ஹதராபாத்: ஸ்வர்னாந்திரா தொலைநோக்கு திட்டம் 2047-ன் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கான வழியைக் காண முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவின் விரைவான வளர்ச்சிக்காக ஸ்வர்னாந்திரா தொலை நோக்கு திட்டம் 2047, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம், பால்வளம், மீன்வளம், தோட்டக்கலை, தொழில்துறை, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சேவைத் துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு, கல்வி, திறன் மேம்பாடு என 10 முக்கிய துறைகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. இத்துறைகளில் வளர்ச்சிக்கான வழிகளை கண்டறிய முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக் குழு அமைத்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது. இதில் துணைத் தலைவராக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ) தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி, அபோலோ…
Author: admin
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் சய்த சேப்பாக் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. ஆஷிக் 38 பந்துகளில், 54 ரன்களும் விஜய் சங்கர் 24 பந்துகளில், 47 ரன்களும், ஸ்வப்னில் சிங் 14 பந்துகளில், 45 ரன்களும் கேப்டன் பாபா அபராஜித் 29 பந்துகளில், 41 ரன்களும் விளாசினர். நெல்லை அணி சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 213 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 51, முகமது அட்னான் கான் 48 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபிஷேக் தன்வார் 3…
சென்னை: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ம் இடம் பெற்ற குகேஷ்ஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பகிர்வில், “நார்வே கிளா சிக்கல் செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த குகேஷை நினைத்து பெருமைப்படுகிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் சதுரங்க எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. உலக சாம்பியனாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தனது திறமையால், அறிவுக்கூர்மையால், கடின உழைப்பால் 3-வது இடம் பிடித்திருப்பதால் இந்தியர்கள் பெருமை…
சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை சட்டரீதியாக வழங்கி கடமையை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் இருந்து இந்த நிதியை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகியான வே.ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை…
புதுடெல்லி: ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் நவீனத்துவம், தன்னிறைவை பெறுவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். நேற்று முன்தினத்துடன் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தளத்தில் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகம் குறித்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியுள்ளதாவது: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதிலும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 11), நாளையும் பெரும்பாலான இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 15, 16-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 13-ம் தேதி கோவை…
புதுடெல்லி: இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக எஸ்பிஐ-யின் மதிப்பீட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் வறுமை விகிதம் 5.3 சதவீதமாக இருந்தது என உலக வங்கி மதிப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் 2024-ல் வறுமை விகிதம் அதனுடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதமாக கணிசமாக குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது தற்போதைய மதிப்பீடுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. இவ்வாறு எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வறுமை கோட்டுக்கான வரையறையை உலக வங்கி அண்மையில் மாற்றியமைத்தது. அதன்படி, நாளொன்றுக்கு 2.15 டாலரிலிருந்து 3 டாலராக அந்த வரையறையை திருத்தியது. இது, உலகளவில் தீவிர வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை 22.6 கோடி அதிகரித்தது. இந்த நிலையில்…
புதுடெல்லி: 2034-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டமாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்துவதாகும். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களின் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பதே இந்தத் திட்டமாகும். குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து இதுதொடர்பான மசோதா, மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் வகையில் மத்திய பாஜக…
சென்னை: பள்ளிகளில் செயல்படும் பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென மாநிலக் கல்விக்கொள்கை குழுவினர் பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை- 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகள் கேட்டறிந்து சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர். அதன்பின் 10 மாதங்கள் கழித்தே மாநிலக் கல்விக் கொள்கை வரைவறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர். அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் சேர்க்கைக்கு…
சென்னை: சென்னையில் தங்கியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேற்றும் சந்தித்துப் பேசினார். யாருடன் கூட்டணி என்பது 2 அல்லது 3 மாதங்களில் தெரியவரும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பின்னணியில் சில தினங்களுக்கு முன்பு தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணியும் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் சந்தித்து பேசினர். இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேபோல், கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்த முகுந்தனும் ராமதாஸை சந்தித்தார். இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நல்ல செய்திகள் விரைவில் வரும். அரசியலுக்கு வயது கிடையாது. கருணாநிதி 94 வயது வரை அரசியலில் இருந்தார். அவர் சக்கர நாற்காலியில் இருந்து முதல்வராக இருந்தார். எல்லா தலைவர்களையும்…
