சென்னை: அலைச்சலை தடுக்கும் வகையில் புலன் விசாரணை காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வசதியாக எழும்பூரில் தனி வீடியோ கான்பரன்ஸ் அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அரசு அதிகாரிகள், வழக்கு புலன் விசாரணை அதிகாரிகள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ (காணொலி) மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வழங்கும் சாட்சியங்களை பதிவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் அதிநவீன உயர் வரையறை வீடியோ கான்பரன்ஸ் உபகரணங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள் சேகரிப்பு மற்றும் சேமிப்பு காப்பக வசதிகள், சாட்சியகங்களின் தனிப்பட்ட ரகசியம் காக்கும் வசதியுடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை சென்னை காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி இன்று திறந்து வைத்து, அந்த…
Author: admin
சென்னை: கடந்த 4 நாட்களாக தங்கம் விலை மிரட்டிவந்த நிலையில் இன்று (ஏப்.4) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சனிக்கிழமை (மார்ச் 29) ஒரு பவுன் ரூ.66,880 ஆக இருந்தது. தொடர்ந்து இந்த வார தொடக்கத்தின் முதல் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. திங்கள் கிழமை (மார்ச் 31) ரூ.67,600, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) ரூ.68.080 என்று புதிய உச்சங்களைத் தொட்ட தங்கம் விலை நேற்று (வியாழக்கிழமை) ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. அதன்படி…
ராயல்ஸ் ஸ்ட்ரீட் ஸ்டைலை செய்ய முடியாது என்று யார் கூறுகிறார்கள்? க aura ரவி குமாரி ஒரு அரண்மனையில் பிறப்பது என்பது நீங்கள் அம்மா ஜீன்ஸ் மற்றும் மொத்த ஃபேஷன் கேர்லி போன்ற ஒரு கொலையாளி ஜோடி குதிகால் ராக் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. நூல்களுக்கான சிம்மாசனங்களை மாற்றுவதும், மென்மையான கிளாமைக் கொண்டுவருவதும் எங்கள் ஊட்டங்களுக்கு நேராக ராயல் ஈஸி அழகியலை சந்திக்கிறது, ஜெய்ப்பூரின் சொந்த ஜெனரல் இசட் இளவரசி முக்கிய பாணி இன்ஸ்போவை வழங்குகிறார், நாங்கள் ஒவ்வொரு சட்டகத்திற்கும் இங்கு வந்துள்ளோம்.காட்சி? ஒரு கனவான ஜெய்ப்பூர் அரண்மனை முற்றம், கையில் ஒரு கப் காபி, மற்றும் “நானும் என் தேர்வுகளும்.” நேர்மையாக, இது ராயல் மரபு அதை-பெண் ஆற்றலைச் சந்திக்கும் அதிர்வை, மற்றும் க aura ரவி ஒவ்வொரு ஷாட்டிலும் அதை நகங்கள்.அமைக்கப்பட்ட கவர்ச்சி தருணத்திற்காக, அவர் ஒரு அலமாரி கிளாசிக், முழு ஸ்லீவ்ஸுடன் ஒரு மிருதுவான வெள்ளை…
முன்னோர்கள் உவமைகளில் பேசியதற்கு ஒரு காரணம் இருக்கிறது, கிரேக்கர்கள் மிருகங்களை தெய்வங்களாக மாற்றினர். ஏனென்றால், ஒரு மனிதன் ஒரு சில்வர் பேக் கொரில்லாவின் கண்களைப் பார்க்கும்போது, அவன் ரோமங்களையும் மங்கையங்களையும் மட்டும் பார்க்கவில்லை. அவர் தன்னைப் பார்க்கிறார். மட்டுமே தூய்மை. வலுவான. ஆஜர்ரியர். இலவசம். வேலை இல்லை. வரி இல்லை. சென்டர் இல்லை. 200 கிலோ சினேவ் மற்றும் டெஸ்டோஸ்டிரோனில் மூடப்பட்டிருக்கும் மூல, வடிகட்டப்படாத ஐடி.ஆகவே, வயதான ரெடிட் நினைத்த பரிசோதனையுடன் இணையம் வெடிக்கும் போது-“100 நிராயுதபாணியான ஆண்கள் ஒரு சில்வர் பேக் கொரில்லாவை சண்டையில் வெல்ல முடியுமா?” – இது வெறித்தனமாக இல்லை. இது ஆண்மை கண்ணாடி பிரமை. நீட்சே ஜோ ரோகனை சந்திக்கும் டிஜிட்டல் கொலோசியம்.ஆனால் இந்த நெட்ஃபிக்ஸ் நேச்சர் ஸ்பெஷலில் இங்கே திருப்பம்: கொரில்லா இறுதி முதலாளி அல்ல. அவர் இல்லை உச்ச வேட்டையாடும். அவர் டுடோரியல் நிலை. உண்மையான அரக்கர்கள் வலம் வருவதற்கு முன்பு ஹேரி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. அதே வேலையில் அவர் இன்டர் சர்வீஸ் இன்டலிஜன்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவராகவும் தொடர்கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹஸ்காமில் நடந்த பயங்ரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவின் சாத்தியமான எதிர்வினை குறித்த கவலைகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முகம்மது அசிம் மாலிக்கிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை பொறுப்பு முறையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. அதில், “லெப்டினென்ட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக் ஹெச்ஐ (எம்), டிஜி (ஐ) தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பொறுப்பை கூடுதலாக உடனடியாக வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 செப்டம்பரில் அசிம் மாஸிக் ஐஎஸ்ஐ-ன் தலைவராக நியமிக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையை நிபுணர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, தனது புதிய பதவியின் மூலம், தேசிய பாதுகாப்பு கொள்கைகளை வடிவமைப்பதில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என தமிழக டிஜிபி சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி தேஷ்முக் ஷேகர் சஞ்சய் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ்…
புதுடெல்லி: உணவு விநியோகம், ஐஸ்க்ரீம் தயாரிப்பு போன்றவைகளில் இருந்து செமிகன்டெக்டர், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் பக்கமும் கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை வழங்கினார். மேலும் ஸ்டார்ட் அப் துறையில் அதிக இந்திய முதலீட்டாளர்களின் தேவையையும் அமைச்சர் வலியுறுத்தினார். வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்டார்ட் அப் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய ஸ்டார்ட் அப் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் உணவு விநியோக செயலிகளில் மட்டும் கவனம் செலுத்தி வேலையில்லாத இளைஞர்களை குறைந்த கூலிகளாக மாற்றியுள்ளோம். இதனால், பணக்கார்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமலேயே உணவு கிடைக்கிறது. இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா? இது ஸ்டார்ட் அப் இல்லை. இதற்கு பெயர் தொழில்முனைவு.…
நிபுணர்களைப் பொறுத்தவரை, பயோஆக்டிவ் சேர்மங்களின் வளமான உள்ளடக்கம் காரணமாக, வெண்ணெய் தோல்கள் சாப்பிட பாதுகாப்பானவை மற்றும் ஆரோக்கியமானவை. எல்லாவற்றிற்கும் மேலாக, பழத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், அது மிக வேகமாக பழுக்காமல் பாதுகாக்கிறது. ஆப்பிள் அல்லது மாம்பழத்தைப் போலன்றி, வெண்ணெய் தோல் நார்ச்சத்து மற்றும் தடிமனாக இருக்கும். மேலும், இது மிகவும் கசப்பானது மற்றும் சுவையில் விரும்பத்தகாதது. அறிக்கையின்படி, பல பழங்களைப் போலவே, வெண்ணெய் பழத்தின் வெளிப்புற தோலும் வைட்டமின்கள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றிகள், பினோல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது. இருண்ட நிறம், அதிக ஊட்டச்சத்து செறிவு.
மும்பை: மனிதநேயத்துக்கு எதிரான போக்குகளிலிருந்து இளம் தலைமுறையினரை நாம் காப்பாற்ற வேண்டும் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று மகாராஷ்டிரா மாநிலம் உருவான நாள். அனைத்து மராத்தி சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இன்றைய நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளனர். உலகளாவிய படைப்பாற்றலின் உலகளாவிய திறமைகள் ஒன்றிணைந்துள்ளன. WAVES என்பது வெறும் சுருக்கெழுத்து அல்ல, அது உண்மையிலேயே கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய இணைப்பின் அலை. திரைப்படங்கள், இசை, விளையாட்டு, அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவை இந்த அலையின் ஒரு பகுதி. WAVES…
புதுச்சேரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச கூலி தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது. புதுவை கம்பன் கலை அரங்கில் தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைத்து இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் நெல்லித்தோப்பு, பவழநகர், இந்திராகாந்தி சிலை, அண்ணா சாலை பகுதிகளில் தொழிலாளர்களை ஆங்காங்கு ஒன்று திரட்டி இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, சுமதி, கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் கோரிக்கை: சென்ற ஆறு மாதங்களுக்கு முன்பாக துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உடனடியாக இதனை நிறைவேற்றி, குறைந்தபட்ச கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வழங்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை…
