுகாப்பு அமைச்சராக சேவை செய்கிறேன். கடந்த 11 ஆண்டுகளில், உள்நாட்டுப் பாதுகாப்பாக இருந்தாலும், வெளிப்புற எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு என்பதாக இருந்தாலும், பிரதமர் மோடியின் தலைமையிலான நமது அரசு தேசிய பாதுகாப்பு வட்டத்தை இறுக்கி பலப்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான…
